Topic : Forgiveness

குற்றத்தை மறைக்கிறவன் நட்பைத் தேடுகிறான். கோள் சொல்கிறவனோ இணைந்திருப்பவர்களைப் பிரிக்கிறான்.

Proverbs 17:9

ஒருவருக்கொருவர் பரிவும், இரக்கமும் காட்டுங்கள், கிறிஸ்துவுக்குள் கடவுள் உங்களை மன்னித்தது போல் நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.

Ephesians 4:32

"மனிதருடைய குற்றங்களை நீங்கள் மன்னிப்பீர்களாகில், உங்கள் வானகத் தந்தை உங்களையும் மன்னிப்பார்.

Matthew 6:14

ஒருவரை ஒருவர் பொறுத்துக்கொள்ளுங்கள். ஒருவர் மீது ஒருவருக்கு ஏதாவது முறையீடு இருந்தால், மன்னித்துவிடுங்கள். ஆண்டவர் உங்களை மன்னித்ததுபோல் நீங்களும் மன்னியுங்கள்.

Colossians 3:13

நமது திருப் பெயரைக் கொண்டிருக்கும் நம் மக்கள் தங்களையே தாழ்த்தி, நமது திருமுன் வந்து தங்கள் தீய வழிகளை விட்டு விலகித் தவம் புரிந்து மன்றாடினால், நாம் விண்ணிலிருந்து அவர்களது விண்ணப்பத்தைக் கேட்டருள்வோம்; அவர்களது பாவத்தை மன்னித்து, அவர்களது நாட்டை நலன்களால் நிரப்புவோம்.

2 Chronicles 7:14

தீர்ப்பிடாதீர்கள், நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். கண்டனம் செய்யாதீர்கள், கண்டனம் பெறமாட்டீர்கள்.

Luke 6:37

உமது உரிமைச் சொத்தில் எஞ்சியிருப்போரின் பாவத்தைப் பொறுத்து, அக்கிரமத்தை மன்னிக்கிற உமக்கு நிகரான கடவுள் உண்டோ? அவர் தம் கோபத்தை என்றென்றுமாய்ப் பாராட்டமாட்டார்; ஏனெனில் நிலையான அன்பில் அவர் விருப்பமுள்ளவர்.

Micah 7:18

ஏனெனில் ஆண்டவரே, நீர் நல்லவர்; கருணைமிக்கவர்: உம்மைக் கூவியழைக்கிற யாவருக்கும் மிகுந்த அருளன்பு காட்டுகிறவர்.

Psalms 86:5

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழவே மாட்டான். ஆனால், அவைகளை அறிக்கை செய்து, விட்டுவிடுகிறவன் இரக்கத்தைப் பெறுவான்.

Proverbs 28:13

இதைத் தெரிந்துகொள்ளுங்கள். மோயீசன் சட்டத்தின் வழியாக உங்கள் குற்றங்கள் எவற்றினின்றும் நீங்கள் விடுபடமுடியவில்லை.
ஆனால், விசுவசிக்கிற அனைவரும் இவர்வழியாக அவற்றினின்று விடுபடுவர்.

Acts 13:38-39

நம் பாவங்களைப்போக்கும் பரிகாரப் பலி அவரே. நம் பாவங்களை மட்டுமன்று, உலகனைத்தின் பாவங்களையும் போக்கும் பரிகாரப் பலி அவரே.

1 John 2:2

அந்த அன்பு மகனாலே, அவருடைய இரத்தத்தின் வழியாய், இறைவனின் அருள் வளத்திற்கேற்ப நாம் மீட்பு அடைகிறோம், குற்றங்களுக்கு மன்னிப்புப் பெறுகிறோம்.

Ephesians 1:7

உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டா, உங்கள் இதயங்களைக் கிழித்துக் கொள்ளுங்கள்." உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள், ஏனெனில் அவர் அருளும் இரக்கமுமுள்ளவர்: நீடிய பொறுமையுள்ளவர், நிலையான அன்புள்ளவர், செய்யக் கருதிய தீமையைக் குறித்து மனமாறுகிறவர்.

Joel 2:13

அதற்கு இராயப்பர், "மனந்திரும்புங்கள்; பாவமன்னிப்பு அடைவதற்காக இயேசு கிறிஸ்துவின் பெயரால் நீங்கள் ஒவ்வொருவரும் ஞானஸ்நானம் பெறுங்கள்; அப்பொழுது பரிசுத்த ஆவியாம் திருக்கொடையைப் பெறுவீர்கள்.

Acts 2:38

என் பாவத்தை நான் உமக்கு வெளியிட்டேன்; என் குற்றத்தை நான் உம் திருமுன் மறைத்தேனில்லை: "ஆண்டவரிடம் என் பாவத்தை ஒப்புக்கொள்கிறேன்" என்றேன்; நீரும் என் குற்றத்தை மன்னித்தீர்.

Psalms 32:5

நீங்கள் செபம் செய்ய நிற்கும்போது யார்மேலாவது உங்களுக்கு மனத்தாங்கல் ஏதேனும் இருந்தால், மன்னித்துவிடுங்கள்.

Mark 11:25

எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தவர்களை நாங்கள் மன்னித்துள்ளதுபோல, எங்கள் குற்றங்களை மன்னித்தருளும்.

Matthew 6:12

பின்னர், இராயப்பர் அவரை அணுகி, "ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு எதிராகக் குற்றஞ் செய்துவந்தால், நான் அவனை எத்தனை முறை மன்னிப்பது? ஏழு முறைவரைக்குமா?" என்று கேட்டார்.
அதற்கு இயேசு கூறியதாவது: "ஏழு முறை என்றன்று, எழுபது முறை ஏழு முறை என உனக்குச் சொல்லுகிறேன்.

Matthew 18:21-22

பின்பு இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக யெருசலேமிலுள்ள ஆண்டவரின் ஆலயத்திற்கு வரவேண்டும் என்று பறைசாற்றும்படி எசெக்கியாஸ் இஸ்ராயேல், யூதா நாடெங்கும் ஆட்களை அனுப்பினதுடன், எப்பிராயீம், மனாசே குலத்தாருக்குக் கடிதங்களையும் அனுப்பிவைத்தான்.
அரசனும் தலைவர்களும் மக்கள் யாவரும் கலந்து பேசினர். பாஸ்காத் திருவிழாவை இரண்டாம் மாதத்தில் கொண்டாடுவதென முடிவு செய்தனர்.
ஏனெனில் குறிக்கப்பட்ட காலத்தில் மக்கள் அத்திருவிழாவைக் கொண்டாட முடியாது போயிற்று. காரணம்: போதுமான குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை; மக்களும் யெருசலேமிற்கு இன்னும் வந்து சேரவில்லை.
இம்முடிவு அரசனுக்கும் மக்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தது.
மேலும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரின் பாஸ்காத் திருவிழாவைக் கொண்டாடும்படி மக்கள் யெருசலேமிற்கு வரவேண்டும் என்று பெர்சாபே முதல் தாண் வரையுள்ள இஸ்ராயேல் நாடெங்கும் விளம்பரம் செய்யத் தீர்மானித்தனர். ஏனெனில் மக்களுள் பலர் சட்டப்படி அதைக் கொண்டாடவில்லை.
அரசனும் தலைவர்களும் கொடுத்த கடிதங்களைத் தூதுவர் வாங்கிக்கொண்டு இஸ்ராயேல், யூதா நாடெங்கும் போய் அரச கட்டளையைப் பறைசாற்றினார்கள்: 'இஸ்ராயேல் மக்களே, ஆபிரகாம், ஈசாக், இஸ்ராயேல் என்பவர்களின் கடவுளாகிய ஆண்டவர்பால் மனம் திரும்புங்கள்; அப்படியாயின் அசீரிய அரசர்களின் கைக்குத் தப்பிப் பிழைத்த உங்களுக்கு அவர் துணையாக வருவார்.
உங்கள் முன்னோரும் உங்கள் சகோதரரும் தங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரைப் புறக்கணித்ததால் அன்றோ, அவர் அவர்களைச் சாவுக்குக் கையளித்தார்? அது உங்களுக்குத் தெரிந்ததே. எனவே நீங்கள் அவர்களைப் போல் நடவாதீர்கள்.
உங்கள் முன்னோரைப் போன்று நீங்களும் இறுமாப்புக் கொண்டவராய் இருக்க வேண்டாம். மாறாக ஆண்டவருக்குப் பணிந்து, அவர் என்றென்றும் பரிசுத்தமாக்கின அவருடைய திருவிடத்திற்குத் திரும்பி வந்து, உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவருக்குப் பணி புரியுங்கள். அவ்வாறாயின் ஆண்டவரின் சீற்றம் உங்களை விட்டு அகலும்.
ஆம், ஆண்டவர் பக்கம் நீங்கள் மனம் திரும்பினால், உங்கள் சகோதரரும் புதல்வரும், தங்களைச் சிறைப்படுத்திக் கொண்டு போன தலைவரிடமிருந்து இரக்கம் பெறுவர்; இந்நாட்டிற்குத் திரும்பி வருவர். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் அன்பும் இரக்கமும் உள்ளவர். நீங்கள் அவர் பக்கம் மனம் திரும்புவீர்களானால் அவரும் பாராமுகமாய் இரார்." இதுவே அந்த அரச கட்டளை.
தூதுவர் எப்பிராயீம் நாட்டிலும் மனாசே நாட்டிலும் சபுலோன் நாட்டிலும் ஊர் ஊராய் விரைந்து சென்றனர். அப்பொழுது அந்நாடுகளின் மக்கள் அவர்களைத் திட்டியும் ஏசியும் கேலி செய்தனர்.
ஆயினும் ஆசரிலும் மனாசேயிலும் சபுலோனிலும் இருந்த ஒரு சிலர் அவர்களது சொல்லைக் கேட்டு யெருசலேமுக்கு வந்தனர்.
யூதாவிலேயோ ஆண்டவரின் கரம் அவர்களுக்குத் துணை நின்றது. ஆகவே அவர்கள் ஒரு மனப்பட்டு ஆண்டவரது திருவுளத்திற்குப் பணிந்தவராய், அரசனும் தலைவர்களும் கட்டளையிட்டிருந்தபடியே செய்து வந்தனர்.
திரளான மக்கள் யெருசலேமுக்கு இரண்டாம் மாதத்தில் வந்து புளியாத அப்பத் திருவிழாவைக் கொண்டாடினர்.
பின்பு அவர்கள் யெருசலேமில் எஞ்சியிருந்த பலிபீடங்களையும், சிலைகளுக்குத் தூபம் காட்டும் பற்பல தூபக் கலசங்களையும் அழித்துக் கெதிரோன் ஆற்றில் எறிந்துவிட்டனர்.
இரண்டாம் மாதம் பதினான்காம் நாள் பாஸ்காச் செம்மறியைப் பலியிட்டனர். இதைக் கண்ணுற்ற குருக்களும் லேவியரும் வெட்கம் அடைந்தனர்; உடனே தங்களைத் தூய்மையாக்கிக் கொண்டு ஆண்டவரின் ஆலயத்திற்குள் தகனப் பலிகளைக் கொண்டு வந்தனர்.
அவர்கள் கடவுளின் மனிதர் மோயீசனின் திருச்சட்டத்திற்கு ஏற்றபடி தங்கள் முறையின்படியே தத்தம் கடமையைச் செய்தனர்.
மக்களுள் பலர் தீட்டுப்பட்டிருந்தனர். ஆகவே குருக்கள் லேவியரிடமிருந்து (பலிகளின்) இரத்தத்தை வாங்கித் தெளித்தனர். ஆண்டவருக்குப் பலிகளைச் செலுத்தப் போதிய தூய்மை இல்லாதவர்கள் சார்பாக லேவியர்கள் பாஸ்காப் பலியை ஒப்புக்கொடுத்தனர்.
உண்மையிலேயே ஏராளமான மக்கள், குறிப்பாக, எப்பிராயீம், மனாசே, இசாக்கார், சபுலோன் குலத்தாருள் பலர் தீட்டுப்பட்டிருந்த நிலையிலேயே திருச்சட்டத்திற்கு மாறாகப் பாஸ்காவை உண்டனர்; அதன் பொருட்டு எசெக்கியாஸ் அவர்களுக்காக ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டான்: "ஆண்டவர் நல்லவர்.
எனவே யார் யார் முழு மனத்தோடும் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரைத் தேடுகிறார்களோ அவர்களுக்கு அவர் இரக்கம் காட்டுவார். அவர்கள் தூய்மையற்ற நிலையில் இருந்த போதிலும், அவர் அதைக் குற்றமாக எண்ணாது அவர்களை மன்னிப்பார்" என்று சொன்னான்.
ஆண்டவர் எசெக்கியாசின் மன்றாட்டை ஏற்று மக்களை மன்னித்தார்.
இவ்வாறு யெருசலேமில் இருந்த இஸ்ராயேல் மக்கள் புளியாத அப்பத் திருவிழாவை ஏழு நாட்களாகப் பெரு மகிழ்ச்சியோடு ஆடம்பரமாய்க் கொண்டாடினார்கள். லேவியர்களும் குருக்களும் இசைக்கருவிகளை வாசித்து நாள் தோறும் ஆண்டவருக்குப் புகழ்பாடி வந்தனர்.
ஆண்டவருக்குத் திறமையுடன் திருப்பணி புரிந்து வந்த லேவியர் அனைவரையும் எசெக்கியாஸ் உற்சாகப்படுத்தினான். எனவே அவர்கள் திருவிழாவின் ஏழு நாட்களும் உணவு உண்டு, சமாதானப் பலிகளைச் செலுத்தி, தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்து வந்தனர்.
பின்பு மக்கள் எல்லாரும் திருவிழாவை இன்னும் ஏழு நாள் கொண்டாடத் தீர்மானித்து, அவ்வாறே மகிழ்ச்சி கொண்டாடினர்.
ஏனெனில் யூதாவின் அரசன் எசெக்கியாஸ் மக்களுக்கு ஆயிரம் காளைகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்திருந்தான். அதுவுமன்றி தலைவர்கள் மக்களுக்கு ஆயிரங் காளைகளையும் பத்தாயிரம் ஆடுகளையும் கொடுத்திருந்தனர். குருக்களில் பலரும் தங்களைத் தூய்மைப் படுத்தியிருந்தனர்.
யூதா மக்கள் அனைவரும் குருக்களும் லேவியரும், இஸ்ராயேலிலிருந்து வந்திருந்த மக்கள் அனைவரும், யூதாவிலும் இஸ்ராயேலிலும் குடியிருந்தவரும் யூத மறையைத் தழுவியிருந்தோருமான அனைவரும் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினர்.
இவ்வாறு யெருசலேமில் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இஸ்ராயேலின் அரசர் தாவீதின் மகன் சாலமோனின் காலம் முதல் திருவிழா இவ்வளவு சிறப்புடன் நடந்ததில்லை.
கடைசியில் குருக்களும் லேவியர்களும் எழுந்து நின்று மக்கட்கூட்டத்தை ஆசீர்வதித்தனர். அவர்களது மன்றாட்டு கேட்டருளப்பட்டது. அவர்களது செபம் ஆண்டவரின் உறைவிடமான விண்ணகத்தை எட்டிற்று.

2 Chronicles 30:9b

ஆகையால், உங்கள் பாவங்கள் ஒழியும்பொருட்டு மனம் மாறிக் கடவுளிடம் திரும்புங்கள்.

Acts 3:19

உங்களுள் ஒருவன் நோயுற்றிருந்தால் அவன் திருச்சபையின் மூப்பர்களை அழைக்கட்டும்; அவர்கள் ஆண்டவர் பெயரால் அவன் மீது எண்ணெய் பூசி, அவனுக்காகச் செபிப்பர்.
விசுவாசமுள்ள செபம் நோயாளியைக் குணமாக்கும். ஆண்டவர் அவனை எழுப்பி விடுவார்.

James 5:14-15

மக்கள் அறியாமையால் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்ததைக் கடவுள் பொருட்படுத்தாமல், இப்போது உலகெங்கும் எல்லாரும் மனந்திரும்பவேண்டும் என மனிதர்களுக்குக் கட்டளையிடுகிறார்.

Acts 17:30

ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது: "பெண் ஒருத்தி தன் கணவனால் தள்ளுண்டு அவனை விட்டகன்று வேறு ஒருவனை மணம் புரிவாளாகில், முந்தினவன் அவளிடம் திரும்பி வருவானோ? அந்தப் பூமி கெட்டுத் தீட்டுப்பட்டுப் போகவில்லையா? பல காதலர்களோடு நீ விபசாரம் செய்தாய், ஆயினும் நம்மிடம் திரும்பி வரமாட்டாயா? என்கிறார் ஆண்டவர்.
உன் கண்களை ஏறெடுத்துப்பார்; நீ விபசாரம் பண்ணாத இடமெது? வழி ஓரத்தில் உட்கார்ந்திருக்கும் அரேபியனைப் போல் உன் காதலர்களை எதிர்பார்த்துக் கொண்டு வழிகளில் உட்கார்ந்து காத்திருந்தாய்; உன் விபசாரங்களாலும் தீச்செயல்களாலும் பூமியைத் தீட்டுப்படுத்தினாய் அன்றோ?
ஆகையால் நாட்டில் மழை பெய்யாமல் போயிற்று, வசந்த கால மழை வரவில்லை. உன் முகம் இன்னும் விலைமாதின் முகம் போல் இருக்கிறது; நாணம் என்பதே உனக்கில்லை.
இப்போது தான் நீ நம்மை நோக்கி, 'நீரே என் தந்தை, நீரே என் கன்னிமையின் கணவர்,
நீர் என்றென்றைக்கும் கோபமாயிருப்பீரா? கடைசி வரையில் சினம் நீடிக்குமா?' என்கிறாய். இதோ, நீயே இவ்வாறு சொன்னாய்; ஆனால் உன்னால் இயன்ற வரையில் தீமைகளையே செய்தாய்."
யோசியாஸ் அரசன் நாட்களில் ஆண்டவர் எனக்குச் சொன்னார்: "பிரமாணிக்கமற்ற இஸ்ராயேல் என்னும் மங்கை என்ன செய்தாள், பார்த்தாயா? தன் விருப்பம் போல் உயர்ந்த மலை தோறும், தழைத்த மரத்தின் அடியிலெல்லாம் வேசித்தனம் பண்ணினாள்.
இவை யாவும் அவள் செய்த பிறகு, நம்மிடம் திரும்பி வருவாள் என்று நாம் எண்ணினோம்; ஆயினும் அவள் திரும்பி வரவில்லை; இதை அவளுடைய உண்மை தவறிய சகோதரி யூதா கண்டாள்:
அந்தப் பிரமாணிக்கமற்ற இஸ்ராயேல் செய்த எல்லா விபசாரங்களுக்காகவும், நாம் அவளை வெறுத்துத் தள்ளி அவளுக்கு மணமுறிவுச் சீட்டைக் கொடுத்தனுப்பினோம்; அதையும் அவள் பார்த்திருந்தாள்; பார்த்திருந்தும் அவளுடைய உண்மை தவறிய சகோதரி யூதா அஞ்சவில்லை; அதற்கு மாறாக, அவளும் விபசாரம் செய்தாள்.
விபசாரம் அவளுக்குத் தண்ணீர் பட்ட பாடாக இருந்ததால், கல்லோடும் மரத்தோடும் விபசாரம் செய்து நாட்டைத் தீட்டுப்படுத்தினாள்.
இவையெல்லாம் செய்த பிறகும் இஸ்ராயேலின் உண்மை தவறிய சகோதரியான யூதா முழு உள்ளத்தோடு நம்மிடம் திரும்பி வரவில்லை. திரும்பி வந்து விட்டதாக வெளிக்கு நடித்தாள், என்கிறார் ஆண்டவர்."
அப்பொழுது ஆண்டவர் எனக்குச் சொன்னார்: இருவரையும் ஒத்திட்டுப் பார்த்தால், பிராமணிக்கமற்ற இஸ்ராயேல் உண்மை தவறிய யூதாவைப் போல் அவ்வளவு குற்றமுள்ளவள் அல்லள்.
ஆதலால் நீ வடக்கு முகமாய்த் திரும்பி உரத்த குரலில் இந்த வார்த்தைகளை அறிவி: "ஆண்டவர் கூறுகிறார்: பிரமாணிக்கமற்ற இஸ்ராயேலே, திரும்பி வா; நீ வந்தால் நாம் முகத்தைத் திருப்பிக் கொள்ள மாட்டோம்; ஏனெனில் நாம் இரக்கமுள்ளவர், எப்போதும் கோபமாயிரோம், என்கிறார் ஆண்டவர்.
நீ செய்த துரோகத்தை ஒத்துக்கொள், போதும்: உன் கடவுளாகிய ஆண்டவருக்குத் துரோகம் செய்தாய், பச்சை மரத்தடிதோறும் ஓடி அந்நிய தெய்வங்களோடு விபசாரம் செய்தாய், நம் சொல்லைக் கேட்கவில்லை.
"பிரமாணிக்கமற்ற பிள்ளைகளே, திரும்பி வாருங்கள்;ஏனெனில் நாமே உங்கள் தலைவர்: உங்களில் ஒருவன் ஒரு பட்டணத்தினின்றும், இருவர் ஒரு குடும்பத்திலிருந்தும் வந்த போதிலும், நாம் உங்களைச் சீயோனில் கொண்டு போய்ச் சேர்ப்போம்.
நமது இதயத்திற்கேற்ற ஆயர்களை உங்களுக்குக் கொடுப்போம்; அவர்கள் உங்களுக்கு அறிவையும் ஞானத்தையும் ஊட்டுவார்கள்.
நீங்கள் பூமியில் பெருகிப் பலுகிய பின்னர், 'இதோ ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழை' என்று சொல்லமாட்டார்கள்; அது அவர்கள் நினைவில் இராது, ஞாபகத்திற்கும் வராது; அதைக் குறித்து விசாரித்தாலும் இல்லை; இனி ஒரு முறை அது நிகழவும் மாட்டாது, என்கிறார் ஆண்டவர்.
அக்காலத்தில் யெருசலேமை ஆண்டவருடைய அரியணை என்பார்கள், ஆண்டவர் பேரால் எல்லா இனத்தாரும் யெருசலேமில் வந்து கூடுவார்கள்; அதற்குப் பிறகு தங்கள் தீய இதயத்தின் கெட்ட நாட்டத்தைப் பின்பற்ற மாட்டார்கள்.
அந்நாட்களில் யூதாவின் வீட்டார், இஸ்ராயேல் வீட்டாரோடு சேர்ந்துகொள்வர்; இரு வீட்டாரும் வடநாட்டை விட்டு, நாம் அவர்கள் தந்தையர்க்குக் கொடுத்த நாட்டுக்கு வருவர்.
மனந்திரும்புங்கள்: "உன்னை எவ்வாறு நம் புதல்வர்களோடு சேர்க்கலாம், இன்ப நாட்டை மக்களினங்களின் உரிமைச் சொத்துகளை விட மிக அழகான நாட்டை உனக்கு எவ்வாறு தரலாம் என்றெல்லாம் நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்; 'என் தந்தை' என என்னைக் கூப்பிடுவாய் என்றும், இனி ஒருநாளும் நம்மைப் பின்பற்றத் தவறமாட்டாய் என்றும் நாம் எதிர்பார்த்தோம்.
ஆனால், பிரமாணிக்கமற்ற மனைவி கணவனைக் கைவிடுவது போல், இஸ்ராயேல் வீடே, நீ நமக்குப் பிரமாணிக்கந் தவறினாய், என்கிறாய் ஆண்டவர்."
இஸ்ராயேல் மக்களின் அழுகைக் குரலும், வேண்டலும் வழிகளிலெல்லாம் கேட்கிறது; ஏனெனில் அவர்கள் கெட்ட வழியில் நடந்து, தங்கள் கடவுளாகிய ஆண்டவரை மறந்தார்கள்.
பிரமாணிக்கம் தவறிய மக்களே, மனந்திரும்பி வாருங்கள்; நாம் உங்கள் பிரமாணிக்கமின்மையைக் குணமாக்குவோம்." "இதோ, நாங்கள் உம்மிடம் திரும்பி வருகிறோம், ஏனெனில் எங்கள் கடவுளாகிய ஆண்டவர் நீரே.
நாங்கள் குன்றுகள் மேலும் மலைகள் மேலும் வணங்கியவை யாவும் பொய்த் தெய்வங்கள்; எங்கள் கடவுளாகிய ஆண்டவரிடத்தில் தான் இஸ்ராயேலின் மீட்பு இருக்கிறது; இது உண்மையிலும் உண்மை.
எங்கள் இளமை முதல் பார்த்து வருகிறோம்; வெட்கத்துக்குரிய சிலை வழிபாடு தான், எங்கள் தந்தையார் உழைத்துச் சேர்த்தவற்றையும், அவர்களுடைய ஆடுகளையும் மாடுகளையும், அவர்களின் புதல்வர்களையும் புதல்வியரையும், விழுங்கி விட்டது.
வெட்கமே எங்கள் படுக்கை; அவமானமே எங்கள் போர்வை; ஏனெனில் இளமை முதல் இன்று வரை நாங்களும் எங்கள் முன்னோர்களும், எங்கள் கடவுளாகிய ஆண்டவரின் முன்னிலையில் தீங்கு செய்தோம்; எங்கள் கடவுளாகிய ஆண்டவரின் வாக்கை நாங்கள் கேளாமற் போனோம்" என்பார்கள்,

Jeremiah 3:12b

தீயவன் தன் தீநெறியையும், அநீதன் தன் எண்ணங்களையும் தள்ளிவிட்டு, ஆண்டவரிடம் திரும்பி வரட்டும், அவன் மேல் அவர் இரக்கம் காட்டுவார்; நம்முடைய கடவுளிடம் வரட்டும், ஏனெனில் மன்னிப்பு வழங்குவதில் அவர் வள்ளல்.

Isaiah 55:7

ஆயினும் உமது பேரிரக்கத்தின் பொருட்டு நீர் அவர்களை அழித்து விடவுமில்லை; கைவிட்டு விடவுமில்லை. ஏனெனில் நீரோ இரக்கமும் தயையும் உள்ள கடவுள்!

Nehemiah 9:31


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |