11. ஆகிலும் எந்தத் தண்டனை யும் தற்காலத்தில் சந்தோஷமாகத் தோன்றாமல் துக்கமாகத் தோன்றும். ஆனால் அதில் பழகிப்போனவர்களுக்குப் பின்னால் அது மிகுந்த சமாதானத்துக் குரிய நீதிப்பலனைப் பெறுவிக்கும். * 11. துன்பங்களில் கிறீஸ்துவனுக்கு ஆறுதல் வருவிக்கக்கூடிய ஐந்து பிரதான முகாந் தரங்கள் உண்டு. * 1-வது. அந்தத் துன்பங்களுக்குச் சர்வேசுரன் தாம் பட்சமுள்ள தகப்பனைப்போல் காரணமாயிருக்கிறார். * 2-வது. சர்வேசுரன் நமக்கு அனுப்புகிற துன்பங்கள் அவருடைய பட்சத்தின் அத்தாட்சிகளாயிருக்கின்றன. * 3-வது. சர்வேசுரனுக்குப் பிரியமான பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டோ மென்பதற்கு அவைகள் அத்தாட்சிகளாயிருக்கின்றன. * 4-வது. நாம் சர்வேசுரனுக்குப் பிள்ளைகளாய் இருக்கிறபடியினாலே துன்பங்கள் அவசியமாய் நமக்கு வரவேண்டியது. இல்லாவிட்டால் சர்வேசுரனுக்கு நாம் பிள்ளைகளாய் இருக்கமாட்டோம். சர்வேசுரன் நம்மைத் தம்முடைய பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளாமல் நம்மை விபசாரத்தின் பிள்ளைகள்போல் எண்ணித் தள்ளுவார். * 5-வது. துன்பங்கள் தற்காலத்திலே கசப்பாய்த் தோன்றினாலும் பிற்பாடு நித்தியமான சந்தோஷத்துக்குக் காரணமாயிருக்கின்றன.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save