Topic : Father

ஆகாயத்தில் நின்று விழுகிற தண்ணீரால் பர்வதங்களை நனைக் கிறீர்; உம்முடைய கிருபைகளின் பலனாலே பூமி திருப்தியடையும்.

Psalms 103:13

நாம் சர்வேசுரனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்பட்டு, மெய்யாகவே அவருக்குப் பிள்ளைகளாயிருக்கும்படிக்கு எத்தன்மையான பரம அன்பைப் பிதாவானவர் நமக்குத் தந்தருளினாரென்று பாருங்கள். ஆகையால் உலகம் நம்மை அறியாதிருந்தால், அது அவரையும் அறியாதிருப்பதே அதற்குக் காரணம். (உரோ. 8:15.)

1 John 3:1

ஆண்டவருடைய கண்டிதத்தை என் மகனே! நீ தள்ளிவிடாதே; அவ ரால் கண்டிக்கப்படுகையிலுஞ் சோர்ந்து போகாதே (எபி.12:5; காட்சி.3:19).
ஏனெனில், ஆண்டவர் தாம் சிநேகிக்கிறவனைக் கண்டிக்கிறார்; தகப்பன் தன் மகளில் சந்தோஷிப் பதுபோல் அவருஞ் சந்தோஷிக் கிறார்.

Proverbs 3:11-12

நீயோவென்றால் ஜெபம் செய் யும்போது உன் அறைக்குள் பிரவேசித் துக் கதவைச் சாத்தி அந்தரங்கத்தில் உன் பிதாவைப் பிரார்த்தித்துக்கொள். அப்போது அந்தரங்கத்தில் காண்கிற உன் பிதா உனக்குப் பலன் அளிப்பார். * 6. அந்தரங்கத்தில்:- நாம் செய்கிற நற்கிரியைகளில் சிலவற்றை மனிதர் கண் முன்பாகத்தான் செய்யும்படியாய் வரும். ஆனால் அவைகளை மனிதர் புகழ்ச்சிக்காகச் செய்யாமல் சர்வேசுரனுக்குப் பிரியப்படவேணுமென்கிற கருத்தோடே செய்யவேண்டியது.

Matthew 6:6

பிதாவே, உலக சிருஷ்டிப்புக்கு முன் நீர் என்னைச் சிநேகித்ததினாலே, நீர் எனக்குத் தந்தருளின மகிமையை நீர் எனக்குத் தந்தருளினவர்களும் காணும்படியாக, நான் இருக்கிற இடத் தில் அவர்களும் என்னோடிருக்க வேண்டுமென்று மனதாயிருக்கிறேன். (அரு. 12:26.)

John 17:24

உலகத்தையும் உலகத்திலுள்ளவைகளையும் சிநேகியாதேயுங்கள். ஒருவன் உலகத்தைச் சிநேகித்தால், அவனிடத்தில் பிதாவின் சிநேகமிராது.

1 John 2:15

ஆகாயப் பட்சிகளை நோக்கிப் பாருங்கள்; அவைகள் விதைக்கிறது மில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சி யங்களில் குவிக்கிறதுமில்லை . ஆகிலும் அவைகளை உங்கள் பரம பிதா போஷித்து வருகிறாரே. அவைகளிலும் நீங்கள் மிகவும் மேன்மையுள்ளவர்கள் அல்லவோ?

Matthew 6:26

நான் அவைகளுக்கு நித்திய ஜீவியத்தைக் கொடுக்கிறேன். அவைகள் என்றென்றைக்குஞ் சேதமாய்ப் போவது மில்லை, என் கைகளினின்று அவை களை ஒருவனும் பறித்துக்கொள்ளுவது மில்லை. (உபாக. 32:39.)
என் பிதாவினால் எனக்குக் கொடுக்கப்பட்டது சர்வத்திலும் மேன்மையானதாய் இருக்கின்றது. என் பிதாவின் கையினின்று அதைப் பறித்துக் கொள்ள ஒருவனாலுங் கூடாது.
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். (அரு. 8:19; 12:45; 14:9.)

John 10:28-30

மதிகேடன் தன் பிதாவின் கண்டனையை நகைக்கிறான்; ஆனால் கண்டனைகளைக் காக்கிற வன் மிக விவேகியாவான். நீதித் துவம் எவ்வளவு மிகுவோ அவ்வள வாக அதிக மனத் திடனுண்டாகும்; அக்கிரமிகளின் சிந்தனைகளோ வெனில் வேருடன் கலைக்கப்படும்.

Proverbs 15:5

நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Philippians 4:20

சேசுநாதர் அவருக்கு மறுமொழியாக: ஒருவன் என்னைச் சிநேகித்தால், என் வாக்கியத்தை அநுசரிப்பான்; என் பிதாவும் அவனைச் சிநேகிப்பார். நாங்கள் அவனிடத்தில் வந்து அவனுக்குள் வாசம்பண்ணுவோம்.

John 14:23

யாரார் அவரை ஏற்றுக்கொண்டு, அவருடைய நாமத்தின்மேல் விசுவாச முள்ளவர்களானார்களோ, அவர்கள் தேவ புத்திரராகும்படி அவர்களுக்கு வல்லமையைக் கொடுத்தார். (உரோ. 8:14; கலாத். 3:26.)

John 1:12

ஒரு காசுக்கு இரண்டு அடைக் கலங் குருவிகள் விற்கப்படுகிறதல் லவோ? ஆயினும் அவைகளில் ஒன்றா வது உங்கள் பிதாவின் சித்தமின்றித் தரையில் விழமாட்டாது. (லூக். 8:17.)
உங்கள் சிரசின் ரோமங்களெல் லாம் எண்ணப்பட்டிருக்கின்றன. (அப். 27:34.)
ஆதலால் அஞ்சாதிருங்கள்; அநே கம் அடைக்கலங் குருவிகளைவிட நீங்கள் மேலானவர்களாயிருக்கிறீர்கள்.

Matthew 10:29-31

சிறு மந்தையே, நீங்கள் பயப்படாதேயுங்கள்; ஏனெனில் உங்களுக்குத் தம்முடைய இராச்சியத்தைத் தரும்படி உங்கள் பிதாவுக்குச் சித்தமாயிற்று.

Luke 12:32

ஏனெனில் சர்வேசுரனுடைய பிள்ளைகள் வெளிப்படுங் காட்சியைக் காணப் படைப்புகளெல்லாம் ஆவ லோடு காத்துக்கொண்டிருக்கின்றன.

Romans 8:19

சேசுநாதர் அவரை நோக்கி: வழியும், சத்தியமும், ஜீவனும் நானே. என் வழியாய் அல்லாதே பிதாவினிடத்தில் சேருகிறவன் ஒருவனுமில்லை.

John 14:6

உத்தமமான எந்தக் கொடையும், பூரணமான எந்த வரமும் ஒளிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்குவதால், மேலாவிலிருந்து வருகின்றது. அவரிடத்தில் யாதொரு வேற்றுமையும், விகற்பத்தின் நிழலுமில்லை. (மத். 7:11.)

James 1:17

ஏனெனில், ஒரு பாலன் நமக்குப் பிறந்தார், சுதன் நமக்கு அளிக்கப் பட்டார்; அவர் மீது தோள்மீது தமது அரசாட்சியது அடையாளத்தைக் கொண்டிருப்பார்; அவர் அதிசயர் எனவும், புத்திப் பிரபோதகர் எனவும், தேவர் எனவும், ஞகத்துவர் எனவும், எதிர்காலப் பிதாவெனவும், சமாதானப் பிரபு எனவும் அழைக் கப்படுவர்.

Isaiah 9:6

தமது சொந்தக் குமாரன்மேல் முதலாய் இரக்கமில்லாமல், நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர் மற்றெல்லாவற்றையும் அவரோடு நமக்குத் தானம் பண்ணாதிருப்பதெப்படி? (அரு. 3:16.)

Romans 8:32

நீங்கள் என் நாமத்தினாலே பிதாவை ஏதேது கேட்பீர்களோ, சுதனிடத்தில் பிதா மகிமைப்படும்பொருட்டு, நான் அதைச் செய்தருளுவேன். (மத். 7:7; மாற். 11:24; அரு. 16:23.)

John 14:13

என் கற்பனைகளைக் கைக்கொண்டு அவைகளை அநுசரிக்கிறவன் எவனோ, அவனே என்னைச் சிநேகிக்கிறவன். என்னைச் சிநேகிக்கிறவனோ என் பிதாவினால் சிநேகிக்கப்படுவான். நானும் அவனைச் சிநேகித்து, அவனுக்கு என்னைத்தானே வெளிப்படுத்துவேன் என்றார்.

John 14:21

நான் என் பிதாவை மன்றாடக் கூடாதென்றும், அவர் பன்னிரண்டு சேனைக்கதிகமான தேவதூதர்களை இக்ஷணமே என்னிடத்தில் அனுப்ப மாட்டாரென்றும் நினைக்கிறாயோ?

Matthew 26:53

என் பிதாவின் விட்டிலே அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஏனெனில் உங்களுக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தஞ் செய்யப்போகிறேன். * 2. அப்போஸ்தலர்களுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட புண்ணியாத்துமாக்களுக்கும் மோட்சத்திலே நித்தியமாய் வாசஸ்தலம் தயாராயிருந்தாலும், கர்த்தர் பரலோகத்துக்கு எழுந்தருளும் வரையில் பரகதியின் வாசல் அடைபட்டிருந்ததால், அவர் அதைத் திறந்து, அவரவருடைய பேறுபலன்களுக்கு அளவாய் பேரின்ப மகிமையைத் தயாராக்குவாரென்பது இவ்வாக்கியத்தின் கருத்து.

John 14:2

சர்வேசுரனை ஒருவனும் ஒரு போதுங் கண்டதில்லை. பிதாவின் மடியிலிருக்கிற ஏக சுதனே அவரை வெளிப்படுத்தினார். (1 தீமோ. 6:16; 1 அரு. 4:12.)

John 1:18

நீயோ உபவாசமாயிருக்கும் போது உன் சிரத்தைத் தைலத்தால் பூசு, உன் முகத்தையும் கழுவு.
உபவாசமாய் இருக்கிறாயென்று மனிதர்களுக்குத் தோன்றாமல் அந் தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்குத் தோன்றும்படி (அப்படிச்செய்). அப் போது அந்தரங்கத்தில் காண்கிற உன் பிதா உனக்குச் சம்பாவனையளிப்பார்.

Matthew 6:17-18


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |