Topic : Sabbath

மேலும் தாம் செய்ய நினைத்திருந்த வேலைகளையெல்லாம் செய்து விட்டு அந்நாளில் ஓய்வெடுத்தார். எனவே, அவ்வேழாம் நாளை ஆசிர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்.

Genesis 2:3

ஒய்வு நாளைப் பரிசுத்தமாய்க் கொண்டாட நினைவு கூர்வாயாக.
ஆறு நாளும் நீ வேலை செய்து உன் தொழிலுக்கடுத்த காரியங்களை எல்லாம் நடத்துவாயாக.
எழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவரின் ஓய்வு நாளாய் இருப்பதனால், அன்று நீயாவது, உன் மகன் மகளாவது, உன் வேலைக்காரன் வேலைக்காரியாவது, உன் மிருகங்கள் அல்லது உன் வாயில்களில் இருக்கிற அந்நியனாவது யாதொரு வேலையும் செய்ய வெண்டாம்.
ஏனென்றால், ஆண்டவர் ஆறு நாளில் விண்ணையும் மண்ணையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து, ஏழாம் நாளிலே ஓய்வு கொண்டமையால், ஆண்டவர் ஓய்வு நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்.

Exodus 20:8-11

உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டபடியே ஓய்வு நாளைப் புனிதமுள்ளதாக நினைக்கக்கடவாய்.
ஆறுநாளும் உழைத்து உன் வேலையெல்லாம் செய்வாய்.
ஏழாம் நாளோ சாபத்; அதாவது: உன் கடவுளாகிய ஆண்டவருடைய ஓய்வு நாளாம். அதிலே நீயேனும், உன் புதல்வன் புதல்வியேனும், வேலைக்காரன் வேலைக்காரியேனும், மாடு கழுதை வேறெந்த மிருகமேனும், உன் வாயிலின் உள்ளேயிருக்கிற அந்நியனேனும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ இளைப்பாறுவதுபோல் உன் வேலைக்காரனும் வேலைக்காரியும் இளைப்பாற வேண்டும்.

Deuteronomy 5:12-14

ஓய்வுநாளில் விளைச்சல்வழியே அவர் செல்லும்பொழுது சீடர் நடந்துகொண்டே கதிர்களைக் கொய்யத் தொடங்கினர்.
பரிசேயரோ அவரை நோக்கி, "பாரும், ஓய்வுநாளில் செய்யத்தகாததை ஏன் செய்கிறார்கள்?" என்றனர்.
அதற்கு அவர், "தாவீதும் அவரோடு இருந்தவர்களும் உணவின்றிப் பசியாயிருந்தபொழுது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் ஒருபோதும் வாசித்ததில்லையோ?
அபியத்தார் தலைமைக்குருவாய் இருந்தபொழுது அவர் கடவுளின் இல்லத்தில் நுழைந்து, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத காணிக்கை அப்பங்களைத் தாம் உண்டதுமன்றி, கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தாரே" என்றார்.
அவர் அவர்களை நோக்கி, "ஓய்வுநாள் இருப்பது மனிதனுக்காக: மனிதன் இருப்பது ஓய்வுநாளுக்காக அன்று.
ஆதலால் மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்" என்றார்.

Mark 2:23-28

ஓய்வுநாளில் அவர் செபக்கூடம் ஒன்றில் போதித்துக்கொண்டிருந்தார்.
பதினெட்டு ஆண்டுகளாகப் பேயால் நோயுற்றிருந்த பெண் ஒருத்தி அங்கிருந்தாள். அவள் நிமிர்ந்து பார்க்கவும் முடியாத ஒரு கூனி.
அவளைக் கண்ட இயேசு, தம்மிடம் அழைத்து, அவளிடம், "அம்மா, உன் நோயினின்று நீ விடுபட்டாய்" என்று , தம் கைகளை அவள்மீது வைத்தார்.
உடனே அவள் நிமிர்ந்து, கடவுளை மகிமைப்படுத்தலானாள்.
இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைப் பார்த்து, செபக்கூடத்தலைவன் கோபவெறி கொண்டு, கூட்டத்தை நோக்கி, "வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.
ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக, "வெளிவேடக்காரே, ஓய்வு நாளில் உங்களுள் ஒவ்வொருவனும் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய்த் தண்ணீர்காட்டுவதில்லையோ?
ஆபிரகாமின் மகளாகிய இவளைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டிவைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவளை ஓய்வுநாளிலே விடுவிப்பது ஆகாத செயலா?" என்றார்.
என்றதும், அவருடைய எதிரிகள் அனைவரும் வெட்கிப்போயினர். அவர் செய்த மாட்சிக்குரிய செயல்களை எல்லாம் பார்த்து, கூட்டம் அனைத்தும் மகிழ்ந்தது.

Luke 13:10-17

ஆட்டைக்காட்டிலும் மனிதன் எவ்வளவோ மேலானவன்! ஆதலால், ஓய்வுநாளில் நன்மை செய்வது முறையே" என்றார்.

Matthew 12:12

ஆண்டவராகிய நாமே உங்கள் இறைவன்; நம் கட்டளைகளின்படி நடந்து, நம் நீதி முறைமைகளைக் கைக்கொண்டு அவற்றைக் கடைப்பிடியுங்கள்.
நாமே ஆண்டவராகிய உங்கள் இறைவன் என்று நீங்கள் அறியும்படி, நம் ஒய்வு நாட்களைப் பரிசுத்தப்படுத்தி, அவற்றை நமக்கும் உங்களுக்கும் அடையாளமாகக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தோம்.

Ezekiel 20:19-20

ஓய்வு நாள் ஒழுங்குகளை உதறித் தள்ளாமல், நமது பரிசுத்த நாளில் உன் விருப்பம் போல் செய்யாமலிருந்தால்; ஓய்வு நாளை இன்ப நாள் என்றும், ஆண்டவருடைய பரிசுத்த நாளை மகிமையான நாள் என்றும் போற்றினால்; அன்று உன் மனம் போன போக்குப்படி செல்லாமல், உன் விருப்பம் போலச் செய்யாமல், வீண் பேச்சுகளைப் பேசாமல் அந் நாளை மதித்து நடந்தால்,
அப்போது ஆண்டவரில் பேரின்பம் அடைவாய், நாட்டின் உயரமான இடங்களிலெல்லாம் உன்னை வெற்றிப் பவனியாய்க் கொண்டு செல்வோம்; உன் தந்தையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்திலிருந்து உனக்கு உணவு வழங்குவோம்; ஆண்டவரே இதைத் திருவாய் மலர்ந்தார்."

Isaiah 58:13-14

ஒருநாள் மற்றொரு நாளைவிடச் சிறந்ததென ஒருவன் கருதுகிறான்; ஒருவன் எல்லா நாளையும் ஒரு படியாகவே எண்ணுகிறான். ஒவ்வொருவனும் தன் மனத்தில் செய்துகொண்ட உறுதியான முடிவின்படி நடக்கட்டும்.

Romans 14:5

எனவே, உணவு பானம் குறித்தோ, திருவிழா அமாவாசை ஓய்வுநாள் குறித்தோ உங்களை யாரும் குறைகூற விடாதீர்கள்.
இவையெல்லாம் வர இருந்தவற்றின் வெறும் நிழலே. உண்மைப் பொருளோ கிறிஸ்துவின் உடல் தான்.

Colossians 2:16-17

ஆறு நாள் வேலை செய்வீர்கள்; ஏழாம் நாள் சாபத் என்னும் ஓய்வு நாளாகையால் பரிசுத்தமுள்ளதென்று சொல்லப்படும். அதிலே ஒரு வேலையும் செய்ய வேண்டாம். அது உங்கள் உறைவிடங்களிலெல்லாம் ஆண்டவருடைய ஓய்வு நாளாய் இருக்கும்.

Leviticus 23:3

நீயும் எகிப்திலே அடிமையாய் இருந்தாயென்றும், அங்கிருந்து உன் கடவுளாகிய ஆண்டவர் உன்னை வலுத்தகையாலும் ஓங்கிய புயத்தாலும் புறப்படச் செய்தாரென்றும் நினைத்துக்கொள். அது பற்றியே ஓய்வு நாளை அனுசரிக்கும்படி உனக்குக் கட்டளையிட்டார்.

Deuteronomy 5:15


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |