8. ஒய்வு நாளைப் பரிசுத்தமாய்க் கொண்டாட நினைவு கூர்வாயாக.
9. ஆறு நாளும் நீ வேலை செய்து உன் தொழிலுக்கடுத்த காரியங்களை எல்லாம் நடத்துவாயாக.
10. எழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவரின் ஓய்வு நாளாய் இருப்பதனால், அன்று நீயாவது, உன் மகன் மகளாவது, உன் வேலைக்காரன் வேலைக்காரியாவது, உன் மிருகங்கள் அல்லது உன் வாயில்களில் இருக்கிற அந்நியனாவது யாதொரு வேலையும் செய்ய வெண்டாம்.
11. ஏனென்றால், ஆண்டவர் ஆறு நாளில் விண்ணையும் மண்ணையும் அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து, ஏழாம் நாளிலே ஓய்வு கொண்டமையால், ஆண்டவர் ஓய்வு நாளை ஆசீர்வதித்துப் பரிசுத்தமாக்கினார்.