Topic : Self-control

சுற்று மதிலின்றித் திறந்து கிடக்கும் நரகம் எவ்வாறோ, அவ்வாறாம் பேசுகையில் தன்னை அடக்க மாட்டாத மனிதன்.

Proverbs 25:28

கடவுள் தம் ஆவியால் கோழை உள்ளத்தை நமக்கு அருளவில்லை. வலிமையும் அன்பும் விவேகமும் கொண்ட உள்ளத்தையே அருளினார்.

2 Timothy 1:7

வல்லவனைவிடப் பொறுமைசாலி உத்தமன். நகரங்களை முற்றுகையிட்டவனைவிடத் தன் மனத்தை ஆள்பவன் உத்தமன்.

Proverbs 16:32

சாவும் வாழ்வும் நாவிலிருந்தே (விளைகின்றன). அதை நேசிக்கிறவர்களே அதன் கனியை உண்பார்கள்.

Proverbs 18:21

ஆனால், தேவ ஆவி விளைவிக்கும் பலன்களாவன: அன்பு, மகிழ்ச்சி, அமைதி பொறுமை, பரிவு, நன்னயம், விசுவாசம், சாந்தம், தன்னடக்கம்.
இவையுள்ள இடத்தில் சட்டம் எத்தடையும் விதிப்பதற்கு இடமில்லை. .

Galatians 5:22-23

இதை மனத்தில் வைத்து, முழு ஊக்கங்காட்டி, உங்களிடம் விசுவாசத்தோடு நற்பண்பும்,
நற்பண்போடு அறிவும், அறிவோடு தன்னடக்கமும், தன்னடக்கத்தோடு மனவுறுதியும்,
மனவுறுதியோடு இறைப்பற்றும், இறைப்பற்றோடு சகோதர நேசமும், சகோதர நேசத்தோடு அன்பும் இணைந்திருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

2 Peter 1:5-7

எனவே, மற்றவர்களைப்போல் நாமும் தூங்காது, விழித்திருக்க வேண்டும்; மட்டு மிதத்தோடு இருத்தல் வேண்டும்.

1 Thessalonians 5:6

என் அன்புச் சகோதரர்களே, இவை உங்களுக்குத் தெரியும். இனி இறை வார்த்தையைக் கேட்பதற்கு விரைதல் வேண்டும்; பேசுவதற்கோ, தாமதித்தல் வேண்டும்; சினங்கொள்வதற்கும் தாமதித்தல் வேண்டும்.

James 1:19

மனிதனால் தாங்கக்கூடிய சோதனை தவிர வேறு எதுவும் உங்களுக்கு வந்ததில்லை. கடவுளோ, நம்பத்தக்கவர்; வெல்ல முடியாத சோதனைக்குள்ளாகும்படி உங்களை விடமாட்டார். சோதனை வரும்பொழுது அதைத் தாங்கிக்கொள்ளும் திறனளித்து அதனின்று தப்பவும் வழி செய்வார்.

1 Corinthians 10:13

பிறருக்கு நற்செய்தி அறிவித்தபின், நானே தகுதியற்றவன் என நீக்கப்படாதவாறு என் உடலை ஒறுத்து அடிமைப்படுத்துகிறேன்.

1 Corinthians 9:27

மாந்தர் அனைவருக்கும் மீட்பளிக்கும் கடவுளின் அருள் பிரசன்னமாகி
நாம் இறைப் பற்றின்மையையும் உலக இச்சைகளையும் விட்டொழித்து விவேகத்தோடும் நீதியோடும் பக்தியோடும் இம்மையில் வாழ நம்மைப் பயிற்றுகிறது.

Titus 2:11-12

இதுவே நீங்கள் செலுத்தவேண்டிய ஆன்மீக வழிபாடு. இவ்வுலகம் காட்டும் மாதிரியைப் பின்பற்றாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப்பெற்று, முற்றிலும் மாற்றம் அடைவதாக. இவ்விதம் கடவுளின் திருவுளம் எது என உய்த்துணர்வீர்கள். அப்போது எது நல்லது, எது உகந்தது, எது தலை சிறந்தது என உங்களுக்கு விளங்கும்.

Romans 12:2

பந்தயத்தில் போட்டியிடுகிறவர்கள் எல்லாரும் தங்களை எல்லாவகையிலும் ஒடுக்குகிறார்கள்; அவர்கள் அழிவுறும் வெற்றிவாகை பெறுவதற்காக இப்படிச் செய்கிறார்கள். நாமோ அழியாத வெற்றிவாகை அடைவதற்காக இப்படிச் செய்கிறோம்.

1 Corinthians 9:25

ஏனென்றால், நாம் வெறும் மனிதர்களோடு போராடுவதில்லை. தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்கவோர், இருளில் மூழ்கிய இவ்வுலகின்மீது ஆதிக்கம் செலுத்துவோர். வான்வெளியில் திரியும் தீய ஆவிகள் ஆகிய இவர்களோடு போராடுகிறோம்.

Ephesians 6:12

கன்னிப்பெண் எவளையும் நோக்காதிருக்க என் கண்களோடு நான் ஒப்பந்தம் செய்திருக்கிறேன்.

Job 31:1

உங்கள் உழைப்பின் பயனை இழக்காமல் முழுப்பயனையும் நீங்கள் அடையும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

2 John 1:8

மதிகெட்டவன் தன் கோபத்தை உடனே காட்டுகிறான். பொல்லாப்பைப் பொருட்படுத்தாதவன் ஞானியாம்.

Proverbs 12:16

வலத்திலும் இடத்திலும் திரும்பாதே. உன் காலையும் தீமையினின்று விலக்கு. ஏனென்றால், வலத்தில் இருக்கின்ற வழிகளை ஆண்டவர் அறிகிறார்; இடத்தில் இருக்கின்றவையோ பொல்லாதவைகளாய் இருக்கின்றன. ஆனால், அவர் உன் நடைகளைச் செவ்வையாக்குவார்; உன்னைச் சமாதானத்தில் நடத்துவார்.

Proverbs 4:27


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |