Topic : Marriage

நல்ல மனைவியைத் கண்டு பிடிக்கிறவன் நன்மையைக் கண்டு பிடிக்கிறான்; அது கொடுத்த சந்தோ ஷத்துக்குரிய கொடையாம். நல்ல மனைவியை தள்ளிவிடுகிறவன் நன்மை யைத் தள்ளிவிடுகிறான்; விபசாரியை வைத்திருக்கிறவனோவென்றால் மதிகேடனும் அக்கிரமியுமாயிருக் கிறான்.

Proverbs 18:22

அவர் அவர்களுக்குப் பிரத்தி யுத்தாரமாகச் சொன்னதாவது: ஆதி யிலே மனுஷனைப் படைத்தவர் ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார் என்பதையும், (ஆதி. 1:27.)
அதனிமித்தம் மனுஷனானவன் தன் தகப்பனையும், தாயையும் விட்டுத் தன் மனைவியுடனே சார்ந்து, இருவ ரும் ஒரே மாம்சமாய் இருக்கக்கடவார் கள் என்று உரைத்ததையும் நீங்கள் வாசித்ததில்லையோ? (ஆதி. 2:24; எபே. 5:31; 1 கொரி. 6:16; 7:10.)
ஆகையால் அவர்கள் இப்போது இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கி றார்கள். இதனாலே சர்வேசுரன் இணைத் ததை மனிதன் பிரிக்காதிருப்பானாக.

Matthew 19:4-6

மனைவிகளே, கடமைப்படி உங்கள் புருஷர்களுக்கு ஆண்டவருக்குள் கீழ்ப்படிந்திருங்கள். (எபே. 5:22; 1 இரா. 3:1.)
பூமான்களே, உங்கள் மனைவிகளைச் சிநேகியுங்கள். அவர்களுக்குக் கசப்பாயிராதேயுங்கள். *** 19. உங்கள் மனைவிகளுக்குக் கசப்பாயிராமல் என்பதற்கு உங்கள் பேச்சுவார்த்தை நடபடிக்கைகளிலும், கண்டித்துப் புத்திசொல்லவேண்டிய விஷயங்களிலும் மனவருத்தத்தை உண்டுபண்ணாமல், பிரியத்தோடும் தயாளத்தோடும் நடத்தி வரவேண்டுமென்பது கருத்தாகும்.

Colossians 3:18-19

வல்லமையுள்ள ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவனார்? தூரமாய்க் கடைகோடிகளினின்றாம் அவளு டைய விலைமதிப்பு.

Proverbs 31:10

யாவருக்குள்ளும் விவாகமானது சங்கைக்குரியதாயும், விவாகமஞ்சமானது அசுசிப்படாததாயும் இருப்பதாக. காமாதுரர்களையும் விபசாரரையும் தெய்வம் நடுத்தீர்க்கும்.

Hebrews 13:4

மனிதனுடைய இருதயம் தன் வழியைச் சீர்படுத்துகின்றது; ஆனால் சர்வேசுரன் தாமே அவனுடைய பாத வடிகளை நடத்திக்கொண்டு வருகிறார்.

Proverbs 16:9

ஆயினும் வேசித்தனத்தை விலக்கும்பொருட்டு அவனவன் தன் மனைவியையும், அவளவள் தன் புருஷனையும் உடையவர்களாயிருக்கட்டும். *** 2. இந்த வாக்கியத்தில் விவாகஞ் செய்துகொண்ட ஸ்திரீபூமான்களைப்பற்றிப் பேசியிருக்கிறதல்லாதே சகலரையுங் குறித்துப் பொதுப்படையாகப் பேசவில்லை. சகலரும் விவாகஞ் செய்துகொள்வது அர்ச். சின்னப்பருடைய நோக்கமானால், 8-ம் வசனத்தில் கலியாணஞ் செய்யாத வாலர்களையும் கன்னிகைகளையுங் குறித்து அவர்கள் தம்மைப்போல் இருக்கவேண்டுமென்று அவர் ஆசிப்பதேன்? அப்படியானால் தாம் சொன்னதைத் தாமே மறுத்துப் பேசுகிறாரென்கவேண்டும். ஆகையால் இந்த வசனத்தில் கலியாணஞ் செய்துகொண்டவர்களாகிய ஸ்திரீபூமான்கள் ஒருவரோடொருவர் ஐக்கியமாய் இருக்கவேண்டியதைப்பற்றி மாத்திரம் பேசுகிறாரென்று அறியவும்.

1 Corinthians 7:2

புருஷர்களே, கிறீஸ்துநாதர் திருச்சபையை நேசித்து, அதற்காகத் தம்மைத்தாமே கையளித்ததுபோல, நீங்களும் உங்கள் மனைவிகளை நேசியுங்கள். (கொலோ. 3:19.)
கிறீஸ்துநாதர் ஜீவ வாக்கியத்தைக்கொண்டு ஜல ஞானஸ்நானத்தால் அதைச் சுத்திகரித்துப் பரிசுத்தமாக்கவும்,

Ephesians 5:25-26

பின்னையும் கர்த்தராகிய கடவுள்: மனிதன் தனிமையாயிருப் பது நல்லதல்லவாதலால் அவனுக்குச் சரிசமானமாக ஒரு துணைவியை அவனுக்கு உண்டாக்குவோமாக, என்றார்.

Genesis 2:18

ஒரு மனிதன் ஒரு பெண் ணைப் புதிதாய்க் கட்டியிருந்தால் அவனை யுத்தத்திற்குப் போகக் கூப்பிடாமலும், யாதொரு பொது வேலைக்கு அவனைப் பிரயோகப் படுத்தாமலும், அவன் ஒரு வருஷ பரியந்தம் தன் வீட்டில் நல்ல வேலை தன் இஷ்டப்படி செய்து தான் விவாகம் பண்ணின ஸ்திரீயோடு சந்தோஷமாயிருப்பானாக.

Deuteronomy 24:5

பின்னும் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடத்தில் எடுத்த விலா எலும்பை ஒரு ஸ்திரீயாக ஏற்படுத்தி அந்தப் பெண்ணை ஆதாம் அண்டைக் குக் கொண்டுவந்தார்.
ஆதாம்: இவள் என் எலும்பு களின் எலும்பும் என் மாம்சத்தின் மாம்சமுமாயிருக்கிறாள். இவள் மனுஷனிடத்தினின்று எடுக்கப் பட்டவளாதலால் மனுஷி என்னப் படுவாள் என்றும், (1 கொரி. 11:9.)
இதினிமித்தமாகப் புருஷன் தன் தந்தையையும் தாயையும் விட் டுத் தன் பத்தினியோடு ஒன்றித்திருப் பான், இருவரும் ஒரே மாம்சமா யிருப்பார்கள் என்றும் சொன்னான். (மத். 19:5; மாற். 10:7.)

Genesis 2:22-24

மனைவிகள் கர்த்தருக்கென்றாற்போல் தங்கள் புருஷர்களுக்குக் கீழ்ப்படியக்கடவார்கள். (ஆதி. 3:16; கொலோ. 3:18.)
ஏனெனில் கிறீஸ்துநாதர் திருச்சபைக்குத் தலைவராயிருக்கிறதுபோல புருஷனானவன் தன் மனைவிக்குத் தலைவனாயிருக்கிறான். அவர் தம்முடைய சரீரத்தின் இரட்சகராய் இருக்கிறாரல்லோ. (1 கொரி. 11:3; கொலோ. 1:18.)

Ephesians 5:22-23


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |