Topic : Father

தந்தை தம் மக்களுக்கு அன்பு காட்டுவது போல, ஆண்டவர் தமக்கு அஞ்சுவோருக்கு இரக்கம் காட்டுகிறார்.

Psalms 103:13

பரம தந்தை நம்மிடம் காட்டிய அன்பு எவ்வளவு என்று பாருங்கள்! நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுகிறோம். அவருடைய மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்து கொள்ளாததால் தான், நாம் எத்தன்மையரென்பதையும் அது அறிந்துகொள்வதில்லை.

1 John 3:1

ஆண்டவருடைய கண்டனத்தை, என் மகனே, நீ தள்ளிவிடாதே. அவரால் கண்டிக்கப்படுகையிலும் சோர்ந்து போகாதே.
ஏனென்றால், ஆண்டவர் தாம் நேசிப்பவனைக் கண்டிக்கிறார். தந்தை தன் மகனைப்பற்றி மகிழ்வதுபோல் அவரும் மகிழ்கிறார்.

Proverbs 3:11-12

நீயோ செபம் செய்யும்பொழுது, உன் அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டு, மறைவாயுள்ள உன் தந்தையை நோக்கிச் செபம் செய். மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.

Matthew 6:6

தந்தாய், நானிருக்கும் இடத்திலே நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களும் என்னோடிருக்கும்படி விரும்புகிறேன். இதனால், உலகம் உண்டாகுமுன்பு நீர் என்மேல் அன்பு வைத்து எனக்களித்த மகிமையை அவர்கள் காண்பார்கள்.

John 17:24

உலகின்மீதும் அதிலுள்ள எதன்மீதும் அன்பு வைக்காதீர்கள். உலகின்மீது ஒருவன் அன்பு வைத்தால், பரம தந்தையின் மீது அவனுக்கு அன்பு இல்லை.

1 John 2:15

வானத்துப் பறவைகளைப் பாருங்கள். அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் வானகத் தந்தை அவற்றிற்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றிலும் மிக மேலானவர்களன்றோ ?

Matthew 6:26

நான் அவற்றிற்கு முடிவில்லாவாழ்வு அளிக்கிறேன்; அவை என்றும் அழியா. எவனும் என் கையிலிருந்து அவற்றைக் கவர்ந்துகொள்வதில்லை.
அவற்றை எனக்களித்த என் தந்தை அனைவரிலும் பெரியவர்; என் தந்தையின் கையிலிருந்து எவனும் அவற்றைக் கவர்ந்துகொள்ள முடியாது.
நானும் தந்தையும் ஒன்றே."

John 10:28-30

அறிவிலி தன் தந்தையின் கண்டனத்தை நகைக்கிறான். ஆனால், கண்டனங்களை ஏற்றுக் கொள்கிறவன் மிக விவேகியாவான். நீதி எவ்வளவு மிகுமோ அவ்வளவாக அதிக மனத்திடன் உண்டாகும். அக்கிரமிகளின் சிந்தனைகளோ வேருடன் கலைக்கப்படும்.

Proverbs 15:5

நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மகிமை உண்டாகுக. ஆமென்.

Philippians 4:20

இயேசு மறுமொழியாகக் கூறினார்: "ஒருவன் எனக்கு அன்பு செய்தால் என் வார்த்தையைக் கேட்பான்; என் தந்தையும் அவன்மேல் அன்புகூர்வார்; நாங்களும் அவனிடம் வந்து, அவனோடு குடிகொள்வோம்.

John 14:23

ஆனால், அவர் தமது பெயரிலே விசுவாசம் வைத்துத் தம்மை ஏற்றுக்கொண்ட அனைவருக்கும் கடவுளின் மக்களாகும் உரிமை அளித்தார்.

John 1:12

காசுக்கு இரண்டு குருவி விற்பதில்லையா ? எனினும், அவற்றில் ஒன்றுகூட உங்கள் தந்தையால் அன்றி, நிலத்தில் விழாது.
உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது.
எனவே, அஞ்சாதீர்கள். ஏனெனில், குருவிகள் பலவற்றினும் நீங்கள் மேலானவர்கள்.

Matthew 10:29-31

"சிறு மந்தையே, அஞ்சாதே; ஏனெனில், உங்கள் தந்தை தம் அரசை உங்களுக்குக் கொடுக்கத் திருவுளம் கொண்டார்.

Luke 12:32

இம்மகிமையுடன் கடவுளுடைய மக்கள் வெளிப்பட வேண்டுமென்று படைப் பனைத்துமே ஏக்கத்தோடு எதிர்நோக்கியிருக்கிறது.

Romans 8:19

இயேசு அவரிடம் கூறியதாவது: "நானே வழியும் உண்மையும் உயிரும். என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை.

John 14:6

நன்மையான எக்கொடையும், நிறைவான எவ்வரமும், விண்ணினின்றே வருகின்றன. ஒளியெல்லாம் படைத்த தந்தையே அவற்றிற்குப் பிறப்பிடம். அவரிடம் எவ்வகை மாற்றமும் இல்லை; மாறி மாறி நிழல் விழச் செய்யும் ஒளியன்று அவர்.

James 1:17

ஏனெனில் நமக்காக ஒரு குழந்தை பிறந்துள்ளது, நமக்கு ஒரு மகன் தரப்பட்டுள்ளான்; ஆட்சியின் பொறுப்பு அவருடைய தோள் மேல் இருக்கும், அவருடைய பெயரோ, "வியத்தகு ஆலோசனையாளர், வல்லமையுள்ள இறைவன், முடிவில்லாத் தந்தை, அமைதியின் மன்னன்" என வழங்கப்படும்.

Isaiah 9:6

தம் சொந்த மகனென்றும் பாராமல், நம் அனைவருக்காகவும் அவரைக் கையளித்த அவர், தம் மகனோடு அனைத்தையும் நமக்கு அருளாதிருப்பாரோ?

Romans 8:32

நீங்கள் என் பெயரால் கேட்பதெல்லாம் செய்வேன்; இதனால் தந்தை மகனில் மகிமை பெறுவார்.

John 14:13

என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவனே எனக்கு அன்புகாட்டுகிறவன்; எனக்கு அன்புகாட்டுகிறவன் மேல் என் தந்தையும் அன்புகூர்வார். நானும் அவன்மேல் அன்புகூர்ந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்."

John 14:21

நான் என் தந்தையைக் கேட்டால் பன்னிரு படைகளுக்கு மிகுதியான தூதரை அவர் இப்பொழுது எனக்கு அளிக்கமாட்டார் என்று நினைக்கிறாயா ?

Matthew 26:53

என் தந்தையின் இல்லத்திலே உறைவிடங்கள் பல உள்ளன; இல்லாதிருந்தால் உங்களுக்குச் சொல்லி இருப்பேன். ஏனெனில், உங்களுக்கு ஓரிடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்.

John 14:2

யாரும் கடவுளை என்றுமே கண்டதில்லை; தந்தையின் அணைப்பிலுள்ள ஒரேபேறானவர்தாம் அவரை வெளிப்படுத்தினார்.

John 1:18

நீ நோன்பு இருக்கும்போது தலைக்கு எண்ணெய் தடவு; முகத்தைக் கழுவு.
அப்பொழுது நீ நோன்பு இருப்பது மனிதருக்குத் தெரியாமல், மறைவாயுள்ள உன் தந்தைக்குமட்டும் தெரியும். மறைவாயுள்ளதைக் காணும் உன் தந்தையும் உனக்குப் பிரதிபலன் அளிப்பார்.

Matthew 6:17-18


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |