16. பின்பு (இவ்வுலகத்தில்) உயி ரோடே விடப்பட்டிருக்கிற நாம் அவர் களோடேகூட மேகங்களில் எடுபட்டு, ஆகாயத்தில் கிறீஸ்துநாதருக்கு எதிர் கொண்டுபோய், அப்படியே ஆண்ட வரோடு எப்போதும் இருப்போம்.
17. ஆனபடியினாலே இந்த வார்த்தைகளைக்கொண்டு நீங்கள் ஒருவ ரொருவரைத் தேற்றிக்கொள்ளுங்கள். * 17. தெசலோனிக்கேய சபையார் தங்களில் மரிக்கிறவர்களை ப்பற்றி மிகவும் துக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஆறுதலாக அர்ச். சின்னப்பர் போதித்த தன்மையாவது: நம்பிக்கையற்ற அஞ்ஞானிகளைப் போல் நீங்களும் உங்கள் மரித்தோர்களைக் குறித்துத் துக்கப்படவேண்டாம். ஏனெனில், அவர்கள் என்றென்றைக்கும் மரித்தவர்களல்ல. அவர்களுடைய மரணம் நித்திரையைப்போலிருக்கிறது. அவர்கள் மறுபடியும் உயிர்த்தெழுந்திருப்பார்கள். அதெப்படியென்றால், உலகமுடிவிலே சேசுநாதர் சம்மனசுக்கள் சூழ, மிகுந்த மகிமைப் பிரதாபத்தோடு பரலோகத்தினின்று இறங்கி வந்து, அதிதூதர் நான்கு திசைகளிலும் கேட்கும்படி எக்காளம் ஊதி: மரித்தோரே எழுந்திருங்களென்று கூப்பிடக் கற்பிப்பார். அப்பொழுது கிறீஸ்துநாதருடைய சமாதான ஐக்கியத்தில் மரித்தவர்களாகிய சகலரும் ஒரு க்ஷணத்தில் கல்லறைகளைவிட்டு எழுந்து, அப்போது உயிரோடிருக்கும் மற்ற விசுவாசிகளோடு ஏகோபித்துக் கிறீஸ்துநாதருக்கு எதிர்கொண்டுபோய் அவரோடேகூடப் பரமண்டலங்களில் ஏறி என்றென்றைக்கும் அவருடனேகூடப் பாக்கியமாயிருப்பார்கள். ஆகையால் இந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கிற நீங்கள் இந்த வாக்கியங்களைக் கொண்டு ஒருவரொருவரைத் தேற்றி ஆறுதலடைந்திருங்கள் என்கிறார். இதிலே அர்ச். சின்னப்பர் அந்தச் சபையார்களுக்கு ஆறுதல் வருவிக்கவேண்டுமென்கிற கருத்தாயிருந்தபடியால், நடுத்தீர்வையில் நடக்கப்போகிற மற்றவைகளெல்லாம் சொல்லாமல் விட்டுவிட்டு, ஆறுதலுக்கு ஏதுவானவைகளை மாத்திரம் இங்கே காட்டுகிறார். அதைப்பற்றியே முதலாவது, கிறீஸ்துநாதரிடத்தில் மரித்தவர்களுடைய உத்தானத்தைக் குறித்துப் பேசுகிறார். ஆனால் 1 கொரிந்தியர் 15-ம் அதி. 51-ம் வசனத்தில் கிறீஸ்துநாதரிடத்தில் மரித்தவர் களுமன்றிப் பாவிகளும் உயிர்ப்பார்கள் என்கிறார். 2-வது. சேசுநாதர் நடுத்தீர்க்க வரும் போது உயிரோடிருக்கிறவர்கள் ஒரு க்ஷணத்தில் மரித்து உயிர்ப்பார்களென்று சொல்லாமல், முன் மரித்தவர்கள் உயிர்த்தெழுந்தவுடன் அவர்களும் இவர்களும் ஒன்றாகக்கூடி ஆகாயத்தில் எழுந்து சேசுநாதருக்கு எதிராகப் போவார்கள் என்கிறார். ஆகையால் அப்போது உயிரோடிருப்பவர்கள் மரிப்பதில்லையென்று சிலர் நினைப்பதற்கு இட மாகிறது. ஆயினும் அர்ச். சின்னப்பரே எபிரேயர் 9-ம் அதி. 27-ம் வசனத்தில் சொல்லு மாப்போல தேவ தீர்மானத்தால் எல்லா மனிதர்களும் மரிக்கவேண்டியதென்பத

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save