Topic : Heaven

என் தந்தையின் இல்லத்திலே உறைவிடங்கள் பல உள்ளன; இல்லாதிருந்தால் உங்களுக்குச் சொல்லி இருப்பேன். ஏனெனில், உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்.

John 14:2

இவ்வுலகில் உள்ளவற்றின்மீது மனத்தைச் செலுத்தாமல் மேலுலகிலுள்ளவற்றின் மீதே மனத்தைச் செலுத்துங்கள்.

Colossians 3:2

அதிதூதரின் குரலொலியும் கடவுளின் எக்காளமும் அடையாளமாக முழங்க, ஆண்டவர் தாமே வானிலிருந்து இறங்கி வருவார். அப்போது கிறிஸ்துவுக்குள் இறந்தோர், முதலில் உயிர்த்தெழவர்.
அதன் பின்னரே உயிரோடு எஞ்சி நிற்கும் நாம் அவர்களோடு கூட ஒன்றாய் மேகங்கள் மீது தூக்கிச் செல்லப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளப் போவோம். போய், ஆண்டவரோடு எப்போதும் இருப்போம்.

1 Thessalonians 4:16-17

நமக்கோ வானகமே தாய்நாடு. அங்கிருந்து மீட்பர் வருவாரெனக் காத்திருக்கிறோம்.

Philippians 3:20

உம்மைத் தவிர எனக்கு வானுலகில் உள்ளவர் யார்? உம்மோடு நான் வாழ்ந்தால் இவ்வுலகில் இன்பம் தருவது எதுவுமில்லையே!

Psalms 73:25

வானங்கள் கடவுளின் மாட்சிமையைச் சாற்றும்: வான மண்டலம் அவரது கைத்திறனை எடுத்துரைக்கும்.
பகல்தோறும் பகல் அதைத் தெரிவிக்கிறது: இரவு தோறும் இரவு அதை அறிவிக்கிறது.

Psalms 19:1-2

"மண்ணுலகில் செல்வம் சேர்த்துவைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அழித்துவிடும்; திருடரும் கன்னமிட்டுத் திருடுவர்.
ஆனால் விண்ணுலகில் செல்வம் சேர்த்துவையுங்கள். அங்கே பூச்சியும் துருவும் அழிப்பதில்லை; திருடரும் கன்னமிட்டுத் திருடுவதில்லை.

Matthew 6:19-20

சீடர் அவர்களை அதட்டினர். இயேசுவோ அவர்களிடம், "குழந்தைகள் என்னிடம் வருவதைத் தடுக்க வேண்டாம். வரவிடுங்கள். ஏனெனில், விண்ணரசு இத்தகையோரதே" என்றார்.

Matthew 19:14

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காலம் உண்டு; வானத்தின்கீழ் நிகழ்வனவெல்லாம் அதற்குக் குறிக்கப்பட்ட கெடுவின்படி நடக்கின்றன. பிறக்க ஒரு காலமுண்டு;

Ecclesiastes 3:1

பிறந்த பொழுது நாம் ஒன்றையும் கொண்டுவரவில்லை. இறக்கும் பொழுது எதையும் எடுத்துச் செல்லவும் முடியாது.
எனவே, உணவு, உடையோடு மனநிறைவுகொள்வோம்.

1 Timothy 6:7-8

ஆண்டவராகிய இறைவனே, உம்முடைய மிகுந்த வல்லமையாலும், நீட்டிய கரத்தாலும் வானத்தையும் பூமியையும் படைத்தவர் நீரே;

Jeremiah 32:17

விண்ணும் மண்ணும் ஒழிந்துபோம்; என் வார்த்தைகளோ ஒழியவே ஒழியா.

Matthew 24:35

ஆதியிலே கடவுள் விண்ணையும், மண்ணையும் படைத்தார்
பூமி உருவமற்றதும் வெறுமையுற்றதுமாய் இருந்தது. பாதாளத்தின் முகத்தே இருள் பரவியிருந்தது. கடவுளின் ஆவியானவர் தண்ணீரின் மீது அசைவாடிக் கொண்டிருந்தார்.

Genesis 1:1-2

அன்புக்குரியவர்களே, இப்போது நாம் கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் வெளிப்படும்போது, அவரைப்போலவே நாமும் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
அவர்மேல் இந்த நம்பிக்கை கொள்ளும் எவனும் அவர் குற்றமற்றவராய் இருப்பதுபோலத் தன்னையும் குற்றமற்றவனாய்க் காத்துக் கொள்வான்.

1 John 3:2-3

அவரே வானத்தில் தம் மேலறைகளைக் கட்டுகிறவர், வானவளைவை நிலத்தில் அடிப்படையிட்டு நாட்டுகிறவர்; கடல்களின் நீரை முகந்தெடுத்து நிலத்தின் மேலே பொழிகிறவர் அவரே; ஆண்டவர் என்பது அவரது பெயராம்.

Amos 9:6

ஏனென்றால், நாம் வெறும் மனிதர்களோடு போராடுவதில்லை. தலைமை ஏற்போர், அதிகாரம் தாங்கவோர், இருளில் மூழ்கிய இவ்வுலகின்மீது ஆதிக்கம் செலுத்துவோர். வான்வெளியில் திரியும் தீய ஆவிகள் ஆகிய இவர்களோடு போராடுகிறோம்.

Ephesians 6:12

ஆண்டவர் பெயரால் நமக்கு உதவி உண்டு: விண்ணும் மண்ணும் படைத்தவர் அவரே.

Psalms 124:8

இறைவனே, நீர் வானங்களுக்கு மேலாக உன்னதராய் விளங்கியருளும்: உமது மாட்சிமை புவியனைத்தும் விளங்குவதாக.

Psalms 108:5

இது மிக வருந்தத்தக்க செயலன்றோ? அவன் வந்ததுபோலவே திரும்பிப் போவான். அவன் இப்படி வீணில் உழைத்தனால், அவனுக்குப் பயன் என்ன?

Ecclesiastes 5:15

மண்ணிலிருந்து விண் மிக உயர்ந்திருப்பது போல் உங்கள் வழிகளை விட நம்முடைய வழிகளும், உங்கள் எண்ணங்களை விட நம்முடைய எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன.

Isaiah 55:9

நம் கண்களுக்குப் புலப்படாதபடி மனிதன் மறைவிடங்களில் ஒளிந்துகொள்ள முடியுமா? என்கிறார் ஆண்டவர். நாம் வானத்தையும் பூமியையும் நிரப்பிக் கொண்டுள்ளோமன்றோ? என்கிறார் ஆண்டவர்.

Jeremiah 23:24

ஆண்டவர் எனக்கு உண்டாகும் எல்லாத் தீங்குகளினின்றும் என்னை விடுவித்து மீட்பளித்துத் தம்முடைய வானக அரசினுள் என்னைச் சேர்த்துக்கொள்வார். அவருக்கே என்றென்றும் மகிமை உண்டாகுக. ஆமென்.

2 Timothy 4:18

அதற்கு இயேசு, "நீ நிறைவு பெற விரும்பினால், போய் உன் உடமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடு. வானகத்தில் உனக்குச் செல்வம் கிடைக்கும். பின்னர் வந்து என்னைப் பின்செல்" என்றார்.

Matthew 19:21

இதைச் சொன்னபின்பு, அவர்கள்கண்முன்பாக அவர் மேலே உயர்த்தப்பெற்றார். மேகம் ஒன்று வந்து அவர்களுடைய பார்வையிலிருந்து அவரை மறைத்துக்கொண்டது.

Acts 1:9

பெத்தானியாவை நோக்கி அவர்களைக் கூட்டிச்சென்று, கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசிகூறினார்.
அப்படி ஆசி கூறுகையில் அவர்களை விட்டுப் பிரிந்து, வானகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பெற்றார்.

Luke 24:50-51


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |