10. பின்னும் அவர் ஓய்வுநாளிலே அவர்களுடைய ஜெப ஆலயத்தில் உபதேசித்துக்கொண்டிருந்தார்.
11. அப்பொழுது இதோ, பதினெட்டு வருஷமாய் நோக்காட்டு அரூபி பிடித் திருந்த ஒரு பெண்பிள்ளை அங்கேயிருந் தாள். அவள் கூனியாய்ச் சற்றும் நிமிர்ந்து பார்க்கக்கூடாதவளாயிருந்தாள்.
12. சேசுநாதர் அவளைக் கண்டு, அவளைத் தமதருகில் அழைத்து: ஸ்திரீ யே, உன் நோக்காட்டினின்று விடுதலை யாக்கப்பட்டாய் என்று சொல்லி,
13. அவள்மேல் தமது கரங்களை நீட்டினார். உடனே அவள் நிமிர்ந்து, சர்வேசுரனை ஸ்துதித்தாள்.
14. சேசுநாதர் ஓய்வுநாளிலே சொஸ் தப்படுத்தினதைப்பற்றி, ஜெப ஆலயத் தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்வதற்கு ஆறு நாட் கள் உண்டே, அந்த நாட்களிலே வந்து, செளக்கியம் பெற்றுக்கொள்ளுங்கள். ஓய்வுநாளிலோ இது தகாது என்றான்.
15. அப்பொழுது ஆண்டவர் அவனுக்குப் பிரத்தியுத்தாரமாக: கள்ள ஞானிகளே, உங்களில் ஒவ்வொருவனும் தன் எருதையாவது கழுதையையாவது ஓய்வுநாளிலே தொழுவத்தினின்று அவிழ்த்து, தண்ணீர் காட்டக் கொண்டுபோகிறதில்லையோ ?
16. அப்படியிருக்க இதோ, பதினெட்டு வருஷமாகச் சாத்தான் கட்டி வைத்திருந்த அபிரகாமுடைய குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளிலே இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிட வேண்டியதில்லையோ? என்றார்.
17. அவர் இவைகளைச் சொல்லும் போது, அவருடைய எதிராளிகள் அனைவரும் வெட்கப்பட்டார்கள். சகல ஜனங்களும் அவரால் மகத்துவப்பிரதாபமாய்ச் செய்யப்பட்ட சகலகாரியங்களையும்பற்றிச் சந்தோஷப்பட்டார்கள்.