Topic : Miracles

இயேசு அவர்களை உற்றுநோக்கி, "மனிதரால் இது முடியாது. ஆனால் கடவுளுக்கு அப்படியன்று. கடவுளால் எல்லாம் முடியும்" என்று சொன்னார்.

Mark 10:27

அவர் "மனிதரால் கூடாதது கடவுளால் கூடும் " என்றார்.

Luke 18:27

இயேசு அவனை நோக்கி, "கூடுமானாலா? விசுவாசிப்பவனுக்கு எல்லாம் கூடும்" என்றார்.

Mark 9:23

இதோ, நாமே ஆண்டவர், உயிருள்ளவை யாவற்றுக்கும் நாமே கடவுள்; அப்படியிருக்க, நம்மால் ஆகாதது ஏதேனும் உண்டோ?

Jeremiah 32:27

ஏனெனில், நீரே என் உள் உறுப்புகளை உண்டாக்கினீர், என் தாயின் கருவில் என்னை உருவாக்கியவர் நீரே.
இவ்வளவு வியப்புக்குரிய விதமாய் நீர் என்னைப் படைத்ததை நினைத்து நான் உம்மைப் போற்றுகிறேன்; உம்முடைய செயல்கள் அதிசயமுள்ளவை என்று உம்மைப் புகழ்கிறேன்: என்னை முற்றிலும் நீர் நன்கறிவீர்.

Psalms 139:13-14

ஏனெனில், கடவுளால் ஆகாதது ஒன்றுமில்லை" என்றார்.

Luke 1:37

இயேசு அவர்களை உற்றுநோக்கி, "மனிதரால் இது முடியாது. ஆனால், கடவுளால் எல்லாம் முடியும்" என்று சொன்னார்.

Matthew 19:26

அதன்பின், ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் எடுத்து, வானத்தை அண்ணாந்து பார்த்து, இறைபுகழ் கூறி, பிட்டு, சீடருக்கு அளித்து மக்கட்கூட்டத்திற்குப் பரிமாறச் சொன்னார்.
அனைவரும் வயிறார உண்டனர். மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

Luke 9:16-17

அதற்கு இயேசு கூறியது: "உங்கள் விசுவாசக் குறைவினால்தான். உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்:

Matthew 17:20

இதைக் கேட்ட இயேசு சிறுமியின் தகப்பனிடம், "அஞ்சாதே, விசுவசி, அதுபோதும்; அவள் பிழைப்பாள்" என்றார்.

Luke 8:50

ஓய்வுநாளில் அவர் செபக்கூடம் ஒன்றில் போதித்துக்கொண்டிருந்தார்.
பதினெட்டு ஆண்டுகளாகப் பேயால் நோயுற்றிருந்த பெண் ஒருத்தி அங்கிருந்தாள். அவள் நிமிர்ந்து பார்க்கவும் முடியாத ஒரு கூனி.
அவளைக் கண்ட இயேசு, தம்மிடம் அழைத்து, அவளிடம், "அம்மா, உன் நோயினின்று நீ விடுபட்டாய்" என்று , தம் கைகளை அவள்மீது வைத்தார்.
உடனே அவள் நிமிர்ந்து, கடவுளை மகிமைப்படுத்தலானாள்.
இயேசு ஓய்வுநாளில் குணமாக்கியதைப் பார்த்து, செபக்கூடத்தலைவன் கோபவெறி கொண்டு, கூட்டத்தை நோக்கி, "வேலை செய்ய ஆறு நாள் உண்டே அந்நாட்களில் வந்து குணம்பெற்றுப் போங்கள். ஓய்வுநாளில் ஆகாது" என்றான்.
ஆண்டவர் அவனுக்கு மறுமொழியாக, "வெளிவேடக்காரே, ஓய்வு நாளில் உங்களுள் ஒவ்வொருவனும் தன் எருதையோ கழுதையையோ தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய்த் தண்ணீர்காட்டுவதில்லையோ?
ஆபிரகாமின் மகளாகிய இவளைப் பதினெட்டு ஆண்டுகளாகச் சாத்தான் கட்டிவைத்திருந்தான். இந்தக் கட்டிலிருந்து இவளை ஓய்வுநாளிலே விடுவிப்பது ஆகாத செயலா?" என்றார்.
என்றதும், அவருடைய எதிரிகள் அனைவரும் வெட்கிப்போயினர். அவர் செய்த மாட்சிக்குரிய செயல்களை எல்லாம் பார்த்து, கூட்டம் அனைத்தும் மகிழ்ந்தது.

Luke 13:10-17

அவர்களோ அவர் கடல் மீது நடப்பதைக் கண்டு பூதமென்று எண்ணி அலறினர்.
அனைவரும் அவரைக் கண்டு கலங்கினர். உடனே அவர் அவர்களிடம் பேசி, "தைரியமாயிருங்கள், நான் தான், அஞ்சாதீர்கள்" என்று சொன்னார்.

Mark 6:49-50

அதற்கு இயேசு, "உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்: தயங்கா விசுவாசம் உங்களிடம் இருந்தால், அத்திமரத்திற்கு நேர்ந்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இம்மலையைப் பார்த்து, ' நீ பெயர்ந்து கடலில் விழு ' என்று கூறினாலும் அது நடைபெறும்.

Matthew 21:21

ஆண்டவரே, என் முழு உள்ளத்துடன் உம்மைப் புகழுவேன்: உம் வியத்தகு செயல்களையெல்லாம் எடுத்துரைப்பேன்.

Psalms 9:1

நானோ, தரையில் விழுந்தேன். ' சவுலே, சவுலே, நீ என்னைத் துன்புறுத்துவதேன்?" என்ற குரலைக் கேட்டேன்.

Acts 22:7

இதைச் சொன்னபின்பு, அவர்கள்கண்முன்பாக அவர் மேலே உயர்த்தப்பெற்றார். மேகம் ஒன்று வந்து அவர்களுடைய பார்வையிலிருந்து அவரை மறைத்துக்கொண்டது.

Acts 1:9

' இதோ! கன்னி கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள், அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவர் ' என்று ஆண்டவர் இறைவாக்கினர் வாயிலாகக் கூறியது நிறைவேறும்படியே இவையனைத்தும் நிகழ்ந்தன.
இம்மானுவேல் என்றால், ' நம்மோடு கடவுள் ' என்பது பொருள்.

Matthew 1:22-23

ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கோர் அடையாளம் தருவார்: இதோ, கன்னிப் பெண் கருத்தாங்கி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்; அவன் எம்மானுவேல் என்னும் பெயர் பெறுவான்;

Isaiah 7:14

கல்லறைக்கு முதலில் வந்த மற்றச் சீடரும் உள்ளே நுழைந்து பார்த்தார்; பார்த்து விசுவசித்தார்.
இயேசு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழவேண்டும் என்னும் மறைநூல் வாக்கை இதுவரை அவர்கள் உணரவில்லை.

John 20:8-9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |