5. ஆனாலும் தேவனாகிய கர்த்த ருடைய தாசனான மோயீசன் உங்க ளுக்குக் கொடுத்த கட்டளைகளை யும், சட்டப்பிரமாணங்களையும் கெட்டியாய்க் கைக்கொண்டு நுணுக் கமாய் நிறைவேற்றுவதில் சாக்கிரதை யாயிருங்கள்; அதுகள் என்னவென் றால்: நீங்கள் கர்த்தரில் அன்புகூர்ந்து அவருடைய எல்லா வழிகளிலும் நடந்து, அவர் கற்பனைகளை அனு சரித்து, அவரைப் பற்றிக்கொண்டு உங்கள் முழு இருதயத்தோடும் முழு மனதோடும் அவரைச் சேவிக்க வேண்டும் என்பதேயாமென்றான்.