Topic : Judgement

அப்படியிருக்க, (பிறனுக்குத்) தீர்ப் பிடுகிற மனுஷனே, நீ யாராயிருந்தா லுஞ்சரி, போக்குச்சொல்லுவதற்கு உனக்கு இடமில்லை. ஏனெனில் நீ பிறனுக்குத் தீர்ப்பிடுகிற விஷயத்தில் உனக்கே நீ ஆக்கினைத் தீர்ப்பிட்டுக் கொள்ளுகிறாய். எவைகளைப்பற்றித் தீர்ப்பிடுகிறாயோ, அவைகளை நீயே செய்கிறாய். (மத். 7:2.) *** 1. தீர்ப்பிடுகிற மனுஷனே:- தீர்வையிடுகிறது அல்லது தீர்ப்பிடுகிறது என்னும் பதங்கள் வேதாகமத்தில் பிறர்மேல் குற்றம் நினைக்கிறது என்கிற அர்த்தத்தில் அநேக இடங்களில் உபயோகிக்கப்பட்டுவருகிறது. இவ்விடத்திலும் அப்படியே என்று கண்டு கொள்க. அர்ச். சின்னப்பர் இந்த அர்த்தத்திலேயே இந்த வார்த்தைகளை வழக்கமாய்ப் பிரயோகிக்கிறார். மனுஷனே என்பது யூதஜனங்களைக் குறிக்கிறது. (கிராம்போன்.)

Romans 2:1

நீங்கள் தீர்க்கப்படாதபடி ஒருவருக்கும் நீங்கள் தீர்ப்பிடாதேயுங்கள். (லூக். 6:37; உரோ . 2:1.) * 1. சர்வேசுரனால் நாம் தீர்வையிடப்படாதபடிக்கு மற்றவர்கள்மேல் நியாயமின்றிக் குற்றம் நினைக்கவும், சாட்டவும் கூடாதென்று திவ்விய கர்த்தர் இவ்விடத்தில் படிப்பிக்கிறார். வேத புஸ்தகத்தில் தீர்ப்பிடுகிறதென்பது பிறர்மேல் மனதில் குறைவான எண்ணங்கொள்ளுகிறதென்று அர்த்தமாம். இந்த அர்த்தத்தில் அநேக அநேக இடங்களில் இவ்வார்த்தை பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.

Matthew 7:1

மனிதனுடைய மார்க்கமெல் லாம் அவனுக்கு நேரானதாய்த் தோன்றுகின்றது;ஆனால் ஆண்டவர் இருதயங்களை நிறுத்துப் பார்க் கிறார்.

Proverbs 21:2

இதனாலே நாம் இனிமேல் ஒருவருக்கொருவர் தீர்ப்பிடாதிருப்போமாக; ஆனால் நீங்கள் உங்கள் சகோதரனுக்கு இடறலாய் அல்லது துர்மாதிரிகையாய் இருக்கப்படாதென்று முக்கியமாய்த் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

Romans 14:13

ஆனால் மனுஷர்கள் பேசியிருக் கும் ஒவ்வொரு வீண் வார்த்தையின் பேரிலும் தீர்வை நாளில் கணக்குச் சொல்லுவார்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். * 36. ஒரு வீண் வார்த்தைக்கும் கணக்குக் கொடுக்கவேண்டியிருக்குமென்று சேசு நாதர்சுவாமி சொல்லுகிறதினாலே அற்பக் குற்றங்களுக்கு தண்டனையாக மறுலோகத்தில் உத்தரிக்கிற ஸ்தலமிருக்கிறதென்று வெளியாகிறது. 38. இவ்விடத்தில் அடையாளமென்பது புதுமை, அல்லது ஆச்சரியமான செய்கை என்று அர்த்தமாம். இன்னும் வேறிடங்களிலும் இப்படியே அர்த்தமாம்.

Matthew 12:36

ஆயினும் நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தைப் பாராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? (லூக். 6:41.)

Matthew 7:3

ஒருவரையும் குற்றவாளிகளாகத் தீர்க்காதேயுங்கள்; நீங்களும் குற்றவா ளிகளாகத் தீர்க்கப்படமாட்டீர்கள். எவன்மேலும் ஆக்கினைத் தீர்வையிடா தேயுங்கள். உங்கள்மேலும் ஆக்கினைத் தீர்வையிடமாட்டார்கள். மன்னியுங் கள், நீங்களும் மன்னிக்கப்படுவீர்கள். (மத். 7:1.)

Luke 6:37

மற்றொருவனுடைய ஊழியக்காரன்மேல் தீர்ப்பிடுகிறதற்கு நீ யார்? அவன் நின்றாலுஞ் சரி, விழுந்தாலுஞ் சரி எஜமானுக்கென்றே. ஆயினும் அவன் நிற்பான்: சர்வேசுரன் அவனை நிலை நிறுத்த வல்லவராயிருக்கிறார். (இயா. 4:13.)

Romans 14:4

உனக்கு விரோதமாய் முஸ்திப் புச் செய்யப்பட்ட ஆயுதம் உன்பால் பிரயோகமாகா; உனக்குத் தண்டனை விதிக்க எத்தனித்த நாவை நீயே கண்டனஞ் செய்வாய்; ஆண்டவ ருடைய தாசர்களுக்குச் சுதந்தரம் இதுவேயாகும்; அவர்கள் இங்ஙன மாக நீதியை நம்மிடங் காண்பார்கள் என்கிறார் ஆண்டவர்.

Isaiah 54:17

ஆகையால் எவர்கள் வேதப்பிரமாணமில்லாதவர்களாய்ப் பாவஞ்செய்தார்களோ, அவர்கள் வேதப் பிரமாணமில்லாமல் கேட்டுக்குள்ளாவார்கள். எவர்கள் வேதப்பிரமாணத்துக்குட் பட்டவர்களாய்ப் பாவஞ்செய்தார்க ளோ, அவர்கள் வேதப்பிரமாணத்தைக் கொண்டே தீர்வையிடப்படுவார்கள். *** 12. வேதப்பிரமாணமில்லாமல்:- வேதப்பிரமாணம் அல்லது பிரமாணமென்கிற பதங்கள் பழைய ஏற்பாட்டையும், அதில் விசேஷமாய் மோயீசன் எழுதின வேதசட்டங்களையும் குறிக்கும்படி இப்புஸ்தகத்தில் பிரயோகிக்கப்படுகின்றன.

Romans 2:12

உலகத்துக்கு ஆக்கினைத் தீர் வையிடும்படி சர்வேசுரன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், உலகம் அவராலே இரட்சிக்கப்படு வதற்காகவே அவரை அனுப்பினார். * 17. உலகத்தை இரட்சிக்கும்பொருட்டாகவே பிதாவாகிய சர்வேசுரன் தம்முடைய திவ்விய சுதனை இவ்வுலகத்துக்கு அனுப்பினார். இந்த அனுப்புதலைப் பற்றியே திவ்விய கர்த்தர் இவ்விடத்தில் பேசுகிறார். உலக முடிவிலோ, அவர் சகல மனுஷரையும் நடுத்தீர்க்க இரண்டாந்தரம் வருவார். இதன் விபரம் மத். 24-ம் அதி. 30-ம் வசனமுதல் காண்க.

John 3:17

புசிக்கிறவன் புசியாதிருப்பவ னைப் புறக்கணியாதிருப்பானாக. புசியாதிருப்பவனும் புசிக்கிறவனைத் தீர்வையிடாதிருப்பானாக. ஏனெனில் சர்வேசுரன் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

Romans 14:3

யாவருக்குள்ளும் விவாகமானது சங்கைக்குரியதாயும், விவாகமஞ்சமானது அசுசிப்படாததாயும் இருப்பதாக. காமாதுரர்களையும் விபசாரரையும் தெய்வம் நடுத்தீர்க்கும்.

Hebrews 13:4

ஆதலால் இப்போது கிறீஸ்து சேசு நாதருக்கு உட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாதவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு யாதேனுமில்லை *** 1. இவ்வாக்கியத்தின் அர்த்தமாவது: பழைய ஏற்பாட்டின் பிரமாணம் பரிசுத்த முள்ளதாயிருந்தது என்றாலும் மாம்ச இச்சைகளுக்கு இன்னும் அடிமைப்பட்டவர்களாய் இருந்த யூதர்களுக்கு அது கொடுக்கப்பட்டதினாலே, அவர்களுடைய மாம்ச பலவீனத்தினாலே அந்தப் பிரமாணமும் பலவீனப்பட்டு, அதன் நீதியை அவர்கள் நிறைவேற்றுவதற்கு அவர்களுக்குப் பலன்கொடுக்கச் சத்துவமில்லாதிருந்தது. ஆகையால் சர்வேசுரன் தம்முடைய குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாய் அனுப்பி, அவர் திரு மாம்சத்திலே பாவத்தை நடுத்தீர்த்துத் தண்டித்து, நிர்மூலமாக்கினதினால், மாம்ச இச்சைகளுக்கு அடிமைப்பட்டிருந்த பழைய மனிதனை உரிந்துபோட்டு, இஸ்பிரீத்துசாந்துவினாலாகிய புது மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிற நமக்குச் சர்வேசுரனுடைய கற்பனைகளை அநுசரிப்பதற்கு வேண்டிய திராணி உண்டாயிருக்கிறதென்று அர்த்தமாம்.
ஏனெனில் கிறீஸ்து சேசுநாதரிடத்திலுள்ள ஞான சீவியத்துக்குரிய பிரமாணமானது பாவத்துக்கும் மரணத்துக்குமுரிய பிரமாணத்தினின்று என்னை விடுதலையாக்கினது.

Romans 8:1-2

ஆதலால் போஜனபானத்தைப் பற்றியாவது, பண்டிகைநாள், அமாவாசை, ஓய்வுநாள் இவைகளைப்பற்றியாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. (உரோ. 14:3-5.)
இவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருந்தன: இவைகளுக்கு உடலோ கிறீஸ்துநாதராமே.

Colossians 2:16-17

என் ஆத்துமமானது இரவில் உம்மை அபேட்சித்தது; நானும் அதி காலையே என் புத்தியுள்ள உள்ள முடன் உம்மை நோக்கி விழித்திருப் பேன்; (பூதல வாசிகள் அப்படியல்ல,) நீர் பூமிமீது நீதி செலுத்தியபின்னர் தான் நீதியாயிருக்கத் தேடுவர்.

Isaiah 26:9

அவரை விசுவசிக்கிறவன் தீர்வை யிடப்படான்; அவரை விசுவசியாதவ னோ கடவுளின் ஏக குமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிராததி னால் ஏற்கனவே தீர்வையிடப்பட்டி ருக்கிறான். (1 தீமோ. 6:16; 1 அரு. 4:12.) * 18. இந்த வாக்கியத்திலே சேசுநாதரை விசுவசிக்கிறவன் தீர்வையிடப்படானென்று சொல்லியிருப்பதினாலே இரட்சணியம் அடைவதற்கு சேசுநாரை விசுவசிக்கிறதொன்றே போதுமென்று அர்த்தமல்ல, இரட்சணியம் அடையும்படி வேத கற்பனைகளைக் கைக்கொண்டு அநுசரிக்கவும் வேண்டுமென்று திவ்விய கர்த்தர் மத்.19-ம் அதி. 17-ம் வசனத்தில் தெளிவாய்ப் போதிக்கிறார்

John 3:18

ஆனால் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தபிறகு நானே ஒருவேளை தள்ளுண்டவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தைத் தண்டித்துக் கீழ்ப்படுத்து கிறேன். (உரோ. 8:13; 13:14.)

1 Corinthians 9:27

விசுவசித்து, ஞானஸ்நானம் பெறுபவன் இரட்சண்ணியமடைவான், விசுவசியாதவனோ ஆக்கினைத் தீர்வை யிடப்படுவான்.

Mark 16:16

எல்லாத்துக்கும் முக்கியமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறே எந்த ஆணையிட்டாவது. சத்தியம் பண்ணாதிருங்கள். நீங்கள் தீர்வைக் குள்ளாகாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லக்கடவீர்கள். (மத். 5:34.)

James 5:12

எப்படியெனில் பாவத்துக்குக் கூலி மரணமாம். சர்வேசுரனுடைய வரப்பிரசாதமோ நம்முடைய ஆண்டவராகிய கிறீஸ்து சேசுநாதராலே நித்திய சீவியமாயிருக்கின்றது. *** 23. இந்த அதிகாரத்தில் அர்ச். சின்னப்பர் ஞானஸ்நானத்தின் மேன்மையையும், அதி லடங்கிய அதிசயத்துக்குரிய பிரயோசனத்தையும், பேறுபலன்களையும் மிகவுந் துலக்க மாகவுஞ் சிறந்த மேரையாகவுங் காட்டுகிறார். அதாவது: சேசுநாதர் நம்முடைய பாவங்களுக்காக மரித்ததுபோல, நாமும் ஞானஸ்நானம் பெறுகிறபோது பாவத்துக்கும், உலகத்துக்கும், ஆசாபாசத்துக்கும் மரிக்கிறோம். சேசுநாத ருடைய திருச்சரீரம் அடக்கம் பண்ணப்பட்டது போல, நாமும் ஞானஸ்நானத்தினாலே பாவத்திலும் உலகத்திலும் நின்று பிரிக்கப்பட்டு, மறைக்கப்படுகிறோம். சேசுநாதர் மூன்றாம் நாள் புது உயிரடைந்து உயிர்த்தெழுந்ததுபோல, நாமும் ஞானஸ்நானத்தில் புது உயிர் அடைந்து உயிர்க்கிறோம். சேசுநாதர் தம்முடைய மரணத்தினால் நம்முடைய பாவங்களுக்காகப் பிதாவின் நீதிக்கு உத்தரித்து, நமக்குப் பெறுவித்த பாவப்பொறுத்தலை ஞானஸ்நானத்தினால் சம்பூரணமாய் அடைகிறோம். சேசுநாதருடைய திருச் சரீரம் அடக்கபண்ணப்பட்டதினால், நாம் உலகத்துக்கு மறைந்தவர்களாய் அந்தரங்க சீவியமாய் நடக்க வரப்பிரசாதம் அடைகிறோம். சேசுநாதருடைய உத்தானத்தால், புது உயிராகிய இஷ்டப்பிரசாத சீவியமாய் நடக்கப் பேறு பெற்றவர்களாகிறோம். அப்படியே சேசுநாதர் ஒருவிசை மரித்து, மரணத்தை ஜெயித்தபின் இனி என்றென்றைக்கும் மரிக்கமாட்ட ரென்கிறதுபோல, ஞானஸ்நானம் பெற்ற நாமும் ஒருவிசை சேசுநாதருக்குள் பாவத்துக்கு மரித்து, இஷ்டப்பிரசாதமாகிய ஞான சீவியத்துக்கு உயிர்த்தபிறகு, இனிப் பாவத்தால் மரிக்காதிருக்கக்கடவோம். இப்படியே ஞானஸ்நானத்தினால் நித்திய பிதாவின் புத்திரராகவும், சேசுக்கிறீஸ்து நாதருடைய திருச் சரீரத்தோடும் ஆத்துமத்தோடும் நம்முடைய சரீரமும் ஆத்துமமும் ஒன்றிப்பதால், இஸ்பிரீத்துசாந்துவுக்கு ஆலயமாகவும் இருக்கும்படி, சேசுக்கிறீஸ்து நாதரால் பேறுபெற்றவர்களாகி, அவருடைய ஊழியத்துக்கு நம்மை முழுவதும் வலிய மனதோடு ஒப்புக்கொடுத்திருக்கிறதினால், இனி நாம் ஒருபோதும் பாவத்துக்குட்படாமல், சேசுநாதருடைய உயிர்த்த சீவியத்துக்கு ஒப்பாய் நடக்கக்கடவோம். ஏனெனில் பாவத்தின் கூலி மரணமும், அதன் முடிவு நித்திய நரகாக்கினையும், ஞான சீவியத்தின் முடிவு சததமான சீவியமும், அதன் சம்பாவனை நித்திய மோட்சமும் என்று போதிக்கிறார்.

Romans 6:23


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |