Topic : Punishment

ஆண்டவருடைய கண்டிதத்தை என் மகனே! நீ தள்ளிவிடாதே; அவ ரால் கண்டிக்கப்படுகையிலுஞ் சோர்ந்து போகாதே (எபி.12:5; காட்சி.3:19).
ஏனெனில், ஆண்டவர் தாம் சிநேகிக்கிறவனைக் கண்டிக்கிறார்; தகப்பன் தன் மகளில் சந்தோஷிப் பதுபோல் அவருஞ் சந்தோஷிக் கிறார்.

Proverbs 3:11-12

விமரிசையுள்ள மனிதன் தீமை யைக் கண்டு மறைந்துகொண்டான்; அதை கவனியாமையினால் கஷ்டங் களை அநுபவித்தார்கள்.

Proverbs 27:12

சிநேகத்தில் பயமில்லை. உத்தம சிநேகம் பயத்தைப் புறம்பே தள்ளுகிறது. பயம் வேதனையுள்ளது. ஆகையால் பயப்படுகிறவன் சிநேகத்தில் உத்தமனல்ல. *** 18. உத்தம சிநேகமானது பயத்தைப் புறம்பே தள்ளுகிறது என்கிறார். சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் 2-ம் அதி. 12-ம் வசனத்தில்: பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சணியத்தை நிறைவேற்றப் பிரயாசைப்படுங்கள் என்கிறார். தாவீது இராஜா 18-ம் சங்கீதம் 9-ம் வசனத்தில்: தேவபயமானது பரிசுத்தமுள்ளது. அது என்றென்றைக்கும் நிலைநிற்கிறது என்று சொல்லியிருக்கிறார். இப்படியே வேதாகமங்களில் இன்னும் அநேக இடங்களில் தேவ பயமானது நல்லதென்று சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளெல்லாம் அருளப்பருடைய இந்த வசனத்துக்கு விரோதமென்று நினைக்கத்தக்கதல்ல. அருளப்பர் பாவிகளுடைய தீர்வைக்கும் தண்டனைக்கும் பயப்படுகிற அடிமைப் பயத்தைப்பற்றிப் பேசுகிறார். தாவீது இராஜா, அர்ச்.சின்னப்பர் முதலானவர்களோ புத்திர பயத்தைப்பற்றிப் பேசுகிறார்கள். அதேதென்றால் குற்றஞ்செய்த அடிமைகள் தண்டனைக்குப் பயந்து தங்கள் குற்றத்தை எஜமான்கள் கண்டுகொள்வார்களென்று பயப்படுவார்கள். நல்ல குணமுள்ள பிள்ளைகள் தங்கள் குற்றத்தால் தங்கள் தகப்பனுக்கு மனவருத்தம் வருவிப்போமே, என்று பயப்படுவார்கள். இதுவே தாவீது இராஜாவும், அர்ச். சின்னப்பர் முதலானவர்களும் சொல்லுகிற புத்திர பயமென்று சொல்லப்படும். இப்படிப்பட்ட பயம் தேவ சிநேகத்துக்கு விரோதமாயிராததுமன்றி, அதைக் காப்பாற்றுவதற்கு மகா உதவியாயிருக்கிறது.

1 John 4:18

ஆகையால் எவர்கள் வேதப்பிரமாணமில்லாதவர்களாய்ப் பாவஞ்செய்தார்களோ, அவர்கள் வேதப் பிரமாணமில்லாமல் கேட்டுக்குள்ளாவார்கள். எவர்கள் வேதப்பிரமாணத்துக்குட் பட்டவர்களாய்ப் பாவஞ்செய்தார்க ளோ, அவர்கள் வேதப்பிரமாணத்தைக் கொண்டே தீர்வையிடப்படுவார்கள். *** 12. வேதப்பிரமாணமில்லாமல்:- வேதப்பிரமாணம் அல்லது பிரமாணமென்கிற பதங்கள் பழைய ஏற்பாட்டையும், அதில் விசேஷமாய் மோயீசன் எழுதின வேதசட்டங்களையும் குறிக்கும்படி இப்புஸ்தகத்தில் பிரயோகிக்கப்படுகின்றன.

Romans 2:12

நான் நேசிக்கிறவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன். ஆகையால் நீ உரோசமடைந்து தவஞ்செய். (பழ. 3:12; எபி. 12:6.)

Revelation 3:19

ஆகிலும் எந்தத் தண்டனை யும் தற்காலத்தில் சந்தோஷமாகத் தோன்றாமல் துக்கமாகத் தோன்றும். ஆனால் அதில் பழகிப்போனவர்களுக்குப் பின்னால் அது மிகுந்த சமாதானத்துக் குரிய நீதிப்பலனைப் பெறுவிக்கும். * 11. துன்பங்களில் கிறீஸ்துவனுக்கு ஆறுதல் வருவிக்கக்கூடிய ஐந்து பிரதான முகாந் தரங்கள் உண்டு. * 1-வது. அந்தத் துன்பங்களுக்குச் சர்வேசுரன் தாம் பட்சமுள்ள தகப்பனைப்போல் காரணமாயிருக்கிறார். * 2-வது. சர்வேசுரன் நமக்கு அனுப்புகிற துன்பங்கள் அவருடைய பட்சத்தின் அத்தாட்சிகளாயிருக்கின்றன. * 3-வது. சர்வேசுரனுக்குப் பிரியமான பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டோ மென்பதற்கு அவைகள் அத்தாட்சிகளாயிருக்கின்றன. * 4-வது. நாம் சர்வேசுரனுக்குப் பிள்ளைகளாய் இருக்கிறபடியினாலே துன்பங்கள் அவசியமாய் நமக்கு வரவேண்டியது. இல்லாவிட்டால் சர்வேசுரனுக்கு நாம் பிள்ளைகளாய் இருக்கமாட்டோம். சர்வேசுரன் நம்மைத் தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளாமல் நம்மை விபசாரத்தின் பிள்ளைகள்போல் எண்ணித் தள்ளுவார். * 5-வது. துன்பங்கள் தற்காலத்திலே கசப்பாய்த் தோன்றினாலும் பிற்பாடு நித்தியமான சந்தோஷத்துக்குக் காரணமாயிருக்கின்றன.

Hebrews 12:11

விசுவசித்து, ஞானஸ்நானம் பெறுபவன் இரட்சண்ணியமடைவான், விசுவசியாதவனோ ஆக்கினைத் தீர்வை யிடப்படுவான்.

Mark 16:16

அறியாமல் தண்டனைக்குரியவைகளைச் செய்தவனோ, கொஞ்சம் அடிபடுவான். அதெப்படியென்றால் எவனுக்கு அதிகங் கொடுக்கப்பட்டதோ, அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவித்தார்களோ, அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.

Luke 12:48

ஆண்டவர் என்னை நோக்கிச் சொன்னதாவது:
பிதாக்கள் திராட்சைக் காய் களைத் தின்னப் பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயினவாம் என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ராயே லில் நீதிமொழியாகக் சொல்லவேண் டியதென்னை? (எரே. 31:29)
நமது ஜீவனானை! இஸ்ரா யேலில் இப்பழமொழி இனி சொல்லப் படாதென்று சத்தியமாய்ச் சொல்லு கிறோமென்கிறார் தேவனாகிய ஆண்டவர்.
இதோ எல்லா ஆத்துமாக் களும் நம்முடையதுதான்; தகப்பன் ஆத்துமாவைப் போல் பிள்ளையின் ஆத்துமாவும் நம்முடையதாமே; பாவஞ் செய்த ஆத்துமமே சாகும்.
ஒருவன் நீதியுள்ளவனாயிருந்து நீதியின்படி நடந்து,
(விக்கிரகத்துக்குப் படைத்த) மாமிசத்தை மேடைகளில் சாப்பிட மாட்டான்; இஸ்ராயேல் வீட்டின் விக்கிரகங்களை நோக்கிப் பாரான்: பிறர் தாரத்தைத் தீண்டான்; தீட் டான ஸ்திரீயோடு சேரான்;
பிறத்தியானை ஒடுக்கான்; கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக் கொடுப்பான்; கொள்ளை யிடமாட்டான்; தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பகிர்ந்து, அம்மணமா யிருப்பவனுக்கு வஸ்திரங் கொடுத்து வருவான் (இசா.58:7; மத். 25:35).
அநியாய வட்டிக்குப் பணங் கொடான்; தான் கொடுத்ததற்கு அதிகமாய் வாங்கான்; (எவ்வித) அநியாயத்துக்கும் உட்படான்; ஒரு வர் ஒருவருக்கு உண்டான வழக்கை நியாயமாய்த் தீர்ப்பான்.
நம் கற்பனைகளை அநுசரித்து நம் நீதி நியாயங்களின்படி நடப் பான்; நமது நீதிமார்க்கத்தைப் பற்றிக் கொண்டு அநுசரித்து வருவான், இவன்தான் நீதிமான்; உயர் பிழைத் திருப்பானென்கிறார் தேவனாகிய கர்த்தர்.
ஆனால் இம்மனிதனுக்குத் திருடனும், இரத்தஞ் சிந்துகிறவனும் முன் சொல்லப்பட்ட குற்றங்களில் ஒன்றைச் செய்கிறவனுமான ஒரு குமாரன் பிறந்தான்.
இவன் முன் சொல்லிய புண்ணி யங்களை எல்லாஞ் செய்வதை விட்டு, அதற்கு விருத்துவமாய் நடந்து மேடை களின்மேலேறி படைத்தவைகளைச் சாப்பிடுகிறான்; பரதாரத்தைத் தீட்டுப் படுத்துகிறான்.
சிறுமை எளிமையுள்ளவனை உபாதிக்கிறான்; கொள்ளையிடு கிறான்; அடைமானத்தைத் திரும்பக் கொடாமல் விக்கிரகங்களை ஏறெடுத் துப் பார்த்து அருவருப்பானதைச் செய்கிறான்.
அநியாய வட்டிக்குக் கொடுத் துத் தான் கொடுத்ததற்குமேல் வாங்கி வருகிறான்; இப்படிப்பட்ட அவன் உயிர் பிழைப்பானா? அவன் பிழைக்க மாட்டான்; இந்த அருவருப்பானவை களையெல்லாஞ் செய்ததினாலே அவன் சாகவே சாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.
ஆனால் அவனுக்குப் பிறந்தது ஒரு குமாரன்; இவன் தன் தகப்பன் செய்த பாவங்கள் யாவையுங்கண்டு பயந்து அவ்விதஞ்செய்யாமல்,
மேடைகளின் மேல் ஏறி உண்ணாமலும், இஸ்ராயேல் வீட்டா ரின் விக்கிரகங்களைக் கண்ணோக் கிப் பாராமலும், பிறர் தாரத்தைத் தொடாமலும்,
ஒருவனையுந் துன்பப்படுத் தாமலும், அடைமானத்தை வைத்துக் கொள்ளாமலும், திருடாமலுமிருக் கிறான்; தன் அப்பத்தைப் பசித்தவ னுக்குப் பகிர்ந்து அம்மணமாயிருந் தவனுக்கு வஸ்திரங் கொடுத்து வந்தான்.
ஏழையைத் துன்பப்படுத்தா மல், அநியாய வட்டியுஞ் சொச்சமும் வாங்காமல் நீதிப்படி நமது கட்டளை களை அநுசரித்து நடந்தான்; இவன் தகப்பன் அக்கிரமத்தினிமித்தஞ் சாகாமல் உயிர் பிழைத்திருப்பான்.
அவன் தகப்பனோ கோள் குண்டணிசொல்லி, புறத்தியானைத் துன்பப்படுத்தி தன் சனங்களுக்கு முன்பாகப் பொல்லாங்கு செய்திருப் பதால் அவன் தன் அக்கிரமத்தில் மடிவான்.
நீங்கள் அதைக் கண்டு: பிள்ளை தகப்பன் பாவத்தைச் சுமக்கிறதில் லையோ என்று கேட்பீர்களாக்கும்; பிள்ளை நீதி நியாயத்தைச் செய்து நமது கட்டளையின்படி நடந்தான்; ஆனதால் அவன் சாகான்.
பாவஞ் செய்யும் ஆத்து மாவோ சாகும்; பிள்ளை தகப்பன் பாவத்தையும், தகப்பன் பிள்ளைப் பாவத்தையுஞ் சுமக்காமல், நீதிமான் மீது நீதியும், அக்கிரமியின்மீது அக்கிரம முஞ் சுமரும் (உபா. 24:16; 4 அரசர். 14:6; 2 நாளா. 25:4).
அக்கிரமி தன் எல்லாப் பாவங் களுக்காகவுந் தவம் புரிந்து நமது கட்டளைகள் யாவையுங் கைக் கொண்டு நீதி நியாயப்படி நடப் பானேயாகில் அவன் சாகாமல் உயிர் பிழைத்திருப்பான்.
அவன் செய்த அநீதத்தை யாவும் மறப்போம்; அவன் செய்த தன் நீதியால் பிழைப்பான்.
அக்கிரமியின் மரணத்தையா விரும்புகிறோம்? (இல்லை;) அவன் தன் துர்வழியை விட்டு மனந்திரும் பிப் பிழைப்பதே நமக்குப் பிரியமாம் என்கிறார் தேவனாகிய கர்த்தர் (சங். 29:4; எசேக். 33:11).
சிலவேளை நீதிமான் நீதி வழியை விட்டு அக்கிரமியைப் போலச் சகல பாவங்களையுஞ் செய்தால் அவன் பிழைப்பானோ? (இல்லை;) முன் அவன் செய்த நீதி கிருத்தியங்கள் யாவும் மறக்கப்பட அவன் பண்ணின துரோகத்திலும் அவன் செய்த பாவத்திலுமே சாவான்.
ஆண்டவருடைய வழி நீதியா யில்லை என்பீர்களாக்கும்! கேள் இஸ்ராயேல் வீடே! நமது வழி நீதி யாயில்லை என்கிறதைவிட உங்கள் வழி கெட்ட வழியென்றே சொல்வது நியாயம் (எசேக். 33:20).
ஏனெனில், நீதிமான் தன் நீதி வழியை விட்டு விலகி நீதிக் கேடு செய்தால் அதில் சாவான்; தான் செய்த அக்கிரமத்தில் அல்லோ சாவான்.
அக்கிரமி தன் அக்கிரம வழியை விட்டு விலகி நீதி வழியில் நடந்து நீதியையும் நியாயத்தையும் அநுசரிப்பானேயாகில் அவன் தன் ஆத்துமத்தைப் பிழைக்கப் பண்ணு வான்.
ஏனெனில், அவன் தன் அந் தஸ்தை நினைத்துத் தான் முன் செய்து வந்த அக்கிரமங்கள் யாவையும் விடு வானேயாகில் அவன் பிழைக்கவே பிழைப்பான், சாகான்.
அப்புறம் இஸ்ராயேலின் புத்திரர்: ஆண்டவருடைய வழி நீதி யாயில்லை என்கிறதைவிட உங்கள் வழி கெட்ட வழியென்கிறது நியாயம்.
ஆகையால், இஸ்ராயேல் வீட்டாரே! நாம் உங்களில் அவன வனை அவனவன் நடத்தைக்குத் தக்காப்போல நாம் நீதி செலுத்து வோம் என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்பி உங்கள் அக்கிரமங்களுக்கெல்லாந் தவம்புரியுங்கள்; அப்போது உங்கள் அக்கிரமம் உங்களைப் பாழாக்காது (மத். 3:2).
நீங்கள் செய்த உங்கள் துரோ கங்கள் யாவையும் உங்களுக்குத் தூர மாகத் தள்ளிப்போட்டுப் புது இருத யத்தையும், புது மனதையும் உங்க ளுக்குப் படைத்துக் கொள்ளுங்கள்; இஸ்ராயேல் வமிசத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்?
ஏனெனில், செத்தவனுடைய சாவை நாம் விரும்புகிறதில்லை யென்று தேவனாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; ஆகையால் மனந் திரும்புங்கள், (அதனால்) பிழைத் திருப்பீர்கள் (எசேக். 33:11; 2 இரா. 3:9).

Ezekiel 18:30b

எல்லாத்துக்கும் முக்கியமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறே எந்த ஆணையிட்டாவது. சத்தியம் பண்ணாதிருங்கள். நீங்கள் தீர்வைக் குள்ளாகாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லக்கடவீர்கள். (மத். 5:34.)

James 5:12

ஆதலால் இப்போது கிறீஸ்து சேசு நாதருக்கு உட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாதவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு யாதேனுமில்லை *** 1. இவ்வாக்கியத்தின் அர்த்தமாவது: பழைய ஏற்பாட்டின் பிரமாணம் பரிசுத்த முள்ளதாயிருந்தது என்றாலும் மாம்ச இச்சைகளுக்கு இன்னும் அடிமைப்பட்டவர்களாய் இருந்த யூதர்களுக்கு அது கொடுக்கப்பட்டதினாலே, அவர்களுடைய மாம்ச பலவீனத்தினாலே அந்தப் பிரமாணமும் பலவீனப்பட்டு, அதன் நீதியை அவர்கள் நிறைவேற்றுவதற்கு அவர்களுக்குப் பலன்கொடுக்கச் சத்துவமில்லாதிருந்தது. ஆகையால் சர்வேசுரன் தம்முடைய குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாய் அனுப்பி, அவர் திரு மாம்சத்திலே பாவத்தை நடுத்தீர்த்துத் தண்டித்து, நிர்மூலமாக்கினதினால், மாம்ச இச்சைகளுக்கு அடிமைப்பட்டிருந்த பழைய மனிதனை உரிந்துபோட்டு, இஸ்பிரீத்துசாந்துவினாலாகிய புது மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிற நமக்குச் சர்வேசுரனுடைய கற்பனைகளை அநுசரிப்பதற்கு வேண்டிய திராணி உண்டாயிருக்கிறதென்று அர்த்தமாம்.
ஏனெனில் கிறீஸ்து சேசுநாதரிடத்திலுள்ள ஞான சீவியத்துக்குரிய பிரமாணமானது பாவத்துக்கும் மரணத்துக்குமுரிய பிரமாணத்தினின்று என்னை விடுதலையாக்கினது.

Romans 8:1-2

ஆனால் வரப்பிரசாதத்தின் அளவு குற்றத்தின் அளவைப்போல் அல்லவே; எப்படியெனில் ஒரே மனிதனுடைய குற்றத்தினாலே அநேகர் மரித்தார்க ளென்றால், அவர்களிலும் அதிகமான பேர்களிடத்தில் சேசுக்கிறீஸ்துநாத ராகிய ஒருவருடைய கிருபையினாலே சர்வேசுரனுடைய வரப்பிரசாதமும், கொடையும் எவ்வளவோ மிகுதியாய்ப் பெருகியிருக்கிறது.

Romans 5:15

ஒருவன் கர்த்தருடைய பிரமா ணத்தினால் விலக்கப்பட்டவை களில் யாதொன்றைத் தெரியாமல் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அந்தக் குற்றவாளி தன் அக்கிரமத் தைக் கண்டறிந்த மாத்திரத்தில்,

Leviticus 5:17

நீர் தேவ வாக்கியத்தைப் பிரசங்கம்பண்ணக்கடவீர். சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் அதில் ஊன்றி நிற்பீராக. எவ்விதப் பொறுமையோடும், உபதேசத்தோடும், கண்டித்து, மன்றாடி, கடிந்து கொள்வீராக. எவ்விதப் பொறுமையோடும், உபதேசத்தோடும், கண்டித்து, மன்றாடி, கடிந்து கொள்வீராக.

2 Timothy 4:2

ஆண்டவரே! தளங்களுக்குக் கர்த்தரே! உமக்குக் காத்துக்கொண் டிருக்கிறவர்கள் என் நிமித்தம் வெட்க மடையாதிருக்கட்டும்; இஸ்ராயேல் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என் நிமித்தம் நாணமடையாதிருப் பார்களாக.

Psalms 68:6


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |