19. ஆண்டவராகிய நாமே உங்கள் இறைவன்; நம் கட்டளைகளின்படி நடந்து, நம் நீதி முறைமைகளைக் கைக்கொண்டு அவற்றைக் கடைப்பிடியுங்கள்.
20. நாமே ஆண்டவராகிய உங்கள் இறைவன் என்று நீங்கள் அறியும்படி, நம் ஒய்வு நாட்களைப் பரிசுத்தப்படுத்தி, அவற்றை நமக்கும் உங்களுக்கும் அடையாளமாகக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தோம்.