1. ஆண்டவர் என்னை நோக்கிச் சொன்னதாவது:
2. பிதாக்கள் திராட்சைக் காய் களைத் தின்னப் பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயினவாம் என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ராயே லில் நீதிமொழியாகக் சொல்லவேண் டியதென்னை? (எரே. 31:29)
3. நமது ஜீவனானை! இஸ்ரா யேலில் இப்பழமொழி இனி சொல்லப் படாதென்று சத்தியமாய்ச் சொல்லு கிறோமென்கிறார் தேவனாகிய ஆண்டவர்.
4. இதோ எல்லா ஆத்துமாக் களும் நம்முடையதுதான்; தகப்பன் ஆத்துமாவைப் போல் பிள்ளையின் ஆத்துமாவும் நம்முடையதாமே; பாவஞ் செய்த ஆத்துமமே சாகும்.
5. ஒருவன் நீதியுள்ளவனாயிருந்து நீதியின்படி நடந்து,
6. (விக்கிரகத்துக்குப் படைத்த) மாமிசத்தை மேடைகளில் சாப்பிட மாட்டான்; இஸ்ராயேல் வீட்டின் விக்கிரகங்களை நோக்கிப் பாரான்: பிறர் தாரத்தைத் தீண்டான்; தீட் டான ஸ்திரீயோடு சேரான்;
7. பிறத்தியானை ஒடுக்கான்; கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக் கொடுப்பான்; கொள்ளை யிடமாட்டான்; தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பகிர்ந்து, அம்மணமா யிருப்பவனுக்கு வஸ்திரங் கொடுத்து வருவான் (இசா.58:7; மத். 25:35).
8. அநியாய வட்டிக்குப் பணங் கொடான்; தான் கொடுத்ததற்கு அதிகமாய் வாங்கான்; (எவ்வித) அநியாயத்துக்கும் உட்படான்; ஒரு வர் ஒருவருக்கு உண்டான வழக்கை நியாயமாய்த் தீர்ப்பான்.
9. நம் கற்பனைகளை அநுசரித்து நம் நீதி நியாயங்களின்படி நடப் பான்; நமது நீதிமார்க்கத்தைப் பற்றிக் கொண்டு அநுசரித்து வருவான், இவன்தான் நீதிமான்; உயர் பிழைத் திருப்பானென்கிறார் தேவனாகிய கர்த்தர்.
10. ஆனால் இம்மனிதனுக்குத் திருடனும், இரத்தஞ் சிந்துகிறவனும் முன் சொல்லப்பட்ட குற்றங்களில் ஒன்றைச் செய்கிறவனுமான ஒரு குமாரன் பிறந்தான்.
11. இவன் முன் சொல்லிய புண்ணி யங்களை எல்லாஞ் செய்வதை விட்டு, அதற்கு விருத்துவமாய் நடந்து மேடை களின்மேலேறி படைத்தவைகளைச் சாப்பிடுகிறான்; பரதாரத்தைத் தீட்டுப் படுத்துகிறான்.
12. சிறுமை எளிமையுள்ளவனை உபாதிக்கிறான்; கொள்ளையிடு கிறான்; அடைமானத்தைத் திரும்பக் கொடாமல் விக்கிரகங்களை ஏறெடுத் துப் பார்த்து அருவருப்பானதைச் செய்கிறான்.
13. அநியாய வட்டிக்குக் கொடுத் துத் தான் கொடுத்ததற்குமேல் வாங்கி வருகிறான்; இப்படிப்பட்ட அவன் உயிர் பிழைப்பானா? அவன் பிழைக்க மாட்டான்; இந்த அருவருப்பானவை களையெல்லாஞ் செய்ததினாலே அவன் சாகவே சாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.
14. ஆனால் அவனுக்குப் பிறந்தது ஒரு குமாரன்; இவன் தன் தகப்பன் செய்த பாவங்கள் யாவையுங்கண்டு பயந்து அவ்விதஞ்செய்யாமல்,
15. மேடைகளின் மேல் ஏறி உண்ணாமலும், இஸ்ராயேல் வீட்டா ரின் விக்கிரகங்களைக் கண்ணோக் கிப் பாராமலும், பிறர் தாரத்தைத் தொடாமலும்,
16. ஒருவனையுந் துன்பப்படுத் தாமலும், அடைமானத்தை வைத்துக் கொள்ளாமலும், திருடாமலுமிருக் கிறான்; தன் அப்பத்தைப் பசித்தவ னுக்குப் பகிர்ந்து அம்மணமாயிருந் தவனுக்கு வஸ்திரங் கொடுத்து வந்தான்.
17. ஏழையைத் துன்பப்படுத்தா மல், அநியாய வட்டியுஞ் சொச்சமும் வாங்காமல் நீதிப்படி நமது கட்டளை களை அநுசரித்து நடந்தான்; இவன் தகப்பன் அக்கிரமத்தினிமித்தஞ் சாகாமல் உயிர் பிழைத்திருப்பான்.
18. அவன் தகப்பனோ கோள் குண்டணிசொல்லி, புறத்தியானைத் துன்பப்படுத்தி தன் சனங்களுக்கு முன்பாகப் பொல்லாங்கு செய்திருப் பதால் அவன் தன் அக்கிரமத்தில் மடிவான்.
19. நீங்கள் அதைக் கண்டு: பிள்ளை தகப்பன் பாவத்தைச் சுமக்கிறதில் லையோ என்று கேட்பீர்களாக்கும்; பிள்ளை நீதி நியாயத்தைச் செய்து நமது கட்டளையின்படி நடந்தான்; ஆனதால் அவன் சாகான்.
20. பாவஞ் செய்யும் ஆத்து மாவோ சாகும்; பிள்ளை தகப்பன் பாவத்தையும், தகப்பன் பிள்ளைப் பாவத்தையுஞ் சுமக்காமல், நீதிமான் மீது நீதியும், அக்கிரமியின்மீது அக்கிரம முஞ் சுமரும் (உபா. 24:16; 4 அரசர். 14:6; 2 நாளா. 25:4).
21. அக்கிரமி தன் எல்லாப் பாவங் களுக்காகவுந் தவம் புரிந்து நமது கட்டளைகள் யாவையுங் கைக் கொண்டு நீதி நியாயப்படி நடப் பானேயாகில் அவன் சாகாமல் உயிர் பிழைத்திருப்பான்.
22. அவன் செய்த அநீதத்தை யாவும் மறப்போம்; அவன் செய்த தன் நீதியால் பிழைப்பான்.
23. அக்கிரமியின் மரணத்தையா விரும்புகிறோம்? (இல்லை;) அவன் தன் துர்வழியை விட்டு மனந்திரும் பிப் பிழைப்பதே நமக்குப் பிரியமாம் என்கிறார் தேவனாகிய கர்த்தர் (சங். 29:4; எசேக். 33:11).
24. சிலவேளை நீதிமான் நீதி வழியை விட்டு அக்கிரமியைப் போலச் சகல பாவங்களையுஞ் செய்தால் அவன் பிழைப்பானோ? (இல்லை;) முன் அவன் செய்த நீதி கிருத்தியங்கள் யாவும் மறக்கப்பட அவன் பண்ணின துரோகத்திலும் அவன் செய்த பாவத்திலுமே சாவான்.
25. ஆண்டவருடைய வழி நீதியா யில்லை என்பீர்களாக்கும்! கேள் இஸ்ராயேல் வீடே! நமது வழி நீதி யாயில்லை என்கிறதைவிட உங்கள் வழி கெட்ட வழியென்றே சொல்வது நியாயம் (எசேக். 33:20).
26. ஏனெனில், நீதிமான் தன் நீதி வழியை விட்டு விலகி நீதிக் கேடு செய்தால் அதில் சாவான்; தான் செய்த அக்கிரமத்தில் அல்லோ சாவான்.
27. அக்கிரமி தன் அக்கிரம வழியை விட்டு விலகி நீதி வழியில் நடந்து நீதியையும் நியாயத்தையும் அநுசரிப்பானேயாகில் அவன் தன் ஆத்துமத்தைப் பிழைக்கப் பண்ணு வான்.
28. ஏனெனில், அவன் தன் அந் தஸ்தை நினைத்துத் தான் முன் செய்து வந்த அக்கிரமங்கள் யாவையும் விடு வானேயாகில் அவன் பிழைக்கவே பிழைப்பான், சாகான்.
29. அப்புறம் இஸ்ராயேலின் புத்திரர்: ஆண்டவருடைய வழி நீதி யாயில்லை என்கிறதைவிட உங்கள் வழி கெட்ட வழியென்கிறது நியாயம்.
30. ஆகையால், இஸ்ராயேல் வீட்டாரே! நாம் உங்களில் அவன வனை அவனவன் நடத்தைக்குத் தக்காப்போல நாம் நீதி செலுத்து வோம் என்று தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்பி உங்கள் அக்கிரமங்களுக்கெல்லாந் தவம்புரியுங்கள்; அப்போது உங்கள் அக்கிரமம் உங்களைப் பாழாக்காது (மத். 3:2).
31. நீங்கள் செய்த உங்கள் துரோ கங்கள் யாவையும் உங்களுக்குத் தூர மாகத் தள்ளிப்போட்டுப் புது இருத யத்தையும், புது மனதையும் உங்க ளுக்குப் படைத்துக் கொள்ளுங்கள்; இஸ்ராயேல் வமிசத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்?
32. ஏனெனில், செத்தவனுடைய சாவை நாம் விரும்புகிறதில்லை யென்று தேவனாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; ஆகையால் மனந் திரும்புங்கள், (அதனால்) பிழைத் திருப்பீர்கள் (எசேக். 33:11; 2 இரா. 3:9).

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save