12. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கட்டளையிட்டபடியே ஓய்வு நாளைப் புனிதமுள்ளதாக நினைக்கக்கடவாய்.
13. ஆறுநாளும் உழைத்து உன் வேலையெல்லாம் செய்வாய்.
14. ஏழாம் நாளோ சாபத்; அதாவது: உன் கடவுளாகிய ஆண்டவருடைய ஓய்வு நாளாம். அதிலே நீயேனும், உன் புதல்வன் புதல்வியேனும், வேலைக்காரன் வேலைக்காரியேனும், மாடு கழுதை வேறெந்த மிருகமேனும், உன் வாயிலின் உள்ளேயிருக்கிற அந்நியனேனும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ இளைப்பாறுவதுபோல் உன் வேலைக்காரனும் வேலைக்காரியும் இளைப்பாற வேண்டும்.