Topic : Marriage

நல்ல மனைவியைத் தள்ளிவிடுகிறவன் நன்மையைத் தள்ளிவிடுகிறான். விபசாரியை வைத்திருக்கிறவனோ அறிவிலியும் அக்கிரமியுமாய் இருக்கிறான்.

Proverbs 18:22

அதற்கு அவர், "படைத்தவர் தொடக்கத்திலிருந்தே 'ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்' என்றும்,
'ஆதலால் கணவன் தன் தாய் தந்தையரை விட்டுத் தன் மனைவியோடு கூடி இருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர் எனக் கூறினார்' என்றும் நீங்கள் படித்ததில்லையா?
இனி அவர்கள் இருவர் அல்லர், ஒரே உடல். ஆகவே, கடவுள் இணைத்ததை மனிதன் பிரிக்காதிருக்கட்டும்" என்றார்.

Matthew 19:4-6

மனைவியரே, உங்கள் கணவருக்கு பணிந்து நடங்கள். இதுவே ஆண்டவருக்குள் வாழும் முறை.
கணவர்களே, உங்கள் மனைவியர்க்கு அன்பு காட்டுங்கள், அவர்கள் மேல் எரிந்து விழாதீர்கள்.

Colossians 3:18-19

வல்லமையுள்ள பெண்ணைக் கண்டுபிடிப்பவன் யார் ? அவள் தூரமாய்க் கடைகோடிகளினின்று அடையப்பெற்ற செல்வமாம்.

Proverbs 31:10

திருமணம் அனைவராலும் பெரிதும் மதிக்கப்படுவதாக. பள்ளியறை மஞ்சம் மாசுறாது இருக்கட்டும். காமுகரும் விபசாரரும் கடவுள் தீர்ப்புக்கு உள்ளாவர்.

Hebrews 13:4

மனிதனுடைய இதயம் தன் வழியைச் சீர்ப்படுத்துகின்றது. ஆனால், கடவுள்தாமே அவனுடைய அடிச் சுவடுகளை நடத்துகிறவர்.

Proverbs 16:9

ஆனால் கெட்ட நடத்தை எங்கும் மிகுதியாயிருப்பதால், ஒவ்வொருவனுக்கும் மனைவி இருக்கட்டும். ஒவ்வொருத்திக்கும் கணவன் இருக்கட்டும்.

1 Corinthians 7:2

கணவர்களே 'கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்தது போல் நீங்களும் உங்கள் மனைவியருக்கு அன்பு செய்யுங்கள்.
ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்கு அன்பு செய்து அதற்காகத் தம்மையே கையளித்தார்.

Ephesians 5:25-26

மேலும், ஆண்டவராகிய கடவுள்: மனிதன் தனிமையாய் இருப்பது நன்றன்று; ஆதலால் அவனுக்குச் சரிநிகரான ஒரு துணைவியை அவனுக்கென உண்டாக்குவோம் என்றார்.

Genesis 2:18

ஒரு மனிதன் ஒரு பெண்ணைப் புதிதாய் மணந்திருந்தால், அவன் போருக்குப் போகாமலும், யாதொரு பொது வேலையில் ஈடுபடாமலும் ஓராண்டளவு வீட்டில் சுதந்திரமாக தன் மனைவியோடு மகிழ்ந்திருப்பானாக.

Deuteronomy 24:5

பின்னர் ஆண்டவராகிய கடவுள் ஆதாமிடமிருந்து எடுத்த விலாவெலும்பை ஒரு பெண்ணாகச் செய்து, அந்தப் பெண்ணை ஆதாமிடம் அழைத்துக் கொண்டு வந்தார்.
ஆதாம்: இவள் என் எலும்புகளின் எலும்பும் மாமிசத்தின் மாமிசமுமாய் இருக்கிறாள்; இவள் மனிதனிடத்தினின்று எடுக்கப்பட்டவளாதலால் மனுசி எனப்படுவாள் என்றான்.
இதன் பொருட்டு மனிதன் தன் தந்தையையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு ஒன்றித்திருப்பான்; இருவரும் ஒரே மாமிசமாய் இருப்பார்கள், (என்று சொன்னார்.)

Genesis 2:22-24

மனைவியரே, ஆண்டவருக்குப் பணிந்திருப்பதுபோல் உங்கள் கணவர்க்குப் பணிந்திருங்கள்.
ஏனெனில் கிறிஸ்து திருச்சபைக்குத் தலையாய் இருப்பதுபோல் கணவன் மனைவிக்குத் தலையாய் இருக்கிறான். 'கிறிஸ்து திருச்சபையாகிய தம் உடலின் மீட்பர்.

Ephesians 5:22-23


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |