Topic : Heaven

என் பிதாவின் விட்டிலே அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஏனெனில் உங்களுக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தஞ் செய்யப்போகிறேன். * 2. அப்போஸ்தலர்களுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட புண்ணியாத்துமாக்களுக்கும் மோட்சத்திலே நித்தியமாய் வாசஸ்தலம் தயாராயிருந்தாலும், கர்த்தர் பரலோகத்துக்கு எழுந்தருளும் வரையில் பரகதியின் வாசல் அடைபட்டிருந்ததால், அவர் அதைத் திறந்து, அவரவருடைய பேறுபலன்களுக்கு அளவாய் பேரின்ப மகிமையைத் தயாராக்குவாரென்பது இவ்வாக்கியத்தின் கருத்து.

John 14:2

பூமியில் உள்ளவைகளையல்ல, மேலாவில் உள்ளவைகளையே நாடுங்கள்.

Colossians 3:2

பின்பு (இவ்வுலகத்தில்) உயி ரோடே விடப்பட்டிருக்கிற நாம் அவர் களோடேகூட மேகங்களில் எடுபட்டு, ஆகாயத்தில் கிறீஸ்துநாதருக்கு எதிர் கொண்டுபோய், அப்படியே ஆண்ட வரோடு எப்போதும் இருப்போம்.
ஆனபடியினாலே இந்த வார்த்தைகளைக்கொண்டு நீங்கள் ஒருவ ரொருவரைத் தேற்றிக்கொள்ளுங்கள். * 17. தெசலோனிக்கேய சபையார் தங்களில் மரிக்கிறவர்களை ப்பற்றி மிகவும் துக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஆறுதலாக அர்ச். சின்னப்பர் போதித்த தன்மையாவது: நம்பிக்கையற்ற அஞ்ஞானிகளைப் போல் நீங்களும் உங்கள் மரித்தோர்களைக் குறித்துத் துக்கப்படவேண்டாம். ஏனெனில், அவர்கள் என்றென்றைக்கும் மரித்தவர்களல்ல. அவர்களுடைய மரணம் நித்திரையைப்போலிருக்கிறது. அவர்கள் மறுபடியும் உயிர்த்தெழுந்திருப்பார்கள். அதெப்படியென்றால், உலகமுடிவிலே சேசுநாதர் சம்மனசுக்கள் சூழ, மிகுந்த மகிமைப் பிரதாபத்தோடு பரலோகத்தினின்று இறங்கி வந்து, அதிதூதர் நான்கு திசைகளிலும் கேட்கும்படி எக்காளம் ஊதி: மரித்தோரே எழுந்திருங்களென்று கூப்பிடக் கற்பிப்பார். அப்பொழுது கிறீஸ்துநாதருடைய சமாதான ஐக்கியத்தில் மரித்தவர்களாகிய சகலரும் ஒரு க்ஷணத்தில் கல்லறைகளைவிட்டு எழுந்து, அப்போது உயிரோடிருக்கும் மற்ற விசுவாசிகளோடு ஏகோபித்துக் கிறீஸ்துநாதருக்கு எதிர்கொண்டுபோய் அவரோடேகூடப் பரமண்டலங்களில் ஏறி என்றென்றைக்கும் அவருடனேகூடப் பாக்கியமாயிருப்பார்கள். ஆகையால் இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கிற நீங்கள் இந்த வாக்கியங்களைக் கொண்டு ஒருவரொருவரைத் தேற்றி ஆறுதலடைந்திருங்கள் என்கிறார். இதிலே அர்ச். சின்னப்பர் அந்தச் சபையார்களுக்கு ஆறுதல் வருவிக்கவேண்டுமென்கிற கருத்தாயிருந்தபடியால், நடுத்தீர்வையில் நடக்கப்போகிற மற்றவைகளெல்லாம் சொல்லாமல் விட்டுவிட்டு, ஆறுதலுக்கு ஏதுவானவைகளை மாத்திரம் இங்கே காட்டுகிறார். அதைப்பற்றியே முதலாவது, கிறீஸ்துநாதரிடத்தில் மரித்தவர்களுடைய உத்தானத்தைக் குறித்துப் பேசுகிறார். ஆனால் 1 கொரிந்தியர் 15-ம் அதி. 51-ம் வசனத்தில் கிறீஸ்துநாதரிடத்தில் மரித்தவர் களுமன்றிப் பாவிகளும் உயிர்ப்பார்கள் என்கிறார். 2-வது. சேசுநாதர் நடுத்தீர்க்க வரும் போது உயிரோடிருக்கிறவர்கள் ஒரு க்ஷணத்தில் மரித்து உயிர்ப்பார்களென்று சொல்லாமல், முன் மரித்தவர்கள் உயிர்த்தெழுந்தவுடன் அவர்களும் இவர்களும் ஒன்றாகக்கூடி ஆகாயத்தில் எழுந்து சேசுநாதருக்கு எதிராகப் போவார்கள் என்கிறார். ஆகையால் அப்போது உயிரோடிருப்பவர்கள் மரிப்பதில்லையென்று சிலர் நினைப்பதற்கு இட மாகிறது. ஆயினும் அர்ச். சின்னப்பரே எபிரேயர் 9-ம் அதி. 27-ம் வசனத்தில் சொல்லு மாப்போல தேவ தீர்மானத்தால் எல்லா மனிதர்களும் மரிக்கவேண்டியதென்பத

1 Thessalonians 4:16-17

நமது சிந்தையும் புழக்கமும் பரலோகத்திலிருக்கின்றது. அங்கே யிருந்து நம்முடைய ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துவென்னும் இரட்சகர் வருவாரென்று எதிர்பார்த்திருக்கிறோம்.

Philippians 3:20


துன்பநாளில் ஆண்டவர் உமது மன்றாட்டைக் கேட்கக் கடவாராக; யாக்கோப்பென்பவருடைய சர்வேசுர னின் நாமம் உம்மை ஆதரிக்கக் கடவது.
உமது பரிசுத்த ஸ்தலத்தினின்று உமக்கு உதவியனுப்பக் கடவார்; சீயோனினின்றும் உம்மைத் தாபரிக் கக் கடவார்.

Psalms 19:1-2

பூலோகத்தில் உங்களுக்குப் பொக் கிஷங்களைச் சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே அந்தும் துருவும் அரிக்கின்றது, திருடருங் கன்னமிட்டுத் திருடுகிறார்கள். * 19. பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம்:- என்பதினால் இலெளகீக பொருட்களின்மேல் மிதமிஞ்சின பற்றுதல் விலக்கப்பட்டிருக்கிறது. (21-ம் வசனம் காண்க.) எனெனில் மிதமிஞ்சின பற்றுதலால் இருதயஞ் சர்வேசுரனை மறந்து இந்த உலக வாழ்வை மாத்திரம் அபேட்சிக்கும்.
ஆனால் பரலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள். அங்கே அந்தும்துருவும் அரிக்கிறதுமில்லை. திருடர் அங்கே கன்னமிட்டுத் திருடுகி றதுமில்லை , (லூக். 12:33; 1 தீமோ . 6:19.)

Matthew 6:19-20

ஆனால் சேசுநாதர் அவர்களை நோக்கி; சிறுவர்களைச் சும்மா விடுங்கள். அவர்களை என்னிடத்தில் வரத் தடை செய்யாதேயுங்கள். ஏனெனில் மோட்ச இராச்சியம் அப்படிப்பட்டவர்களு டையது என்று சொல்லி, (மத். 18:3.)

Matthew 19:14

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின்கீழ் நேரிடு வதெல்லாம் அததற்குக் குறிக்கப் பட்ட கெடுவின்படி நடக்கின் றனவே.

Ecclesiastes 3:1

ஏனெனில், உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை; இங் கிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோக வுங் கூடாது என்பதற்குச் சந்தேக மில்லை. (யோப். 1:21; சங்கப். 5:14.)
ஆகையால் அன்னமும் ஆடையும் இருந்தால், இதுவே நமக்குப் போதுமென்று இருக்கக்கடவோம். (பழ. 27:26, 27.)

1 Timothy 6:7-8

ஐயையோ! ஐயோ! ஆண்ட வரே, தேவனே! உமது பராக்கிரமத் தினாலும் புஜ பலத்தினாலும் வானத் தையும் பூமியையும் படைத்தீர்; உம்மாலாகாதது ஏதுமில்லை.

Jeremiah 32:17

வானமும் பூமியும் ஒழிந்து போம். என் வார்த்தைகளோ ஒழிந்து போகாது. (மாற். 13:31.)

Matthew 24:35

ஆதியிலே கடவுள் பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்தார். (சங். 32:6; 135:5: சர்வப். 18:1; அப். 14:14; 17:24.)
பூமியோவெனில் உருவமற்றதும் வெறுமையுற்றதுமாயிருந்தது; அன்றியும் பாதாளத்தின் முகத்தே இருள் வியாபித்திருந்தது; தேவ ஆவியானவர் தண்ணீரின்மீது அசைவாடிக்கொண்டிருந்தார்.

Genesis 1:1-2

மகா அன்பரே, இப்போது நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம். இனி எவ்விதமாயிருப்போ மென்பது இன்னும் நமக்கு வெளிப்படவில்லை. அவர் தோன்றும்போது அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிவோம். ஏனெனில் அவர் இருக்கிறமாதிரியே அவரைத் தரிசிப்போம்.
மீளவும் அவர்மேல் இந்த நம்பிக் கை வைத்திருக்கிறவனெவனும், அவர் பரிசுத்தமாயிருக்கிறதுபோல் தன்னை யும் பரிசுத்தமாக்கிக்கொள்ளுகிறான்.

1 John 3:2-3

வானமண்டலத்தில் தமது ஆசனத்தை அமர்த்தியவரும், பூத பெளதீகாதிகளைப் பூமிமீது நிலைப் பித்தவரும், சமுத்திர சலங்களை உயர அழைப்பவரும், அவைகளைப் புவனத்தின்மீது இறைப்பவருமாகிய ஆண்டவரெனும் நாமரான தேவன் இங்ஙனஞ் செய்வார்; இது திண்ணம் (ஆமோஸ்.5:8).

Amos 9:6

ஏனெனில் நமக்குள்ள போராட்டம் மாம்சத்தோடும், இரத்தத்தோடு மல்ல; துரைத்தனங்களோடும் வல்லமைகளோடும் இந்த அந்தகார உலகாதி பதிகளோடும், ஆகாசமண்டலங்களி லுள்ள அக்கிரம அரூபிகளோடும் நாம் போராடவேண்டியிருக்கிறது. *** 12. ஆகாச மண்டலம் என்பது வானமண்டலங்களின் கீழ்ப்பாகங்களாம். இவைகளில் சர்வேசுரன் தமது திருவுளத்தின்படிக்கு கெட்ட அரூபிகளை உலாவும்படி சிலவிசைகளில் உத்தரவு தருகிறார். நமது ஞான யுத்தம் மனிதரோடு அல்ல, கெட்ட அரூபிகளோடுதான்.

Ephesians 6:12


துஷ்டனுடைய அதிகாரத்தில் அவனை ஒப்புக்கொடும்; பசாசு அவனுடைய வலதுபாரிசத்திலே குடிகொண்டிருக்கட்டும்.

Psalms 108:5

இது மிகப் பிரலாபத்துக்குரிய விஷயமன்றோ? அவன் வந்த பிரகா ரமே திரும்பிப்போவான்; அவன் இப்படி விருதாவில் உழைத்ததினால் அவனுக்குப் பலனென்ன காணும்?

Ecclesiastes 5:15

பூமிக்கு வானமண்டலங்கள் துலையிட்டிருப்பதுபோல், நமது வழிகள் உங்கள் வழிகளுக்கும், நமது எண்ணங்கள் உங்கள் எண்ணங்களுக் கும் உயர்ந்திருக்கின்றன.

Isaiah 55:9

மனிதன் அந்தகாரத்தில் மறைந் தாலும் நாம் அவனைப் பார்க்கோமா என்கிறார் கர்த்தர்; நாம் வானத் தையும் பூமியையும் நிரப்பிக் கொண்டிருக்கவில்லையா என்கிறார் கர்த்தர்.

Jeremiah 23:24

சகல தீவினைகளிலும் நின்று ஆண்டவர் என்னை இரட்சித்தார். அவரே தம்முடைய பரம இராச்சியத்தில் என்னை க்ஷேமமாய்ச் சேர்த்தருளுவார். அவருக்கே அநவரத காலங்களிலும் மகிமை உண்டாகக்கடவது. ஆமென்.

2 Timothy 4:18

சேசுநாதர் அவனை நோக்கி: நீ உத்தமனாயிருக்க விரும்பினால், போய், உனக்குள்ளவைகளை விற்றுத் தரித்திரருக்குக்கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷ முண்டாயிருக்கும். பின்னும் வந்து என்னைப் பின்செல் என்றார்.

Matthew 19:21

அவர் இவைகளைச் சொன்ன பின்பு, அவர்கள் பார்த்துக்கொண் டிருக்க, உயர எழுந்தருளினார். அப் பொழுது ஓர் மேகம் வந்து அவர்களு டைய கண்களுக்கு அவரை மறைத்தது.

Acts 1:9

பின்பு அவர்களை வெளியே பெத்தானியாவுக்குக் கூட்டிக் கொண்டு போய், தம்முடைய கரங்களை உயர்த்தி அவர்களை ஆசீர்வதித்தார்.
அப்பொழுது சம்பவித்ததேதெனில் அவர்களை அவர் ஆசீர்வதிக்கும்போது, அவர்களிடத்திலிருந்து பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். (மாற். 16:19.)

Luke 24:50-51


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |