18. சிநேகத்தில் பயமில்லை. உத்தம சிநேகம் பயத்தைப் புறம்பே தள்ளுகிறது. பயம் வேதனையுள்ளது. ஆகையால் பயப்படுகிறவன் சிநேகத்தில் உத்தமனல்ல. *** 18. உத்தம சிநேகமானது பயத்தைப் புறம்பே தள்ளுகிறது என்கிறார். சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய நிருபம் 2-ம் அதி. 12-ம் வசனத்தில்: பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சணியத்தை நிறைவேற்றப் பிரயாசைப்படுங்கள் என்கிறார். தாவீது இராஜா 18-ம் சங்கீதம் 9-ம் வசனத்தில்: தேவபயமானது பரிசுத்தமுள்ளது. அது என்றென்றைக்கும் நிலைநிற்கிறது என்று சொல்லியிருக்கிறார். இப்படியே வேதாகமங்களில் இன்னும் அநேக இடங்களில் தேவ பயமானது நல்லதென்று சொல்லப்பட்டிருக்கிறது. அவைகளெல்லாம் அருளப்பருடைய இந்த வசனத்துக்கு விரோதமென்று நினைக்கத்தக்கதல்ல. அருளப்பர் பாவிகளுடைய தீர்வைக்கும் தண்டனைக்கும் பயப்படுகிற அடிமைப் பயத்தைப்பற்றிப் பேசுகிறார். தாவீது இராஜா, அர்ச்.சின்னப்பர் முதலானவர்களோ புத்திர பயத்தைப்பற்றிப் பேசுகிறார்கள். அதேதென்றால் குற்றஞ்செய்த அடிமைகள் தண்டனைக்குப் பயந்து தங்கள் குற்றத்தை எஜமான்கள் கண்டுகொள்வார்களென்று பயப்படுவார்கள். நல்ல குணமுள்ள பிள்ளைகள் தங்கள் குற்றத்தால் தங்கள் தகப்பனுக்கு மனவருத்தம் வருவிப்போமே, என்று பயப்படுவார்கள். இதுவே தாவீது இராஜாவும், அர்ச். சின்னப்பர் முதலானவர்களும் சொல்லுகிற புத்திர பயமென்று சொல்லப்படும். இப்படிப்பட்ட பயம் தேவ சிநேகத்துக்கு விரோதமாயிராததுமன்றி, அதைக் காப்பாற்றுவதற்கு மகா உதவியாயிருக்கிறது.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save