23. எப்படியெனில் பாவத்துக்குக் கூலி மரணமாம். சர்வேசுரனுடைய வரப்பிரசாதமோ நம்முடைய ஆண்டவராகிய கிறீஸ்து சேசுநாதராலே நித்திய சீவியமாயிருக்கின்றது. *** 23. இந்த அதிகாரத்தில் அர்ச். சின்னப்பர் ஞானஸ்நானத்தின் மேன்மையையும், அதி லடங்கிய அதிசயத்துக்குரிய பிரயோசனத்தையும், பேறுபலன்களையும் மிகவுந் துலக்க மாகவுஞ் சிறந்த மேரையாகவுங் காட்டுகிறார். அதாவது: சேசுநாதர் நம்முடைய பாவங்களுக்காக மரித்ததுபோல, நாமும் ஞானஸ்நானம் பெறுகிறபோது பாவத்துக்கும், உலகத்துக்கும், ஆசாபாசத்துக்கும் மரிக்கிறோம். சேசுநாத ருடைய திருச்சரீரம் அடக்கம் பண்ணப்பட்டது போல, நாமும் ஞானஸ்நானத்தினாலே பாவத்திலும் உலகத்திலும் நின்று பிரிக்கப்பட்டு, மறைக்கப்படுகிறோம். சேசுநாதர் மூன்றாம் நாள் புது உயிரடைந்து உயிர்த்தெழுந்ததுபோல, நாமும் ஞானஸ்நானத்தில் புது உயிர் அடைந்து உயிர்க்கிறோம். சேசுநாதர் தம்முடைய மரணத்தினால் நம்முடைய பாவங்களுக்காகப் பிதாவின் நீதிக்கு உத்தரித்து, நமக்குப் பெறுவித்த பாவப்பொறுத்தலை ஞானஸ்நானத்தினால் சம்பூரணமாய் அடைகிறோம். சேசுநாதருடைய திருச் சரீரம் அடக்கபண்ணப்பட்டதினால், நாம் உலகத்துக்கு மறைந்தவர்களாய் அந்தரங்க சீவியமாய் நடக்க வரப்பிரசாதம் அடைகிறோம். சேசுநாதருடைய உத்தானத்தால், புது உயிராகிய இஷ்டப்பிரசாத சீவியமாய் நடக்கப் பேறு பெற்றவர்களாகிறோம். அப்படியே சேசுநாதர் ஒருவிசை மரித்து, மரணத்தை ஜெயித்தபின் இனி என்றென்றைக்கும் மரிக்கமாட்ட ரென்கிறதுபோல, ஞானஸ்நானம் பெற்ற நாமும் ஒருவிசை சேசுநாதருக்குள் பாவத்துக்கு மரித்து, இஷ்டப்பிரசாதமாகிய ஞான சீவியத்துக்கு உயிர்த்தபிறகு, இனிப் பாவத்தால் மரிக்காதிருக்கக்கடவோம். இப்படியே ஞானஸ்நானத்தினால் நித்திய பிதாவின் புத்திரராகவும், சேசுக்கிறீஸ்து நாதருடைய திருச் சரீரத்தோடும் ஆத்துமத்தோடும் நம்முடைய சரீரமும் ஆத்துமமும் ஒன்றிப்பதால், இஸ்பிரீத்துசாந்துவுக்கு ஆலயமாகவும் இருக்கும்படி, சேசுக்கிறீஸ்து நாதரால் பேறுபெற்றவர்களாகி, அவருடைய ஊழியத்துக்கு நம்மை முழுவதும் வலிய மனதோடு ஒப்புக்கொடுத்திருக்கிறதினால், இனி நாம் ஒருபோதும் பாவத்துக்குட்படாமல், சேசுநாதருடைய உயிர்த்த சீவியத்துக்கு ஒப்பாய் நடக்கக்கடவோம். ஏனெனில் பாவத்தின் கூலி மரணமும், அதன் முடிவு நித்திய நரகாக்கினையும், ஞான சீவியத்தின் முடிவு சததமான சீவியமும், அதன் சம்பாவனை நித்திய மோட்சமும் என்று போதிக்கிறார்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save