Topic : Miracles

இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்" என்றார்.

Mark 10:27

இயேசு, "மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார்.

Luke 18:27

இயேசு அவரை நோக்கி, "இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்" என்றார்.

Mark 9:23

நானே ஆண்டவர்; எல்லா மக்களுக்கும் கடவுள் நானே; அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ?

Jeremiah 32:27

ஏனெனில், என் உள் உறுப்புகளை உண்டாக்கியவர் நீரே! என் தாயின் கருவில் எனக்கு உருதந்தவர் நீரே!
அஞ்சத்தகு, வியத்தகு முறையில் நீர் என்னைப் படைத்ததால், நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்; உம் செயல்கள் வியக்கத்தக்கவை என்பதை என் மனம் முற்றிலும் அறியும்.

Psalms 139:13-14

ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.

Luke 1:37

இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, "மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும்" என்றார்.

Matthew 19:26

அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற்றின் மீது ஆசிகூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார்.
அனைவரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

Luke 9:16-17

இயேசு அவர்களைப் பார்த்து, "உங்கள் நம்பிக்கைக் குறைவுதான் காரணம். உங்களுக்குக் கடுகளவு நம்பிக்கை இருந்தால் நீங்கள் இம்மலையைப் பார்த்து" இங்கிருந்து பெயர்ந்து அங்குப் போ" எனக் கூறினால் அது பெயர்ந்து போகும். உங்களால் முடியாதது ஒன்றும் இராது என நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் "

Matthew 17:20

இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தந்தையைப் பார்த்து, "அஞ்சாதீர்; நம்பிக்கையோடு மட்டும் இரும்; அவள் பிழைப்பாள்" என்றார்.

Luke 8:50

ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார்.
பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார்.
இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, "அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்" என்று கூறி,
தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார்.
இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைக் கண்ட தொழுகைக்கூடத் தலைவர் கோபம்கொண்டு, மக்கள் கூட்டத்தினரைப் பார்த்து, "வேலை செய்ய ஆறு நாள்கள் உண்டே; அந்நாள்களில் வந்து குணம் பெற்றுக்கொள்ளுங்கள்; ஓய்வுநாளில் வேண்டாம்" என்றார்.
ஆண்டவரோ அவரைப் பார்த்து, "வெளிவேடக்காரரே, நீங்கள் ஒவ்வொருவரும் ஓய்வுநாளில் தம் மாட்டையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக் கொண்டு போய்த் தண்ணீர் காட்டுவதில்லையோ?
பாருங்கள், ஆபிரகாமின் மகளாகிய இவரைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டி வைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவரை ஓய்வுநாளில் விடுவிப்பது முறையில்லையா?" என்று கேட்டார்.
அவர் இவற்றைச் சொன்னபோது, அவரை எதிர்த்த அனைவரும் வெட்கப்பட்டனர். திரண்டிருந்த மக்கள் எல்லாரும் அவர் செய்த மாட்சிக்குரிய செயல்கள் அனைத்தையும் குறித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Luke 13:10-17

அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, "அது பேய்" என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.
ஏனெனில் எல்லாருமே அவரைக் கண்டு அஞ்சிக் கலங்கினர். உடனே இயேசு அவர்களிடம் பேசினார். "துணிவோடிருங்கள்; நான்தான், அஞ்சாதீர்கள்" என்றார்;

Mark 6:49-50

இயேசு அவர்களிடம் மறுமொழியாக, "நீங்கள் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் இருந்தால் அத்தி மரத்துக்கு நான் செய்ததை நீங்களும் செய்வீர்கள்; அது மட்டுமல்ல, இந்த மலையைப் பார்த்து, "பெயர்ந்து கடலில் விழு" என்றாலும் அது அப்படியே நடக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

Matthew 21:21

ஆண்டவரே, என் முழு இதயத்தாலும் உம்மைப் புகழ்வேன்;; வியத்தகு உம் செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.

Psalms 9:1

நான் தரையில் விழுந்தேன். அப்போது, "சவுலே, சவுலே நீ ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்ற குரலைக் கேட்டேன்.

Acts 22:7

இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவி;ட்டது.

Acts 1:9

'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்முடன் இருக்கிறார் என்பது பொருள்.

Matthew 1:22-23

ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்.

Isaiah 7:14

பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார்.
இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.

John 20:8-9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |