Topic : Miracles

சேசுநாதர் அவர்களை நோக்கி: இது மனிதர்களால் கூடாததாயினும், சர்வேசுரனால் கூடாததல்ல; ஏனெனில் சர்வேசுரனால் சகலமும் கூடுமென்று திருவுளம்பற்றினார்.

Mark 10:27

அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் சர்வேசுரனால் கூடும் என்று அவர்களுக்குச் சொன்னார்.

Luke 18:27

உடனே பிள்ளையின் தகப்பன் அழுகையோடு பேரொலியிட்டு: ஆண்ட வரே! விசுவசிக்கிறேன், என் விசுவாசக் குறையில் எனக்கு உதவிசெய்தருளும் என்றான்.

Mark 9:23


இப்படியே நீதிமான்கள் உம்முடைய நாமத்தைத் துதிப்பார் கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்திலே வாசம்பண்ணுவார்கள்.

Psalms 139:13-14

ஏனெனில் சர்வேசுரனால் கூடாத வாக்கு ஒன்றுமில்லை என்றார்.

Luke 1:37

சேசுநாதர் அவர்களைப் பார்த்து: மனிதராலே இது கூடாததுதான்; சர்வே சுரனாலோ எல்லாங்கூடும் என்றார்.

Matthew 19:26

அவர் ஐந்து அப்பங்களையும், இரண்டு மச்சங்களையும் கையிலே வாங்கி பரலோகத்தை அண்ணார்ந்து, பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு ஜனங்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்தார்.
எல்லாருஞ் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்களுக்கு மீதியான துண்டுகள் பன்னிரண்டு கூடைகள் எடுக்கப்பட்டன.

Luke 9:16-17

இவ்வகைப் பசாசோ, ஜெபத்தி னாலும் உபவாசத்தினாலுந் துரத்தப் படுமேயொழிய மற்றப்படித் துரத்தப் படமாட்டாது என்றார். (மத் 20:18; மாற். 9:30; லூக். 9:44.)

Matthew 17:20

சேசுநாதர் இந்த வார்த்தையைக் கேட்டு, பிள்ளையினுடைய தகப்பனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவ னாகமாத்திரமிரு, அப்போது (உன் மகள்) பிழைப்பாள் என்றார்.

Luke 8:50

பின்னும் அவர் ஓய்வுநாளிலே அவர்களுடைய ஜெப ஆலயத்தில் உபதேசித்துக்கொண்டிருந்தார்.
அப்பொழுது இதோ, பதினெட்டு வருஷமாய் நோக்காட்டு அரூபி பிடித் திருந்த ஒரு பெண்பிள்ளை அங்கேயிருந் தாள். அவள் கூனியாய்ச் சற்றும் நிமிர்ந்து பார்க்கக்கூடாதவளாயிருந்தாள்.
சேசுநாதர் அவளைக் கண்டு, அவளைத் தமதருகில் அழைத்து: ஸ்திரீ யே, உன் நோக்காட்டினின்று விடுதலை யாக்கப்பட்டாய் என்று சொல்லி,
அவள்மேல் தமது கரங்களை நீட்டினார். உடனே அவள் நிமிர்ந்து, சர்வேசுரனை ஸ்துதித்தாள்.
சேசுநாதர் ஓய்வுநாளிலே சொஸ் தப்படுத்தினதைப்பற்றி, ஜெப ஆலயத் தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்வதற்கு ஆறு நாட் கள் உண்டே, அந்த நாட்களிலே வந்து, செளக்கியம் பெற்றுக்கொள்ளுங்கள். ஓய்வுநாளிலோ இது தகாது என்றான்.
அப்பொழுது ஆண்டவர் அவனுக்குப் பிரத்தியுத்தாரமாக: கள்ள ஞானிகளே, உங்களில் ஒவ்வொருவனும் தன் எருதையாவது கழுதையையாவது ஓய்வுநாளிலே தொழுவத்தினின்று அவிழ்த்து, தண்ணீர் காட்டக் கொண்டுபோகிறதில்லையோ ?
அப்படியிருக்க இதோ, பதினெட்டு வருஷமாகச் சாத்தான் கட்டி வைத்திருந்த அபிரகாமுடைய குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளிலே இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையோ? என்றார்.
அவர் இவைகளைச் சொல்லும் போது, அவருடைய எதிராளிகள் அனைவரும் வெட்கப்பட்டார்கள். சகல ஜனங்களும் அவரால் மகத்துவப்பிரதாபமாய்ச் செய்யப்பட்ட சகலகாரியங்களையும்பற்றிச் சந்தோஷப்பட்டார்கள்.

Luke 13:10-17

அவர் கடலின் மேல் நடக் கிறதை அவர்கள் கண்டவுடனே, அது ஒரு பூதமென்று எண்ணி அலறினார்கள்.
ஏனெனில் எல்லாரும் அவ ரைக் கண்டு கலங்கினார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: தைரிய மாயிருங்கள். நான்தான், பயப்படா தேயுங்கள் என்று சொல்லி,

Mark 6:49-50

சேசுநாதரோ அவர்களை நோக் கிச் சொன்னதாவது: நீங்கள் தத்தளியா மல், விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் சம்பவித்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலை யைநோக்கி நீ பெயர்ந்து, சமுத்திரத்தில் போய்விழுவென்று சொன்னாலும், அப்படியே ஆகுமென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 21:21

ஆண்டவரே, என் முழு இருத யத்தோடு நான் உம்மைத் துதிப் பேன்; உமது அதிசயங்களையெல் லாம் விபரித்துக் கூறுவேன்.

Psalms 9:1

நான் தரையிலே விழுந்தேன். அப்போது : சவுலே, சவுலே, ஏன் என்னை உபாதிக்கிறாய் என்று எனக்குச் சொல்லுகிற ஓர் குரலொலியைக்கேட்டு,

Acts 22:7

அவர் இவைகளைச் சொன்ன பின்பு, அவர்கள் பார்த்துக்கொண் டிருக்க, உயர எழுந்தருளினார். அப் பொழுது ஓர் மேகம் வந்து அவர்களு டைய கண்களுக்கு அவரை மறைத்தது.

Acts 1:9

இவையாவும் ஆண்டவர் தீர்க்கதரிசியால் மொழிந்தது நிறைவேறும்படி ஆயிற்று. அவர் சொல்வதேதெனில்:
“ஒரு கன்னி கெற்பந்தரித்து ஒரு புத்திரனைப் பெறுவாள், அவருக்கு எம்மானுவேல் என்னும் நாமமிடுவார்கள்.” அதற்கு “சர்வேசுரன் நம்மோடு” என்றர்த்தமாம். (இசை. 7:14; 61:1.) * 23. தலைப்பேறு:- லூக். 2-ம் அதி. 7-ம் வசன வியாக்கியானத்தில் இதற்கு விபரம் காண்க.

Matthew 1:22-23

ஆனதை முன்னிட்டு ஆண்ட வர்தாமே உங்களுக்கு அற்புத அடை யாளந் தருவார்; இதோ கன்னியான வள் கற்பமாகி மகவைப் பெறுவாள்; அது மனுவேலன் என்னும் அபிதா னம் பெறும் (மத்.1:23; லூக். 1:31).

Isaiah 7:14

அப்படியிருக்க, முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த அந்த வேறு சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, தானும் கண்டு விசுவசித்தான்.
ஏனெனில் அவர் மரித்தோரிடத்தினின்று உயிர்த்தெழுந்தருள வேண்டும் என்கிற வேத வாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.

John 20:8-9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |