Topic : Self-control

சுற்று மதிலின்றி திறக்கப் பட்ட நகரம் எவ்வாறே, அவ்வாறாம் பேசுகையில் தன் புத்தியை அடக்க மாட்டாத புருஷன்.

Proverbs 25:28

ஏனெனில், சர்வேசுரன் நமக்குப் பயத்தின் இஸ்பிரீத்துவைக் கொ டாமல், தைரியம், சிநேகம், மனஅமைதி என்பவற்றின் இஸ்பிரீத்துவைக் கொடுத் திருக்கிறார். (உரோ. 8:15.)

2 Timothy 1:7

வல்லவனை விடப் பொறுமை சாலி உத்தமன்; நகரங்களை முற்றிக் கையிட்டவனைவிடத் தன் மனதை ஆய்பவன் உத்தமன்.

Proverbs 16:32

மரணமுஞ் சீவியமும் நாவிலிருந்து அதை நேசிக்கிறவர்களே அதின் கனிகளைத் தின்பார்கள்.

Proverbs 18:21

இஸ்பிரீத்துவின் கனிகள் ஏதென் றால்: பரம அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயாளம், நன்மைத்தனம், சகிப்பு,
சாந்தம், விசுவாசம், அடக்க வொடுக்கம், இச்சையடக்கம், நிறைகற்பு இவைகளாம். இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணமில்லை.

Galatians 5:22-23

அப்படியிருக்க, நீங்களும் உங்களாலான முயற்சியெல்லாஞ் செய்து உங்கள் விசுவாசத்தோடு புண்ணியத்தையும், (கலாத். 5:22.)
புண்ணியத்தோடு விவேகத்தையும், விவேகத்தோடு இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடு பொறு மையையும், பொறுமையோடு பக்தி யையும்,
பக்தியோடு சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடு தேவ சிநேகத்தையும் சேர்த்து அநுசரியுங்கள்.

2 Peter 1:5-7

ஆகையால் மற்ற மனுஷர்களைப்போல் நித்திரைபோகாமல், விழிப்புள்ளவர்களும், மனமயக்கமற்றவர்களுமாய் இருப்போமாக.

1 Thessalonians 5:6

எனக்கு மிகவும் பிரியமான சகோதரரே, இதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். எந்த மனிதனும் கேட்கிறதுக்குத் தீவிரமாயிருக்கக்கடவான்; பேசுகிறதற்கும் கோபிக்கிறதற்குமோ தாமதம் பண்ணக்கடவான். (பழ. 17;27.)

James 1:19

மனுஷசுபாவத்துக்குரிய சோ தனையேயன்றி வேறொன்றும் உங்களுக்கு நேரிடாதிருப்பதாக. சர்வேசுரன் பிரமாணிக்கமுள்ளவர்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடார். ஆனால் நீங்கள் சோதனையைத் தாங்கும்படி சோதனையோடு வழியும் பண்ணுவார்.

1 Corinthians 10:13

ஆனால் மற்றவர்களுக்குப் பிரசங்கித்தபிறகு நானே ஒருவேளை தள்ளுண்டவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தைத் தண்டித்துக் கீழ்ப்படுத்து கிறேன். (உரோ. 8:13; 13:14.)

1 Corinthians 9:27

ஏனெனில் நமது இரட்சகராகிய சர்வேசுரனுடைய வரப்பிரசாதம் சகல மனிதருக்கும் வெளியாகி, (தீத்து. 3:4.)
நாம் அவபக்தியையும், இலெளகீக இச்சைகளையும் வெறுத்து விட்டு, இவ்வுலகத்தில் மன அமைதி யோடும், நீதியோடும், பக்தியோடும் நடக்கவும்,

Titus 2:11-12

நீங்கள் இவ்வுலகத்துக்கு ஏற்றபடி நடவாமல், சர்வேசுரனுடைய சித்தத் துக்கு இன்னது நலமாகவும், பிரிய மாகவும், உத்தமமாகவும் இருக்கிற தென்று அறிந்துகொள்ளும்படி உங்கள் மனதைப் புதிப்பித்து, உங்களைச் சீர்திருத்திக்கொள்ளுங்கள். (எபே. 5:17; 1 தெச. 4:3.)

Romans 12:2

பந்தயக் களரியிலே மல்லுக்கட்டு கிறவர்கள் எல்லாக் காரியங்களிலும் இச்சையை அடக்குகிறார்கள். அவர்கள் அழிந்துபோகிற முடியைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றே அப்படிச் செய்கிறார்கள். நாங்களோ அழியாத முடியைப் பெற்றுக்கொள்ளும்படி பிரயா சப்படுகிறோம். (2 தீமோ. 2:5.)

1 Corinthians 9:25

ஏனெனில் நமக்குள்ள போராட்டம் மாம்சத்தோடும், இரத்தத்தோடு மல்ல; துரைத்தனங்களோடும் வல்லமைகளோடும் இந்த அந்தகார உலகாதி பதிகளோடும், ஆகாசமண்டலங்களி லுள்ள அக்கிரம அரூபிகளோடும் நாம் போராடவேண்டியிருக்கிறது. *** 12. ஆகாச மண்டலம் என்பது வானமண்டலங்களின் கீழ்ப்பாகங்களாம். இவைகளில் சர்வேசுரன் தமது திருவுளத்தின்படிக்கு கெட்ட அரூபிகளை உலாவும்படி சிலவிசைகளில் உத்தரவு தருகிறார். நமது ஞான யுத்தம் மனிதரோடு அல்ல, கெட்ட அரூபிகளோடுதான்.

Ephesians 6:12

கன்னிப் பெண்களின் மேல் சிந்தனை முதலாய் எனக்கு வராத படிக்கு நான் என் கண்களோடு உடன்படிக்கை பண்ணியிருந்தேன்.மீ

Job 31:1

நீங்கள் செய்த வேலையை இழக்காமல், அதன் பூரண சம்பாவனையைப் பெற்றுக்கொள்ளும்படிக்கு எச்சரிக்கை யாயிருங்கள். (அரு. 8:31.)

2 John 1:8

மதிகேடன் தன் கோபத்தை உடனே காட்டுகிறான்; பொல்லாப் பைச் சட்டை பண்ணாதவன் ஞான முள்ளவனாம்.

Proverbs 12:16

வலத்திலும் இடத்திலுந் திரும் பாதே; உன் பாதத்தையுந் தின்மை யினின்று விலக்கு; ஏனெனில், வலத் திலிருக்கின்ற வழிகளை ஆண்டவர் அறிகிறார்; இடத்திலிருக்கின்ற வையோ பொல்லாதவைகளாயிருக் கின்றன; ஆனால் அவர் உன் நடைகளைச் செவ்வையாக்குவார்; உன்னைச் சமாதானத்தில் நடத்து வார்.

Proverbs 4:27


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |