1. ஒரு ஸ்திரீ தன் புருஷனால் தள்ளுண்டு அவனை விட்டகன்று வேறொருவனை மணம் புரிவாளா கில் (முந்தினவன்) அவளிடந் திரு ம்பி வருவானோ? அந்த ஸ்திரீ அசங் கியமுந் தீண்டலும் பட்டுப்போகவில் லையா? என்று நாடோடியாய்ச் சொல் வார்கள்; ( நாமோ அவ்வாறல்ல,) நீ அநேக சோர நாயகர்களோடு சோரம் போயிருந்தபோதிலும் நம்மிடந் திரும்பிவா; நாம் உன்னை ஏற்றுக் கொள்ளுவோம் என்கிறார் கர்த்தர்.
2. உன் கண்களை ஏறெடுத்துப் பார்; நீ விபசாரம் பண்ணாதவிடம் எது? ஒதுக்கில் உட்கார்ந்திருக்குங் கள்ளனைப்போல் (உன் சோர நாயகர் களுக்கு) எதிர்பார்த்த வண்ணமே வழிகளில் உட்கார்ந்துகொண்டிருந் தாய்; உன் விபசாரங்களாலும், தீச் செயல்களாலும் பூமியை அசங்கியப் படுத்தினாய் அன்றோ?
3. மழை பெய்யாமல் போனதற் குக் காரணமென்ன? பின்மாரி வருஷி யாமற் போவானேன்? உன் விபசாரத் தால் உன் முகம் விலைமாதரின் முகம் போலும் உனக்கு நாணமேயில்லை.
4. இப்போதேனும் நீ நம்மைத் தந்தையென்றும், உனது கன்னிமை யின் பதியென்றுஞ் சொல்.
5. "" நீர் என்றென்றைக்கும் உமது கோபத்தைப் பாராட்டுவீரா? கடைசி வரையில் இந்நிலைமையிலேயே இருப்பீரா?'' என்று சொன்ன பின்னர் இதோ உன்னால் இயன்றவரையில் தின்மைகளையே புரிந்தாய்.
6. யோசியாஸ் என்னும் அரசன் நாட்களில் கர்த்தர் என்னை நோக்கி: மூர்க்க இஸ்ராயேல் (என்னும் மடந்தை) தன் இஷ்டம்போல் உயர்ந்த மலை தோறும், தழைத்த மரத்தின் அடி தோறும் போய் அங்கு வேசித்தனம் பண்ணினாள், பார்த்தாயா என்றார் (எரே.3:20).
7. அவள் இவையெல்லாஞ் செய்தபின்னரும், "" நம்மிடந் திரும்பி வா '' என்றோம்; ஆயினும் அவள் திரும்பினவளல்ல; பிற்பாடு மூர்க்க இஸ்ராயேல் விபசாரம் பண்ணின தால், நாம் அவளை வெறுத்துத் தள்ளி அவளுக்கு விவாக விமோசனச் சாதனங் கொடுத்ததைத் துரோகி யூதா மடந்தை பார்த்திருந்தாள்; ஆயினும் அவளது சகோதரியாகிய யூதா பயந்தவளல்ல; ஆனால் இவ ளும் போய் வேசித்தனம் பண்ணி னாள்.
8.
9. தனது விபசாரப் பெருக்கத் தினால் பூமியை அசங்கியப்படுத்தி னாள்; கல்லோடும் மரத்தோடும் வேசித்தனம் பண்ணினாள்.
10. இவையெல்லாஞ் செய்த பிற கும் இஸ்ராயேலின் சகோதரியாகிய துரோகி யூதா மனப்பூர்வமாய் நம் மிடந் திரும்பி வரவில்லை; ஆனால் கபடமாய் வந்தாள் என்றார் ஆண்டவர்.
11. அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இருவரையும் ஒத்திட்டுப் பார்த்தாலோ மூர்க்க இஸ்ராயேல் துரோகி யூதாவிலுங் கிரமமுள்ள வளே, ஆதலால்:
12. நீ வடக்கு முகமாய்த் திரும்பி வெகுவாய்க் கூவி ஆண்டவர் சொல்லு கிறதாவது: மூர்க்க இஸ்ராயேலே! நீ திரும்பி வா; வந்தால், நமது முகத் தைத் திருப்பிக்கொள்ள மாட்டோம்; ஏனெனில், நாம் பரிசுத்தர்; எப்போ துங் கோபமாயிரோம்; நாமன்றோ கர்த்தர் என்று சொல் என்றார்.
13. ஆயினும் உன் தேவனாகிய ஆண்டவருக்குத் துரோகமாய் நீ செய்த அக்கிரமத்தைக் கண்டுணர்; பச்சை மரத்தடிதோறும் ஒடி, அந்நிய தேவதை களோடு விபசாரம் பண்ணி நமது வார்த்தைகளைக் கேட்காமல் போனாய் என்று ஒத்துக்கொள் என்கிறார் கர்த்தர்.
14. பிள்ளைகளே, நாம் உங்கள் கணவன்; நீங்கள் குணப்பட்டு நம் மிடந் திரும்பி வாருங்கள் என்கிறார் ஆண்டவர்; உங்களில் ஒருவன் ஒரு பட்டணத்தினின்றும் இருவர் ஒரு குடும்பத்தினின்றும் வந்தபோதிலும், நாம் உங்களைச் சியோனில் கொண்டு போய்ச் சேர்ப்போம்.
15. உங்களுக்கு நமது இருதயத் துக்கேற்ற ஆயர்களைக் கொடுப் போம்; அவர்கள் உங்களுக்கு அறிவை யும் ஞானத்தையும் ஊட்டுவார்கள்.
16. பிற்பாடும் நீங்கள் பூமியில் பெருகி விர்த்தியான பின்னர்: இதோ கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று சொல்லார்கள்; அது அவர்களுடைய நினைவிலும் ஞாப கத்திலும் வராது; அது சந்திக்கவும் படாது; மறுபடி செய்யவும்படாது என்கிறார் கர்த்தர்.
17. அக்காலத்தில் எருசலேமைக் கர்த்தருடைய சிம்மாசனம் என்பார் கள்; ஆண்டவர்பேரால் சகல சாதி சனங்களும் அவ்விடத்தில் கூடுவார் கள்; அப்போது தங்கள் கெட்ட இருதய துர்நாட்டத்தைப் பின் செல் லார்கள்.
18. அந்நாட்களில் யூதாவின் வீடு இஸ்ராயேலின் வீட்டுக்குப் போக, இருதரத்தாரும் வட நாட்டை விட்டு நாம் அவர்களுடைய பிதாக்களுக் குக் கொடுத்த தேசம் வந்து சேர்வார் கள்.
19. உன்னை எவ்வாறு நமது பிள்ளைகளோடு சேர்க்கலாமென் றும், இன்ப நாட்டை உனக்குப் பகிர்ந்து கொடுக்கலாமென்றும், எவ்வாறு சனங்களின் படைகளுக்கு உரித்தான காணியாட்சியைத் தரல Vமென்றும் யோசிக்கலானோம்; மேலும், நீ நம்மைத் தந்தை யென்பாய்; ஒரு நாளும் நம்மைப் பின்செல்லத் தவறாய் என்றோம்.
20. என்றாலும் ஒரு ஸ்திரீ தனது அன்பனை எவ்வாறு அவமதிக்கின் றாளோ, அவ்வாறே இஸ்ராயேல் வீடு நம்மை அவமதித்ததே என்கிறார் கர்த்தர்.
21. இஸ்ராயேல் மக்களின் அழு கைப் பிரலாபமுங் கூக்குரலும் வழி களில் கேட்கப்பட்டது; ஏனெனில், அவர்கள் துன்மார்க்கராகித் தங்கள் தேவனாகிய ஆண்டவரை மறந்து விட்டார்கள்.
22. மூர்க்க மக்களே! மனந்திரும்பி வாருங்கள்; நாம் உங்கள் மூர்க்கத் தனத்தைக் குணமாக்குவோம்; இதோ நாங்கள் உம்மிடந் திரும்பி வருகி றோம்; ஏனென்றால், நீர் எங்கள் தேவனாகிய ஆண்டவராமே.
23. நாங்கள் குன்றுகள்மீதும் மலை கள் பேரிலும் வணங்கிய பல தேவர் கள் பொய்த் தேவர்களே; எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் மட்டும் இஸ்ராயேலுக்கு இரட்சணி யங் கிடைப்பது உண்மையிலும் உண்மையே.
24. எங்கள் சிறுப முதல் எங்கள் பெரியோரின் பிரசையையும், அவர் களுடைய மாட்டு மந்தைகளையும், ஆட்டு மந்தைகளையும், அவர்களு டைய புத்திரர்களையும், புத்திரி களையும் விழுங்கிவிட்டது விக்கிரக ஆராதனை என்னும் அக்கிரமந் தானன்றோ?
25. எங்கள் நிற்பாக்கியத்தில் மடி வோம்; எங்கள் வெட்கக்கேடு எங்க ளைச் சுற்றிக்கொள்ளும்; ஏனெனில், எங்கள் சிறுப முதல் இந்நாள் வரையில், நாங்களும் எங்கள் முன் னோர்களும் எங்கள் தேவனாகிய கர்த்தர் சன்னிதானத்தில் தீங்கு புரிந் ததன்றி, ஆண்டவருடைய வாக்கை நாங்கள் கேளாமற் போனோமே என்பார்கள்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save