Topic : Heart

உன் இருதயத்தை எவ்வித எச்சரிக்கையுடனும் பாதுகாத்துக் கொள்! ஏனெனில், சீவியமே அதி னின்று புறப்படுகின்றது.

Proverbs 4:23

உங்களுடைய அலங்கரிப்பு கூந்தலைப் பின்னுவதும், பொன்னாபரணங்களை அணிவதும், அல்லது உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்வதுமாகிய வெளி அலங்கரிப்பாயிராமல், (1 தீமோ. 2:9; இசை. 3:18-24.)
இருதய உள்ளரங்க மனுஷத்துவமானது சாந்தமும் அமரிக்கையுமான மனத்தூய்மையினாலே அலங்கரிக்கப்படவேண்டியது. இதுவே சர்வேசுரனுடைய சமுகத்தில் விலையேறப்பெற்றது.

1 Peter 3:3-4

நீரில் பார்க்கிறவர்களுடைய முகம் எவ்வாறு துலங்குகின்றதோ அவ்வாறே மனிதர்களுடைய இதயங் கள் விவேகிகளுக்கு வெளியரங்க மாயிருக்கின்றன.

Proverbs 27:19

அவர் உம்மிடத்தில் சீவியத் தைக் கேட்டார்; நீர் என்றென்றைக் கும் சதாகாலமும் அவருக்குத் தீர்க் காயுசை அளித்தீர்.

Psalms 20:4

(என்றாலும்) சகலருடைய இருதயமுங் கெட்டது; அதனை அறிவ தரிது; அதனை அறிகிறவன் எவன்?
நாம் அல்லோ இருதயத்தை ஆராயுங் கர்த்தர்; உள்ளத்தைப் பரி சோதிக்கும் ஆண்டவர்; ஒவ்வொரு வன் நடத்தைக்கும் கிரியைகளின் பேறுபலனுக்கும் ஏற்ற வண்ணஞ் (சம்பாவனை) அளிக்கின்றோம் (1 அர. 16:7; சங். 7:10; காட்சி. 2:3).

Jeremiah 17:9-10

நீங்கள் நம்மைத் தேடுவீர்கள்; முழு இருதயத்தோடு தேடிய பின்னர், நம்மை அடைவீர்கள்.

Jeremiah 29:13

இரக்கமுஞ் சத்தியமும் உன்னை விட்டுவிடாதிருக்கும்; அவற்றை உன் கழுத்துக்கு (ஆரமாய்ச்) சூடு வாய்; உன் இருதயத்தில் பதியவைப் பாய்.
அப்போது நீ தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாகக் கிருபை யையும், நல்லறிவையுங் கண்டடை வாய்.

Proverbs 3:3-4

நீ உன் விமரிசையில் ஊன்றி நில்லாமல், உன் முழு இருதயத்து டனே ஆண்டவரில் நம்பிக்கை வை.
உன் சகல வழிகளிலும் அவரை நினைப்பாயாகில் அவர் உன் பாதச் சுவடுகளை நடத்துவார்.

Proverbs 3:5-6


ஆண்டவர் சமுவேலை நோக்கி: நீ அவனுடைய முகத்தையுஞ் சரீர உயரத்தையும் பார்க்காதே; ஏனெ னில், நான் அவனைத் தள்ளிவிட் டேன். மனுஷன் பார்க்கிறது ஒரு விதம், நாம் தீர்மானிக்கிறது வேறு விதம்; மனிதன் வெளிக்குத் தோன்று பவைகளைப் பார்க்கிறான்; ஆண்ட வர் இருதயத்தைப் பார்க்கிறா ரென்று சொன்னார் (சங். 7:10).

1 Samuel 16:7

சேசுநாதர் அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தாவை உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்து மத்தோடும், உன் முழு மனதோடும் சிநேகிப்பாயாக. (உபாக. 6:5.)

Matthew 22:37

உமது கோபத்தின் முகத்தே எனது திரேகத்தில் சுகமற்றுப் போயிற்று, என் பாவங்களின் முகத்தே என் எலும்புகள் உறவற்றுக் கலகலத் துப்போயின.

Psalms 37:4

ஆகிலும் மனவருத்தத்தோடுமல்ல, கட்டாயத்தினாலுமல்ல, அவனவன் தன் இருதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கக்கடவான். ஏனென்றால் முகமலர்ந்து கொடுக்கிறவனிடத்தில் சர்வேசுரன் பிரியப்படுகிறார். (சர்வப். 35:11.)

2 Corinthians 9:7

ஆனந்திக்கிற மனம் உடலை மலரச் செய்கிறது; துயரமான மனம் எலும்புகளைகூட வற்றச்செய் கிறது (பழ. 15:13).

Proverbs 17:22

என் மகனே! என் பிரமா ணத்தை மறக்க வேண்டாம்; என் கற்பனைகளையும் உன்னிருதயங் காப்பதாக!
ஏனெனில், அவை உனக்கு நீடிய ஆயுளையும், சீவியத்தின் அநேக வருஷங்களையும், சமாதானத்தை யுந் தரும்.

Proverbs 3:1-2

இருதயத்தில் ஞானமுள்ளவன் கற்பனைகளைக் கைக்கொள்ளு கிறான்; மதிகெட்டவனோ உதடுகளால் அடிபடுகிறான்.

Proverbs 10:8



விஷ நாகத்தின்பேரிலும் வலு சர்ப்பத்தின்பேரிலும் நடப்பாய்; சிங்கக்குட்டியையும் பறவை அரவத் தையும் நீ மிதித்துப்போடுவாய்.

Psalms 90:12


ஆனாலும் தேவனாகிய கர்த்த ருடைய தாசனான மோயீசன் உங்க ளுக்குக் கொடுத்த கட்டளைகளை யும், சட்டப்பிரமாணங்களையும் கெட்டியாய்க் கைக்கொண்டு நுணுக் கமாய் நிறைவேற்றுவதில் சாக்கிரதை யாயிருங்கள்; அதுகள் என்னவென் றால்: நீங்கள் கர்த்தரில் அன்புகூர்ந்து அவருடைய எல்லா வழிகளிலும் நடந்து, அவர் கற்பனைகளை அனு சரித்து, அவரைப் பற்றிக்கொண்டு உங்கள் முழு இருதயத்தோடும் முழு மனதோடும் அவரைச் சேவிக்க வேண்டும் என்பதேயாமென்றான்.

Joshua 22:5

ஆண்டவரே, அநியாயம் பேசு கிற உதடுகளுக்கும் கபடுள்ள நாவுக் கும் என்னைத் தப்புவியும்.

Psalms 119:2

எவனாகிலும் இந்த மலையை நோக்கி: நீ பெயர்ந்து சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவென்று சொல்லி, தான் சொன்னபடியே ஆகுமென்று தன் இருத யத்தில் தத்தளியாமல் விசுவசித்தால், அவனுக்கு அநுகூலமாகுமென்று மெய் யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Mark 11:23




All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |