Topic : Forgiveness

குற்றத்தை மறைக்கிறவன் சிநேகத்தைத் தேடுகிறான்; கோள் சொல்லுகிறவனோ ஐக்கியமுள்ளவர் களைப் பிரிக்கிறான்.

Proverbs 17:9

ஆனால் ஒருவருக்கொருவர் தயவாயும், இரக்கமாயுமிருந்து, கிறீஸ்துநாதரில் சர்வேசுரன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னித்துக்கொள்ளுங்கள். (கொலோ. 3:12, 13; மத். 6:14.)

Ephesians 4:32

ஏனெனில் நீங்கள் மனிதருடைய குற்றங்களை அவர்களுக்கு மன்னிப்பீர்க ளேயாகில், உங்களுக்கும் உங்கள் பரம் பிதா உங்கள் குற்றங்களை மன்னிப்பார். (மத். 18:35; மாற். 11:25: சர்வப். 28:3-5.)

Matthew 6:14

ஒருவரொருவரைத் தாங்கி, எவ னுக்காவது மற்றொருவன்மேல் முறைப் பாடிருந்தால், அதைப் பொறுத்துக் கொண்டு, ஆண்டவர் உங்களை மன்னித் ததுபோல் நீங்களும் உங்களுக்குள் ஒருவ ரொருவரை மன்னித்துக்கொள்ளுங்கள்.

Colossians 3:13

நமது நாமத்தினாலே மந்திரிக் கப்பட்ட நமது சனங்கள் மனந்திரும் பிச் செபம் பண்ணி, நமது முகத்தைத் தேடித் தங்கள் அக்கிரமமான வழி களை விட்டுத் தபம் பண்ணினால், அப்பொழுது நாம் பரலோகத்தில் இருந்து அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளி, அவர்கள் பாவங்களை மன்னித்து அவர்களுடைய தேசம் சேமமாயிருக்கச் செய்வோம்.

2 Chronicles 7:14

ஒருவரையும் குற்றவாளிகளாகத் தீர்க்காதேயுங்கள்; நீங்களும் குற்றவா ளிகளாகத் தீர்க்கப்படமாட்டீர்கள். எவன்மேலும் ஆக்கினைத் தீர்வையிடா தேயுங்கள். உங்கள்மேலும் ஆக்கினைத் தீர்வையிடமாட்டார்கள். மன்னியுங் கள், நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். (மத். 7:1.)

Luke 6:37

ஓ! தேவனே! உமது காணி யாட்சியில் மீதியானவருடைய அக்கிர மத்தைத் துடைத்து, பாவத்தையும் மறுக்கிற உமக்கு நிகரானவர் யார் (எனவும் அவர்கள் சொல்லுவார்கள்; ஆம், ஆண்டவர் கிருபையைச் செய்ய விருப்பமுடையவர் ஆதலின் இனி தம் கோபத்தைத் (தம்மவர் கள்மேல்) பாராட்டார் (எரே. 10:6; அப்.நட. 10:43).

Micah 7:18

அதிலிருந்த பிரசைளை இரா சாக்களுடைய தொகை தஸ்திரத் திலே ஆண்டவரே சொல்லுவார்.

Psalms 86:5

தன் பாவங்களை மறைக்கிற வன் வாழவேமாட்டான்; ஆனால் அவைகளைச் சங்கீர்த்தனம் பண்ணி விட்டுவிடுகிறவன் இரக்கத்தைப் பெறுவான்.

Proverbs 28:13

ஆகையால் சகோதர பூமான்க ளே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவ மன்னிப்பும், மோயீசனுடைய நியாயப் பிரமாணத்தில் உங்களை நீதிமான்க ளாக்கக்கூடாத சகல விஷயங்களிலும் நின்று (விடுதலையும்) அறிவிக்கப்படு கிறதென்று உங்களுக்குத் தெரிந்திருக் கக்கடவது.
இவரில் விசுவாசம் வைக்கிறஎவனும் நீதிமானாக்கப்படுகிறான். (உரோ. 3:26.)

Acts 13:38-39

நம்முடைய பாவங்களுக்கு அவரே பிராயச்சித்தப்பலியாய் இருக்கிறார். நம்முடைய பாவங்களுக்காக மாத்திர மல்ல, சர்வலோக பாவங்களுக்காகவும் அவர் பிராயச்சித்தப்பலியாமே.

1 John 2:2

அவருடைய வரப்பிரசாத பெருக்கத்தின்படியே இவருடைய இரத்தத்தால் நமக்கு இவரிடத்தில் பாவப் பொறுத்தலாகிய இரட்சணியம் உண்டாயிருக்கிறது.

Ephesians 1:7

உங்கள் வஸ்திரங்களை (மாத்திரம்) அல்ல; உங்கள் இருதயங் களையும் (மனஸ்தாபத்தால்) கிழித்து, உங்கள் தேவனாகிய ஆண்டவரிடந் திரும்புங்கள்; ஏனெனில், அவர் நல்ல வர், இரக்கமுள்ளவர், பொறுமை யுள்ளவர், மிகுந்த தயையுடையவர், தீமைமீது பச்சாத்தாபங் கொள்பவர் (சங். 85:5).

Joel 2:13

இராயப்பர் அவர்களை நோக்கி : நீங்கள் தவஞ்செய்து, உங்கள் பாவங்களின் மன்னிப்புக்காக உங்களில் ஒவ்வொருவனும் சேசுக்கிறீஸ்துநாதரு டைய நாமத்தினாலே ஞானஸ்நானம் பெறக்கடவான்; அப்பொழுது இஸ்பி ரீத்துசாந்துவின் வரத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்.

Acts 2:38

அவர் இரக்கத்திலும் நீதியிலும் பிரியப்படுகிறார்; ஆண்டவருடைய இரக்கத்தால் பூமி நிரம்பியிருக் கின்றது.

Psalms 32:5

நீங்கள் ஜெபம்பண்ண நிற்கும் போது, யாதொருவன்மேல் உங்களுக்கு ஏதேனும் மனத்தாங்கலிருந்தால், பரலோ கத்திலிருக்கிற உங்கள் பிதாவானவர் உங்களுடைய பாவங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, நீங்களும் அவனுக்கு மன்னியுங்கள்.(மத். 6:14; 18:35; லூக்.11:4)

Mark 11:25

எங்கள் கடன்காரருக்கு நாங் கள் பொறுக்குமாப்போல எங்கள் கடன் களை எங்களுக்குப் பொறும்.

Matthew 6:12

அப்பொழுது இராயப்பர் அவரி டத்தில் அணுகி: சுவாமி! என் சகோ தரன் எனக்கு விரோதமாய் எத்தனை விசை குற்றஞ்செய்வான், நானும் அவனுக்கு மன்னிப்பேன்? ஏழுதர மட்டுமோ ? என்றார். (லூக். 17:4.)
அதற்கு சேசுநாதர்: ஏழுதர மாத்திரமல்ல, ஏழெழுபதுதரம் மட்டு மென்று உனக்குச் சொல்லுகிறேன். * 22. ஏழு எழுபது தரம்:- அதாவது, குற்றத்தை இத்தனை விசைதான் மன்னிக்கவேண்டு மென்பதற்குக் கணக்கில்லையென்று அர்த்தமாம்.

Matthew 18:21-22

அதன்பின்பு இஸ்ராயேலின் தேவனாகிய கர்த்தருடைய பாஸ்கா வைக் கொண்டாட வேண்டுமென் றும், எருசலேமிலிருக்கிற கர்த்தரு டைய ஆலயத்திற்கு வர வேண்டு மென்றும் எசெக்கியாஸ் இஸ்ராயேல் தேசம் யூதா தேசம் எவ்விடத்தும் ஆட்களை அனுப்பினதும் தவிர எப்பிராயீம் மனாசே கோத்திரர் களுக்கும் நிருபங்களை எழுதி அனுப் பினான்.
இராசாவும் பிரபுக்களும் சபை யார் யாவரும் பெரிய சங்கமாகக்கூடி ஆலோசனை பண்ணினார்கள். அந்தச் சங்கத்திலே பாஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்க வேண்டுமென்று தீர்மானம் பண்ணி னார்கள்.
உள்ளபடி அந்தப் பண்டிகை யைக் கொண்டாட வேண்டிய திட்டமான காலத்தில் ஜனங்கள் அதை ஆசரிக்கக்கூடாமல் போயிற்று. காரணம்: ஊழியம் பண்ணத்தக்க ஆசாரியர்கள் தங்களைப் பரிசுத்தப் படுத்தினதுமில்லை, ஜனங்கள் எருச லேமில் இன்னும் கூடி வந்ததுமில் லையாம்.
மேற்சொல்லிய தீர்மானம் இராசாவின் பார்வைக்கு சமஸ்த சபையார் பார்வைக்கும் நியாயமாம் என்று காணப்பட்டது.
அவர்கள் இன்னொரு காரியத் தைத் தீர்த்துப் போட்டார்கள்; அது என்னவெனில்: இஸ்ராயேலின் தேவ னாகிய கர்த்தருடைய பாஸ்காவை எருசலேமில்தானே ஜனங்கள் வந்து கொண்டாட வேண்டுமென்று சொல் லிப் பெற்சபே முதல் தான் வரைக்கு முள்ள இஸ்ராயேல் தேசமெங்கும் ஆட்களை அனுப்பும்படி திட்டம் பண்ணினார்கள்; காரணம்; கற்ப னையை மீறி வெகு வெகு பேர்கள் (வெகு காலமாய்) பாஸ்காவை ஆசரிக்கவில்லை என்பதாம்.
அப்படியே இராசாவும் பிரபுக் களும் கொடுத்த தாக்கீதை அஞ்சல் காரர் வாங்கி, இஸ்ராயேல் தேசம் யூதா சேம் எவ்விடத்தும் போய் இராசா கட்டளையிட்ட பிரகாரம் பறைசாற்றி: இஸ்ராயேல் புத்திரரே! அபிரகாம், ஈசாக்கு, இஸ்ராயேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த் தரிடத்திற்குத் திரும்புங்கள்; திரும்பி னால் அசீரியருடைய இராசாக்களின் கைக்குத் தப்பிப் பிழைத்த உங்க ளுக்கு அவர் துணையாயிருக்கத் திரும்புவார்.
உங்கள் பிதாக்களும் உங்கள் சகோதரர்களும் தங்கள் பிதாக்களும் உங்கள் சகோதரர்களும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டு விட்டபடியால் அன்றோ அவர் அவர்களை மரணத்திற்கு ஒப்பு வித்தார்; அது உங்களுக்குத் தெரிந்த காரியம்தானே. நீங்கள் அவர்களைப் போல நடவாதேயுங்கள்.
உங்கள் பிதாக்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தினார் களே, நீங்கள் அந்தப்படி செய்யாமல் கர்த்தரோடு உடன்பட்டு அவர் என் றைக்கும் பரிசுத்தமாக்கின அவரு டைய திரு ஸ்தலத்திற்குத் திரும்பி வந்து உங்கள் பிதாக்களின் தேவனா கிய அவருக்கு நல்ல ஊழியம் பண்ணு வீர்களேயாகில், கர்த்தருடைய உக்கி ரமமான கோபமானது உங்களை விட்டு அகன்றுபோம்.
ஆம்! கர்த்தரிடத்திற்குத் திரும் பினால் உங்கள் சகோதரரும், உங்கள் குமாரரும் தங்களைச் சிறைப்பிடித் துக்கொண்டுபோன எஜமான்களுக்கு முன்பாக இரக்கம் பெற்று இந்தத் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள். உள்ளபடி கிருபை தயாபமுள்ளவரா யிருக்கிறார் உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் அவரிடத்திற்குத் திரும்புவீர்களானால், அவரும் பாரா முகமாயிருக்கப் போகிறதில்லை என்று சொல்லி விளம்பரம் பண்ணி னார்கள்.
அஞ்சற்காரர் அவ்விதமே போய் எப்பீராயீம் தேசத்திலும், மனாசே தேசத்திலும், சபுலோன் தேசத்திலும் ஊர் ஊராகச் சீக்கிர மாய்த் திரிந்திருக்கையில் அத்தேசங் களிலிருந்த ஜனங்கள் அவர்களைத் திட்டியும் ஏசியும் பரிகாசம் பண்ணி னார்கள்.
ஆனாலும் ஆசரிலும், மனா சேயிலும், சபுலோனிலும் சிற்சில குடிகள் அஞ்சற்காரர் சொல்லைக் கேட்டு எருசலேமுக்கு வந்தார்கள்.
யூதாவிலேயோ கர்த்தருடைய கரமானது ஜனங்களை ஒருமனமா யிருக்கச் செய்தது. ஆனபடியால் அவர்கள் கர்த்தருடைய சித்தத்திற்கு அடங்கினவர்களாய் இராசாவும் பிரபுக்களும் கட்டளையிட்ட பிரகாரமே செய்துவந்தார்கள்.
அப்படியிருக்க, வெகு வெகு ஜனங்கள் எருசலேமுக்கு வந்து இரண் டாம் மாதத்திலே புளிப்பில்லாத அப்பப் பண்டிகையை ஆசரித்தார் கள்.
பின்பு அவர்கள் எழுந்து, எருச லேமிலுண்டான (மற்றுமுள்ள) பலி பீடங்களையும், விக்கிரகங்களுக்குத் தூபங் காட்டும் நானாவித தூபக் கலசங்களையும் அழித்துக் கெதிரோன் ஆற்றிலே எறிந்து போட்டார்கள்.
இப்படி இரண்டாம் மாதம் பதினாலாம் தேதியிலே பாஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள். பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர் களும், லேவியர்களும் கர்த்தருடைய ஆலயத்தில் சர்வாங்கத் தகனப் பலிகளையும், செலுத்தி வந்தார்கள்.
அவர்கள் தேவனுடைய மனுஷனாகிய மோயீசனின் நியாயப் பிரமாணத்திற்கேற்ற விதமாய்த் தங்கள் முறைமையின்படியே தம் தம் ஸ்தானத்தில் நின்றார்கள். குருக்களோ லேவியர்களின் கையிலிருந்து இரத் தத்தை வாங்கித் தெளித்தார்கள்.
சபையிலே மிகுதியான ஜனங் கள் தீட்டுப்பட்டிருந்தார்கள். ஆனது பற்றித் தங்களைப் பரிசுத்தப்படுத்தா திருந்தவர்களுக்காக லேவியர்கள் பாஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்து வந்தார்கள்.
ஆனது பற்றி எப்பிராயீம், மனாசே, இசாக்கார், சபுலோன் கோத்திரத்தாரில் மிகுதியான பேர் கள் இனனும் தீட்டுப்பட்டிருந்த போதிலும் பாஸ்காவைத் தின்றார் கள். அது எழுதியிருக்கிற நியாயப் பிரமாணத்திற்கு விரோதமாயிருந் தது வாஸ்தவம். ஆனால் எசெக்கி யாஸ் அவர்களுக்காகக் கர்த்தரிடம வேண்டிக்கொண்டு: கர்த்தர் நல்லவ ராயிருக்கிறபடியால்,
எவர்கள் முழு மனதோடு தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடி வருகிறார்களோ அவர்களுக்கு அவர் தயவுபண்ணு வார். அவர்கள் சுத்தாங்கம் அடையா திருந்தபோதிலும் அவர் அதைக் குற்றமாகப் பாராட்டாமல் மன்னிப் பாரென்று சொன்னான்.
கர்த்தர் எசேக்கியாஸுடைய விண்ணப்பத்தை அங்கீகரித்து ஜனங் களின் மேல் கோபங்கொள்ள வில்லை.
அப்படியே எருசலேமிலே இருந்த இஸ்ராயேல் புத்திரர் புளிப் பில்லாத அப்பப் பண்டிகையை ஏழு நாளளவும் மகா ஆனந்தத்தோடு ஆடம்பரமாகக் கொண்டாடினார் கள். லேவியர்களும் ஆசாரியர்களும் தம் தம் ஊழியத்திற்கேற்ற தேவ வாத்தியங்களை வாசித்து எம்மேரை யாய்க் கர்த்தரை ஸ்துதித்து வந்தார் களோ, அவர்களுக்கு அம்மேரை யாகவே செய்தார்கள்.
கர்த்தருக்கடுத்த காரியங் களை உத்தம விதமாய்க் கண்டுணரும் சகல லேவியர்களோடு எசேக்கியாஸ் பட்சமாய்ப் பேசினான். ஆனதுபற்றி அவர்கள் பண்டிகையின் ஏழு நாளள வும் புசித்துச் சமாதானப் பலி மிருகங் களைப் பலியிட்டுத் தங்கள் பிதாக் களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரம் பண்ணிவந்தார்கள்.
பின்பு ஜனங்கள் எல்லாரும் வேறு ஏழு நாளளவும் கொண்டாட் டம் பண்ணலாமென்று யோசனை பண்ணி அவ்விதமே மற்ற ஏழு நாள் திருவிழாவையும் ஆனந்தத்தோடு கொண்டாடினார்கள்.
உள்ளபடி யூதாவின் இராசா வாகிய எசேக்கியாஸ் சபைக்கு ஆயிரம் காளைகளையும், ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்திருந்தான். அதுவுமல்லாமல் பிரபுக்களும் ஜனங் களுக்கு ஆயிரம் காளைகளையும், பதினாயிரம் ஆடுகளையும் கொடுத் திருந்தார்கள். ஆனதுபற்றி ஆசாரிய ரில் வெகுவெகுபேர்கள் தங்களைச் சுத்தம்பண்ணினார்கள்.
யூதாவின் சபை அனைத்தும் ஆசாரியரும் லேவியரும் இஸ்ராயே லிலிருந்து வந்த ஜனங்கள் அனை வரும் யூதாவிலும் இஸ்ராயேலிலும் குடியிருந்து யூதர்களுடைய வேதத் தைப் பற்றிக் கொண்டிருந்த அந்நியர் களும் சந்தோஷ சாகரத்தில் அமிழ்ந் திருந்தார்கள்.
அப்படியே எருசலேமில் கொண்டாடப்பட்ட திருவிழா மகா சிறப்பாயிருந்தது. இஸ்ராயேலின் இராசாவாகிய தாவீதின் குமார னாகிய சலொமோனுடைய நாட்கள் துவக்கி அப்படிப்பட்ட ஆடம்பர மான சடங்குகள் நடந்ததில்லை.
கடைசியிலே ஆசாரியர்களும் லேவியர்களும் எழுந்து நின்று ஜனக் கும்பலை ஆசீர்வதித்தார்கள். அவர் களுடைய விண்ணப்பம் பரலோக மென்கிற திருஸ்தல மட்டும் எட்டிற்று.

2 Chronicles 30:9b

ஆகையால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்படி மனஸ்தாபப்பட்டு மனந்திரும்புங்கள்.

Acts 3:19

உங்களில் ஒருவன் வியாதியாயிருக்கிறானோ, அவன் சபையின் குருக்களை வரவழைப்பானாக. அவர்கள் ஆண்டவருடைய நாமத்தினாலே அவனைத் தைலத்தால் பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணுவார்கள். (மாற். 6:13.) * 14. வியாதிக்காரர்கள் தங்களுக்காக வேண்டிக்கொள்ளவும், தங்கள்பேரில் தைலத்தைப் பூசவும் திருச்சபையின் குருமார்களை வரவழைக்கக் கற்பிக்கிறார். இது கத்தோலிக்கு உரோமன் திருச்சபையிலே எக்காலத்திலும் நடந்துவருகிற ஏழு தேவதிரவிய அநுமானங்களில் ஒன்றாகிய அவஸ்தைபூசுதல் என்றறிக.
அப்போது விசுவாசமுள்ள ஜெபம் வியாதிக்காரனை இரட்சிக்கும். ஆண்டவரும் அவனுடைய வருத்தத்தை இலகுவாக்குவார். அன்றியும் அவன் பாவங்களோடிருந்தால் அவைகள் அவனுக்கு மன்னிக்கப்படும். (மாற். 16:18.)

James 5:14-15

ஆகிலும் இந்த அறியாமையின் காலங்களைச் சர்வேசுரன் பாராமுகமாய்ப் பார்த்து, இப்போது எங்கும் எல்லா மனிதரும் தவஞ்செய்யும் படிக்கு அறிவிக்கிறார்.

Acts 17:30

ஒரு ஸ்திரீ தன் புருஷனால் தள்ளுண்டு அவனை விட்டகன்று வேறொருவனை மணம் புரிவாளா கில் (முந்தினவன்) அவளிடந் திரு ம்பி வருவானோ? அந்த ஸ்திரீ அசங் கியமுந் தீண்டலும் பட்டுப்போகவில் லையா? என்று நாடோடியாய்ச் சொல் வார்கள்; ( நாமோ அவ்வாறல்ல,) நீ அநேக சோர நாயகர்களோடு சோரம் போயிருந்தபோதிலும் நம்மிடந் திரும்பிவா; நாம் உன்னை ஏற்றுக் கொள்ளுவோம் என்கிறார் கர்த்தர்.
உன் கண்களை ஏறெடுத்துப் பார்; நீ விபசாரம் பண்ணாதவிடம் எது? ஒதுக்கில் உட்கார்ந்திருக்குங் கள்ளனைப்போல் (உன் சோர நாயகர் களுக்கு) எதிர்பார்த்த வண்ணமே வழிகளில் உட்கார்ந்துகொண்டிருந் தாய்; உன் விபசாரங்களாலும், தீச் செயல்களாலும் பூமியை அசங்கியப் படுத்தினாய் அன்றோ?
மழை பெய்யாமல் போனதற் குக் காரணமென்ன? பின்மாரி வருஷி யாமற் போவானேன்? உன் விபசாரத் தால் உன் முகம் விலைமாதரின் முகம் போலும் உனக்கு நாணமேயில்லை.
இப்போதேனும் நீ நம்மைத் தந்தையென்றும், உனது கன்னிமை யின் பதியென்றுஞ் சொல்.
"" நீர் என்றென்றைக்கும் உமது கோபத்தைப் பாராட்டுவீரா? கடைசி வரையில் இந்நிலைமையிலேயே இருப்பீரா?'' என்று சொன்ன பின்னர் இதோ உன்னால் இயன்றவரையில் தின்மைகளையே புரிந்தாய்.
யோசியாஸ் என்னும் அரசன் நாட்களில் கர்த்தர் என்னை நோக்கி: மூர்க்க இஸ்ராயேல் (என்னும் மடந்தை) தன் இஷ்டம்போல் உயர்ந்த மலை தோறும், தழைத்த மரத்தின் அடி தோறும் போய் அங்கு வேசித்தனம் பண்ணினாள், பார்த்தாயா என்றார் (எரே.3:20).
அவள் இவையெல்லாஞ் செய்தபின்னரும், "" நம்மிடந் திரும்பி வா '' என்றோம்; ஆயினும் அவள் திரும்பினவளல்ல; பிற்பாடு மூர்க்க இஸ்ராயேல் விபசாரம் பண்ணின தால், நாம் அவளை வெறுத்துத் தள்ளி அவளுக்கு விவாக விமோசனச் சாதனங் கொடுத்ததைத் துரோகி யூதா மடந்தை பார்த்திருந்தாள்; ஆயினும் அவளது சகோதரியாகிய யூதா பயந்தவளல்ல; ஆனால் இவ ளும் போய் வேசித்தனம் பண்ணி னாள்.

தனது விபசாரப் பெருக்கத் தினால் பூமியை அசங்கியப்படுத்தி னாள்; கல்லோடும் மரத்தோடும் வேசித்தனம் பண்ணினாள்.
இவையெல்லாஞ் செய்த பிற கும் இஸ்ராயேலின் சகோதரியாகிய துரோகி யூதா மனப்பூர்வமாய் நம் மிடந் திரும்பி வரவில்லை; ஆனால் கபடமாய் வந்தாள் என்றார் ஆண்டவர்.
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இருவரையும் ஒத்திட்டுப் பார்த்தாலோ மூர்க்க இஸ்ராயேல் துரோகி யூதாவிலுங் கிரமமுள்ள வளே, ஆதலால்:
நீ வடக்கு முகமாய்த் திரும்பி வெகுவாய்க் கூவி ஆண்டவர் சொல்லு கிறதாவது: மூர்க்க இஸ்ராயேலே! நீ திரும்பி வா; வந்தால், நமது முகத் தைத் திருப்பிக்கொள்ள மாட்டோம்; ஏனெனில், நாம் பரிசுத்தர்; எப்போ துங் கோபமாயிரோம்; நாமன்றோ கர்த்தர் என்று சொல் என்றார்.
ஆயினும் உன் தேவனாகிய ஆண்டவருக்குத் துரோகமாய் நீ செய்த அக்கிரமத்தைக் கண்டுணர்; பச்சை மரத்தடிதோறும் ஒடி, அந்நிய தேவதை களோடு விபசாரம் பண்ணி நமது வார்த்தைகளைக் கேட்காமல் போனாய் என்று ஒத்துக்கொள் என்கிறார் கர்த்தர்.
பிள்ளைகளே, நாம் உங்கள் கணவன்; நீங்கள் குணப்பட்டு நம் மிடந் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர்; உங்களில் ஒருவன் ஒரு பட்டணத்தினின்றும் இருவர் ஒரு குடும்பத்தினின்றும் வந்தபோதிலும், நாம் உங்களைச் சியோனில் கொண்டு போய்ச் சேர்ப்போம்.
உங்களுக்கு நமது இருதயத் துக்கேற்ற ஆயர்களைக் கொடுப் போம்; அவர்கள் உங்களுக்கு அறிவை யும் ஞானத்தையும் ஊட்டுவார்கள்.
பிற்பாடும் நீங்கள் பூமியில் பெருகி விர்த்தியான பின்னர்: இதோ கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று சொல்லார்கள்; அது அவர்களுடைய நினைவிலும் ஞாப கத்திலும் வராது; அது சந்திக்கவும் படாது; மறுபடி செய்யவும்படாது என்கிறார் கர்த்தர்.
அக்காலத்தில் எருசலேமைக் கர்த்தருடைய சிம்மாசனம் என்பார் கள்; ஆண்டவர்பேரால் சகல சாதி சனங்களும் அவ்விடத்தில் கூடுவார் கள்; அப்போது தங்கள் கெட்ட இருதய துர்நாட்டத்தைப் பின் செல் லார்கள்.
அந்நாட்களில் யூதாவின் வீடு இஸ்ராயேலின் வீட்டுக்குப் போக, இருதரத்தாரும் வட நாட்டை விட்டு நாம் அவர்களுடைய பிதாக்களுக் குக் கொடுத்த தேசம் வந்து சேர்வார் கள்.
உன்னை எவ்வாறு நமது பிள்ளைகளோடு சேர்க்கலாமென் றும், இன்ப நாட்டை உனக்குப் பகிர்ந்து கொடுக்கலாமென்றும், எவ்வாறு சனங்களின் படைகளுக்கு உரித்தான காணியாட்சியைத் தரல Vமென்றும் யோசிக்கலானோம்; மேலும், நீ நம்மைத் தந்தை யென்பாய்; ஒரு நாளும் நம்மைப் பின்செல்லத் தவறாய் என்றோம்.
என்றாலும் ஒரு ஸ்திரீ தனது அன்பனை எவ்வாறு அவமதிக்கின் றாளோ, அவ்வாறே இஸ்ராயேல் வீடு நம்மை அவமதித்ததே என்கிறார் கர்த்தர்.
இஸ்ராயேல் மக்களின் அழு கைப் பிரலாபமுங் கூக்குரலும் வழி களில் கேட்கப்பட்டது; ஏனெனில், அவர்கள் துன்மார்க்கராகித் தங்கள் தேவனாகிய ஆண்டவரை மறந்து விட்டார்கள்.
மூர்க்க மக்களே! மனந்திரும்பி வாருங்கள்; நாம் உங்கள் மூர்க்கத் தனத்தைக் குணமாக்குவோம்; இதோ நாங்கள் உம்மிடந் திரும்பி வருகி றோம்; ஏனென்றால், நீர் எங்கள் தேவனாகிய ஆண்டவராமே.
நாங்கள் குன்றுகள்மீதும் மலை கள் பேரிலும் வணங்கிய பல தேவர் கள் பொய்த் தேவர்களே; எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் மட்டும் இஸ்ராயேலுக்கு இரட்சணி யங் கிடைப்பது உண்மையிலும் உண்மையே.
எங்கள் சிறுப முதல் எங்கள் பெரியோரின் பிரசையையும், அவர் களுடைய மாட்டு மந்தைகளையும், ஆட்டு மந்தைகளையும், அவர்களு டைய புத்திரர்களையும், புத்திரி களையும் விழுங்கிவிட்டது விக்கிரக ஆராதனை என்னும் அக்கிரமந் தானன்றோ?
எங்கள் நிற்பாக்கியத்தில் மடி வோம்; எங்கள் வெட்கக்கேடு எங்க ளைச் சுற்றிக்கொள்ளும்; ஏனெனில், எங்கள் சிறுப முதல் இந்நாள் வரையில், நாங்களும் எங்கள் முன் னோர்களும் எங்கள் தேவனாகிய கர்த்தர் சன்னிதானத்தில் தீங்கு புரிந் ததன்றி, ஆண்டவருடைய வாக்கை நாங்கள் கேளாமற் போனோமே என்பார்கள்.

Jeremiah 3:12b

அக்கிரமியானவன் தன் பாதை யையும், அநீதன் தன் துர் எண்ணங் களையும் விட்டு, ஆண்டவரிடந் திரும்பி வரட்டும்; அவர் அவனுக்குத் தயை பாராட்டுவார்; நம்தாண்டவ ரிடம் வரட்டும்; ஏனெனில், அவ னுக்கு மன்னிக்க அவர் மிகு தயை யுளராயிருக்கின்றார்.

Isaiah 55:7

ஆனாலும் உமது மிகுதியான இரக்கங்களின் நிமித்தம் நீர் அவர் களை நிர்மூலமாக்கிவிடாமலும், அவர்களைக் கைவிடாமலும் இருந் தீர்; ஏனெனில் தேவரீர் கிருபையும் தயவுமுள்ள தேவனாயிருக்கிறீர்.

Nehemiah 9:31


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |