Topic : Redeemer

உன் தேவனாகிய ஆண்டவர் வல்லுனராய் உன் நடு வீற்றிருப்பார், அவரே உன்னை இரட்சிப்பார்; உன் னைக் குறித்துச் சந்தோஷ பூரிப்புக் கொள்வார்; தமது அன்பில் நிலைத் திருப்பார், உன்னைக் குறித்துப் புகழ்கூறி மகிழ்வார் (என்பார்கள்).

Zephaniah 3:17

வானமண்டலங்கள் சர்வே சுரனுடைய மகிமையை விளக்கிக் கூறுகின்றன; ஆகாய விரிவு அவர் கரங்களின் கிரியைகளைக் காட்டு கின்றன.
பகல் பகலுக்கு இச்சத்தியத்தை உரைக்கின்றது; இரவு இரவுக்கு அறிக்கை இடுகின்றது.

Psalms 18:1-2

நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குக் கீழ்ப்படாமல் நிலைநில்லுங்கள்.

Galatians 5:1

ஆண்டவரே! எப்போது இதைப் பார்ப்பீர்? என் ஆத்துமாவை அவர்கள் கொடுமையில் நின்றும், எனக்கு ஏகமாயிருக்கிற ஆத்துமத் தைச் சிங்கங்களாகிய அவர்களி னின்றும் விடுவியும்.
பெரிய சபையில் உம்மை ஸ்துதிப்பேன்; திரளான சனங்க ளிடத்து உம்மைக் கொண்டாடு வேன்.

Psalms 34:17-18

என் ஆண்டவரில் அடங்காச் சந்தோஷம் கொண்டாடுவேனாக; என் தேவனிடத்தில் என் ஆத்துமா அக்களிப்புக்கொள்ளும்; ஏனெனில் அவர் முடியால் சிரசலங்கரிக்கப் பட்ட மணவாளனைப்போலும், கற்களிழைத்த நகைகளால் சிங்காரிக் கப்பெற்ற மணமகனைப் போலும் எனக்கு இரட்சணியத்தின் வஸ்திரத் தைத் தரித்து, நீதியின் உடுபாவனை யால் என்னைச் சோடிப்பார்.

Isaiah 61:10

அநியாயமாய் என்னோடு எதிர்ப்பவர்களும் முகாந்தரமின்றி என்னைப் பகைத்து கண்சாடை காட்டுகிறவர்களும் எனக்கு விரோதமாகச் சந்தோஷியாதிருக் கட்டும் (அரு. 15:25).

Psalms 34:19

மேகங் கலைந்துபோவது போல் உன் அக்கிரமங்களைப் போக்கி னோம்; புகை மறைவதுபோல் உன் பாவங்களும் பறந்தன. நாம் உன்னை மீட்டோமாதலின் நம்மிடந் திரும்பி வரக்கடவை.

Isaiah 44:22

ஆண்டவருடைய இஸ்பிரீத்து வானவர் என்பேரில் அமர்ந்தார்; ஆதலால் ஆண்டவர் என்னைத் தம் பரிசுத்த ஸ்தலத்தால் அபிஷேகஞ் செய்தார்; ஆண்டவர் என்னை அனுப் பினது: சாந்தந் தாழ்மை உடையோ ருக்குப் போதிக்கவும், இருதயம் நொந்தவர்களைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டவர்களுக்குக் கிருபை யையும், அடைபட்டோருக்கு மீட்பையும் பிரசித்தஞ் செய்யவும் (லூக்.4:18),

Isaiah 61:1

ஆதலால் இப்போது கிறீஸ்து சேசு நாதருக்கு உட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாதவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பு யாதேனுமில்லை *** 1. இவ்வாக்கியத்தின் அர்த்தமாவது: பழைய ஏற்பாட்டின் பிரமாணம் பரிசுத்த முள்ளதாயிருந்தது என்றாலும் மாம்ச இச்சைகளுக்கு இன்னும் அடிமைப்பட்டவர்களாய் இருந்த யூதர்களுக்கு அது கொடுக்கப்பட்டதினாலே, அவர்களுடைய மாம்ச பலவீனத்தினாலே அந்தப் பிரமாணமும் பலவீனப்பட்டு, அதன் நீதியை அவர்கள் நிறைவேற்றுவதற்கு அவர்களுக்குப் பலன்கொடுக்கச் சத்துவமில்லாதிருந்தது. ஆகையால் சர்வேசுரன் தம்முடைய குமாரனைப் பாவ மாம்சத்தின் சாயலாய் அனுப்பி, அவர் திரு மாம்சத்திலே பாவத்தை நடுத்தீர்த்துத் தண்டித்து, நிர்மூலமாக்கினதினால், மாம்ச இச்சைகளுக்கு அடிமைப்பட்டிருந்த பழைய மனிதனை உரிந்துபோட்டு, இஸ்பிரீத்துசாந்துவினாலாகிய புது மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிற நமக்குச் சர்வேசுரனுடைய கற்பனைகளை அநுசரிப்பதற்கு வேண்டிய திராணி உண்டாயிருக்கிறதென்று அர்த்தமாம்.
ஏனெனில் கிறீஸ்து சேசுநாதரிடத்திலுள்ள ஞான சீவியத்துக்குரிய பிரமாணமானது பாவத்துக்கும் மரணத்துக்குமுரிய பிரமாணத்தினின்று என்னை விடுதலையாக்கினது.

Romans 8:1-2

இவரே நம்மைச் சகல அக்கிரமங்களிலும் நின்று இரட்சித்து, நம்மைச் சுத்தமாக்கி, தமக்கு உகந்தவர்களும், நற்கிரியைகளில் வைராக்கி யருமான ஜனமாக்கிக்கொள்ளும் படி தம்மைத்தாமே நமக்காகக் கை யளித்தார்.

Titus 2:14

ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால், மெய்யாகவே நீங்கள் சுயாதீனராயிருப்பீர்கள். (உரோ. 8:2; கலாத். 4:6, 7.)

John 8:36

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். நீர் அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்; ஏனெனில் அவரே தமது ஜனத்தை அவர்களுடைய பாவங்களினின்று இரட்சிப்பார். (தானி. 9:24; லூக். 1:31.) * 21. சேசு - தமிழ்ப் பாஷையில் நமதாண்டவரின் திருநாமம் “சேசு” வா அல்லது "யேசு”வா என்பதைப்பற்றி பாயிரத்துக்கு முன் காண்க.

Matthew 1:21



நடந்து, வழியில் (அதற்கு அல்லது உமது சனங்களுக்கு) முன் பாக நீர் வழிகாட்டும் அதிபதியா யிருந்தீர்; அதை வேரூன்றப் பண்ணி னீர்; அது பூமியெங்கும் பரம்பிப் போயிற்று.

Psalms 79:9

பரமண்டலத்தையும் பூமண் டலத்தையும் படைத்த கர்த்தரிடத் திலிருந்து எனக்கு உதவியுண்டாகும்.

Psalms 120:2

எவரெவர் அக்கிரமம் பொறுக் கப்பட்டதோ, அவர்கள் பாக்கிய வான்கள்; எவரெவர் பாவம் மறைக் கப்பட்டதோ, அவர்களும் பாக்கிய வான்கள்; ஆண்டவர் எவனுடைய பாவத்தை அவன்மேல் சாட்டாமலிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் (உரோ. 4:7).

Psalms 31:1

இப்பொழுதோவெனில், பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டுச் சர்வேசுரனுக்கு அடிமைகளானதினாலே, உங்களுக்குப் பலனாகப் பரிசுத்ததனமும், முடிவாக நித்திய சீவியமும் கிடைக்கின்றது.

Romans 6:22



All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |