Topic : Obedience

சேசுநாதர் அவருக்கு மறுமொழியாக: ஒருவன் என்னைச் சிநேகித்தால், என் வாக்கியத்தை அநுசரிப்பான்; என் பிதாவும் அவனைச் சிநேகிப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுக்குள் வாசம்பண்ணுவோம்.

John 14:23

என் மகனே! உன் பிதாவின் கற்பனையை அநுசரி; உன் மாதாவின் கட்டளையையுங் கைநெகிழாதே.

Proverbs 6:20

ஆனால் உன் தேவனாகிய கர்த்தருடைய குரல் சப்தத்திற்கு நீ செவிகொடுத்து நான் இன்று உனக் குக் கற்பிக்கிற அவருடைய கட்டளை களில் யாவையுங் கைக்கொண்டு ஆசரிப்பாயாகில், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதி களைப் பார்க்கிலும் உன்னை மேன் மைப்படுத்துவார்.

Deuteronomy 28:1

ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த மார்க்கத்திலேயே நடவுங்கள். அப்போது சீவிப்பீர்கள். உங்களுக்கும் நன்றாக இருக்கும். நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே உங்கள் நாட்களும் நீளித்திருக்கும்.

Deuteronomy 5:33

நீங்கள் வாக்கியப்படி செய்கிறவர்களாயிருங்கள். ஆனால் உங்களையே மோசம்போக்கி (வாக்கியத்தைக்) கேட்கிறவர்களாய் மாத்திரம் இருக்க வேண்டாம். (மத். 7:21; உரோ. 2:13.)

James 1:22

புத்திமதியை அனுசரிப்பவன் சீவிய பாதையிலே நடக்கிறான்; கண்டனைகளைக் கைநெகிழ்பவனே அலைந்து திரிகிறான்.

Proverbs 10:17

நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை. நானே உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினால் பிதாவை ஏதேது கேட்டாலும், அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக, நீங்கள் போய், பலனைத் தரும்படிக்கும், உங்கள் பலன் நிலைத்திருக்கும்படிக்கும் நான் உங்களை ஏற்படுத்தினேன். (மத். 28:19.)

John 15:16

ஆகையால் நமக்குப் பிரியமான சகோதரரே, ஆண்டவரிடத்தில் நீங்கள் படுகிற பிரயாசம் வீணாய்ப் போகிறதில்லையென்று அறிந்து, நிலை மையுள்ளவர்களாயும், அசையாத வர்களாயும், இடைவிடாமல் ஆண்ட வருக்குரிய கிரியைகளை மிகுதியாய்ச் செய்பவர்களாயும் இருப்பீர்களாக.

1 Corinthians 15:58

மிகவும் பிரியமானவர்களே, நம்மிருதயம் நமதுமேல் குற்றஞ்சாட்டாதிருந்தால், நாம் சர்வேசுரன்மேல் நம்பிக்கையாயிருப்போம்.
அன்றியும் நாம் அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு அவர் சமுகத்துக்கு ஏற்கையானவைகளைச் செய்கிறபடியினாலே, நாம் வேண்டிக் கொள்வதெதுவோ, அதை அவரிடத்தில் பெற்றுக்கொள்வோம். (மத்.21:22.)

1 John 3:21-22

நீங்கள் இவ்வுலகத்துக்கு ஏற்றபடி நடவாமல், சர்வேசுரனுடைய சித்தத் துக்கு இன்னது நலமாகவும், பிரிய மாகவும், உத்தமமாகவும் இருக்கிற தென்று அறிந்துகொள்ளும்படி உங்கள் மனதைப் புதிப்பித்து, உங்களைச் சீர்திருத்திக்கொள்ளுங்கள். (எபே. 5:17; 1 தெச. 4:3.)

Romans 12:2

எனக்குச் செவிகொடுக்கிற உங்க ளுக்கு நான் சொல்லுகிறதாவது: உங்கள் சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங் கள்; (மத். 5:44.)
உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்கள்மேல் அபாண் டம் சொல்லுகிறவர்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள்;

Luke 6:27-28

ஏனென்றால் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டது போல, ஒரே ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். (பிலிப். 2:8, 9.)

Romans 5:19

இந்த நியாயப் பிரமாணப் புஸ்தகம் உன் கையை விட்டுப் பிரியா திருப்பதாக! அதில் எழுதியிருக்கிறதை அநுசரித்து, அதின்படியெல்லாம் நடந்தொழுகும்பொருட்டு, அதை இராப் பகல் தியானித்துக் கொண் டிருப்பாயாக! அப்படிச் செய்தால் அல்லோ நீ உன் வழியைச் செவ்வை யாக்கிப் புத்திமானாக நடந்து கொள்ளுவாய்.

Joshua 1:8

உன் தேவனாகிய கடவுளின் கட்டளைகளை அநுசரி, அவரைப் பின்பற்றி நட; மோயீசனாகமத்தில் சொல்லியதுபோல் நீ செய்வ தெல்லாம் விவேகத்தோடு செய்ய, கடவுளுடைய திருச்சடங்குகளை யும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் அநுசரி (3 உபா.17:19).

1 Kings 2:3

ஆகையால் நீங்கள் சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பசாசை யோ எதிர்த்து நில்லுங்கள். அது உங்க ளை விட்டு ஓடிப்போம். (எபே. 6:12.)

James 4:7

நீங்கள் செவிகொடாவிடின், நமது நாமத்தை மகிமைப்படுத்து வான் வேண்டி, (நமது ஆக்ஞாப னைக்கு) இருதயகதமாய்க் கவனஞ் செலுத்தாவிடில், நாம் உங்கள்பேரில் வறுமையை அனுப்புவோம்; நீங்கள் ஆசீர்வதித்ததை நாம் சபிப்போம்; (ஆம், எம் வார்த்தைதனை) உங்கள் இருதயத்தில் பதிய வையாததால் நாம் அவைகளைச் சபிப்போம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர் (சூலவி.26:14; உபா. 28:15).

Malachi 2:2

எந்த மனுஷனும் மேலான அதிகாரங்களுக்குப் பணிந்து நடக்கக்கடவான். ஏனெனில் சர்வேசுரனாலே உண்டாயிராத அதிகாரமில்லை. ஆகையால் உண்டாயிருக்கிற அதிகாரங்கள் சர்வேசுரனால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. (ஞான. 6:4; 1 இரா. 2:13.)

Romans 13:1

உங்கள் அலுவலில் அசதியாயிராமல் மனதில் வேகமாயிருங்கள்; ஆண்டவருக்கு ஊழியஞ் செய்யுங்கள்.

Romans 12:11

பின்னும் அவர் சகலரையும் நோக்கிச் சொன்னதாவது: யாதொருவன் என் பிறகே வர மனதாயிருந்தால், தன்னைத்தானே பரித்தியாகஞ் செய்து, தன் சிலுவையை அநுதினமும் சுமந்து கொண்டு, என்னைப் பின்செல்லக் கடவான்; (மத். 10:38; 16:24; மாற். 8:34.)

Luke 9:23

அதற்கு அவன் பிரத்தியுத்தாரமாக: உன் தேவனாகிய கர்த்தரை உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்து மத்தோடும், உன் முழு சத்துவங்களோ டும், உன் முழு மனதோடும் சிநேகிப் பாயாக; உன்னைப்போல உன் பிறனை யும் சிநேகிப்பாயாக (என்று எழுதி யிருக்கிறது) என்றான். (உபாக. 6:5; லேவி. 19:18.)

Luke 10:27

எப்படியெனில், எவர்கள் சர்வேசுரனுடைய ஞானத்தால் நடத்தப்படுகிறார்களோ, அவர்களே சர்வேசுரனுடைய பிள்ளைகள்.

Romans 8:14

நாங்களும், சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிகிற சகலருக்கும் அவர் தந் தருளின இஸ்பிரீத்துசாந்துவானவரும், இந்தச் சங்கதிகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறோம் என்றார்கள்.

Acts 5:32

தேவ சித்தத்தினாலே நான் உங்களிடம் சந்தோஷமாய் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாகவுந்தான்.

Romans 15:32

ஆகையால் சகோதரரே, நான் கடவுளின் இரக்கத்தைக் குறித்து உங்களை மன்றாடிக் கேட்கிறதென்னவென்றால், நீங்கள் உங்கள் சரீரங்க ளைப் பரிசுத்தமும், சர்வேசுரனுக்குப் பிரியமுமான உயிருள்ள பலியாக ஒப்புக் கொடுங்கள். இதுவே நீங்கள் செய்யத் தக்க புத்தியுள்ள ஆராதனை. (பிலிப். 4:18.)

Romans 12:1

ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதர் பிதாவாகிய சர்வேசுரனுடைய மகிமையில் வீற்றிருக்கிறாரென்று எல்லா நாவும் அறிக்கையிடவும் பண்ணினார்.

Philippians 2:11


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |