23. ஓய்வுநாளில் விளைச்சல்வழியே அவர் செல்லும்பொழுது சீடர் நடந்துகொண்டே கதிர்களைக் கொய்யத் தொடங்கினர்.
24. பரிசேயரோ அவரை நோக்கி, "பாரும், ஓய்வுநாளில் செய்யத்தகாததை ஏன் செய்கிறார்கள்?" என்றனர்.
25. அதற்கு அவர், "தாவீதும் அவரோடு இருந்தவர்களும் உணவின்றிப் பசியாயிருந்தபொழுது, அவர் என்ன செய்தார் என்று நீங்கள் ஒருபோதும் வாசித்ததில்லையோ?
26. அபியத்தார் தலைமைக்குருவாய் இருந்தபொழுது அவர் கடவுளின் இல்லத்தில் நுழைந்து, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத காணிக்கை அப்பங்களைத் தாம் உண்டதுமன்றி, கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தாரே" என்றார்.
27. அவர் அவர்களை நோக்கி, "ஓய்வுநாள் இருப்பது மனிதனுக்காக: மனிதன் இருப்பது ஓய்வுநாளுக்காக அன்று.
28. ஆதலால் மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவர்" என்றார்.