Topic : Evangelism

ஏனெனில்: நீர் பூமியின் கடைசி எல்லைமட்டும் இரட்சிப்பாயிருக்கும் படிக்கு உம்மைப் புறஜாதியாருக்கு ஒளியாக ஏற்படுத்தினேன், என்றபடி ஆண்டவர் எங்களுக்கு இவ்விதமாய்க் கட்டளையிட்டிருக்கிறார் என்றார்கள். *** 47. இதில் சொல்லப்பட்ட வாக்கியம் இசையாஸ் தீர்க்கதரிசனம் 49-ம் அதி.

Acts 13:47

பின்னும் அவர் அவர்களுக்குத் திருவுளம் பற்றினதாவது: நீங்கள் உலக மெங்கும் போய், எல்லாச் சிருஷ்டிகளுக் கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.

Mark 16:15

ஆயினும் அவைகளில் யாதொன் றிற்கும் நான் பயப்படுகிறதுமில்லை; என்னைப்பார்க்கிலும் என் உயிரைப் பெரிய காரியமாக எண்ணுகிறதுமில்லை. சர்வேசுரனுடைய கிருபையின் சுவிசேஷத்துக்குச் சாட்சியஞ் சொல்லும்படி ஆண்டவராகிய சேசுநாதரிடத்தில் நான் பெற்றுக்கொண்ட பிரசங்கத் தொழிலை யும் நிறைவேற்றி, என் ஜீவிய அயனத் தையும் முடிப்பேனாகில் அதுவே போதும்.

Acts 20:24

தீபத்தைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்காமல் வீட்டிலுள்ள யாவருக்கும் பிரகாசிக்கும்படி அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள். (மாற். 4:21; லூக். 8:16.)
அவ்வண்ணமே மனிதர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரமண்டலங்களிலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும் பொருட்டு, உங்கள் ஒளி அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. (1 இராய. 2:12.)

Matthew 5:15-16

ஆகையால் நீங்கள் போய், சகல ஜாதி ஜனங்களுக்கும் உபதேசித்து: பிதாவுடையவும் சுதனுடையவும் இஸ்பிரீத்துசாந்துடையவும் நாமத் தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து, (மாற். 16:15.)
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவற்றையும் அனுசரிக்கும்படி அவர்களுக்குப் போதியுங்கள். இதோ நான் உலகமுடியுமட்டும் எந்நாளும் உங்களோடுகூட இருக்கிறேனென்று திருவுளம்பற்றினார். * 20. அப்போஸ்தலர்கள் மரிப்பார்களென்று சேசுநாதர் அறிந்திருந்தும், உலக முடியுமட்டும் அவர்களோடுகூடத் தாமிருக்கிறதாகச் சொல்லுகிறபடியால், அப்போஸ்தலர்களுடைய மரணத்துக்குப்பின், அவர்களுடைய ஸ்தானத்திலே இருக்கிறவர்களோடும் சேசுநாதர் சுவாமி வசிக்கிறாரென்று சொல்லவேண்டியது. அப்போஸ்தலர்களுடைய ஸ்தானங்களும் உலகமுடியுமட்டும் நிலைநிற்குமென்று நிச்சயமாயிருக்கிறது.

Matthew 28:19-20

ஏனெனில் சுவிசேஷத்தைப்பற்றி நான் கூச்சப்படேன். ஏனென்றால் முந்த யூதரிலும், பின்பு கிரேக்கரிலும் விசுவசிக் கிற எவனுக்கும் அது இரட்சணியமாகிய தேவ வல்லபமாயிருக்கின்றது. (மத். 10:32; 1 கொரி. 1:23; அப். 13:46.) *** 16. யூதரிலும் கிரேக்கரிலும்:- கிரேக்கத் தேசத்தார் சாதாரணமாய் அஞ்ஞானிகளாயிருந்ததினாலும், அவர்கள் பல தேசங்களில் பரவியிருந்ததினாலும், இவ்விடத்திலும், இன்னும் பல இடங்களிலும் கிரேக்கர் என்பது அஞ்ஞானிகளென்று அர்த்தங்கொள்ளுகிறது. சில சமயங்களில் யூதர்களல்லாத இதர ஜாதிகளென்றும் அர்த்தங்கொள்ளும். (மெனோக்கியுஸ்)

Romans 1:16

ஆண்டவர் நல்லவராகவும், அவருடைய கிருபாகடாட்சம் என்று முள்ளதுமாகவும் இருக்கிறபடி யினாலே அவரைத் துதியுங்கள் (யூதித். 13:21).

Psalms 105:1

ஆண்டவராகிய கிறீஸ்துநாதரை உங்கள் இருதயங்களில் அர்ச்சியுங்கள். உங்களிலுள்ள நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும், வணக்கத்தோடும் தகுந்த பதில் சொல்லும்படி எப்போதும் ஆயத்தமாயிருங்கள்.

1 Peter 3:15

ஆதலால் விசுவாசமானது கேள்வியால் வரும்; கேள்வியோ, கிறீஸ்துநாதருடைய வாக்கியத்தால் ஆகிறது.

Romans 10:17

நீங்கள் உலகத்தின் ஒளியாயிருக்கிறீர்கள். பர்வதத்தின்மேலிருக்கிற பட்டணம் மறைவாயிருக்கமாட்டாது. * 14. உலகத்தின் ஒளி:- சேசுநாதர் படிப்பித்த வேதம் மாத்திரமே உலகத்துக்கு மெய்யான வெளிச்சமாயிருக்கிறதினால், அதைப் போதிக்கக் குறிக்கப்பட்ட அப்போஸ்தலர்களும் உலகத்துக்கு ஒளியாயிருக்கிறார்களென்று சொல்லப்படுகிறார்கள்.

Matthew 5:14

அன்றியும் சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு அதிலே நிலைத்திருக்கிறீர்கள். (கலாத். 1:11.)
நான் உங்களுக்குப் பிரசங்கித்த பிரகாரம் நீங்கள் அதைக் கைக் கொண்டு நடந்தால், அதனாலே இரட்சிக்கப்படுவீர்கள். இல்லாதிருந்தால், நீங்கள் விசுவசித்தது வீணாயிருக்கும்.

1 Corinthians 15:1-2

அந்நாளையில் ஆண்டவருக் குத் துத்தியம் பாடுங்கள்; அவரு டைய நாமத்தைப் பிரார்த்தியுங்கள்; அவருடைய நவக் கிருத்தியங்களைப் பிரசைகள் நடுவில் பிரஸ்தாபியுங் கள்; அவருடைய நாமகரணமானது மேன்மை தங்கியதென ஸ்மரணை செய்யுங்கள்.

Isaiah 12:4

ஏனெனில் தன் உயிரைக் காக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான். ஆனால் என்னையும், சுவிசேஷத்தையும் பற்றித் தன் உயிரை இழந்து போகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான். (லூக். 17:33; அரு. 12:25.) * 35-ம் வசனத்துக்கு மத். 10-ம் அதி. 39-ம் வசனத்தின் வியாக்கியானங் காண்க.

Mark 8:35

நீங்கள் ஒருவரை ஒருவர் சிநே கித்தாலல்லோ, நீங்கள் என் சீஷர்க ளென்று எல்லாரும் இதனாலே அறிந்துகொள்வார்கள் என்றார்.

John 13:35

நீரோ, குணமான உபதேசத்துக் கேற்றவைகளைப் பேசும்.

Titus 2:1

நீங்கள் பூமியின் உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப் போனால் எதனால் சாரமாக்கப்படும்? இனி அது வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதரால் மிதிக்கப்படுவதற்கு மேயன்றி, வேறொன்றுக்கும் உதவாது. (மாற். 9:49; லூக். 14:34.) * 13. பூமியின் உப்பு:- உப்பானது, 1-வது, ஒரு பதார்த்தம் கெட்டுப்போகாதபடி காப்பாற்றுகிறது; 2-வது, போஜனத்துக்கு ருசி கொடுக்கிறது. அப்படியே, 1-வது, ஆத்துமங்கள் கெட்டுப்போகாமல் காப்பாற்றுவதும், 2-வது. ஜனங்கள் ஞானக்காரியங்களின் மேல் பிரியப்படும்படியான புத்தி பிரசங்கம் செய்கிறதும், வேதியர் தொழிலாமே.

Matthew 5:13

ஆகையால் சகோதரரே, எங்கள் பிரசங்கத்தினாலாவது, நிருபத்தினாலாவது நீங்கள் கற்றுக்கொண்ட போதக முறைகளைக் கடைபிடித்து நிற்பீர்களாக. (1 தெச. 2:13; 4:7.) * 14. வாக்கினாலாவது, எழுத்தினாலாவது தங்களுக்குப் போதிக்கப்பட்ட பாரம் பரியங்களை வித்தியாசமொன்றின்றி ஒரே தன்மையாய்க் காப்பாற்றி அவைகளில் நிலைத்திருக்கவேண்டுமென்று அர்ச். சின்னப்பர் தெசலோனிக்கேயருக்குக் கற்பிக்கிறார். ஆகையால் வேதப்பிரமாணத்தில் எழுதப்பட்ட வேதசத்தியங்களை மாத்திரம் கைக் கொண்டு, வாக்கினால் போதிக்கப்பட்டவைகளை ஏற்றுக்கொள்ளவொண்ணாதென்று சொல்லுகிறவர்கள் அர்ச். சின்னப்பருடைய போதகத்துக்கு விரோதமாய்ப் போதிக் கிறார்களென்றறிக. போதக முறைகள்: - அப்போஸ்தலர் எழுதின நிருபங்களைப்போலவே அவர்கள் எழுதாமல் வாய்மொழியாய்ப் போதித்தும், அவர்கள் எழுதித்தந்து காணாமற்போன நிருபங்களில் அடங்கியதும், கிரியைகளால் செய்து காட்டிய பாரம்பரை முறைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று இங்கே கற்பிக்கப்படுகிறது.

2 Thessalonians 2:14

அதனால் அநேக சாதிகளின் கண்களுக்கு முன்பாக நமது மகிமை யும், நமது பரிசுத்ததனமும் விளங் கும்; நமக்குக் கீர்த்தியுண்டாகும்; அப்பொழுது நாம் கர்த்தரென்று அறிந்துகொள்வார்கள்.

Ezekiel 38:23

ஆனால் உங்கள்மேல் எழுந்தருளி வரப்போகிற இஸ்பிரீத்துசாந்துவின் வல்லமையை நீங்கள் அடைந்து, ஜெருசலேமிலும், யூதேயா முழுவதிலும் சமாரியாவிலும் பூமியின் கடைசி மட்டும் எனக்குச் சாட்சிகளாயிருப் பீர்கள் என்றார். (அப். 2:2; லூக். 24:48.)

Acts 1:8

இந்தப் பரம இரகசியத்தின் மகிமைத் திரவியங்கள் அஞ்ஞானிகள் மட்டில் எம்மாத்திரம் விளங்குகிறதென்று சர்வேசுரன் தமது அர்ச்சிக்கப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கச் சித்தமானார். உங்களுக்கு மகிமையின் நம்பிக்கையாகிய கிறீஸ்துநாதரே இந்தப் பரம இரகசியம்.

Colossians 1:27

நீங்கள் மிகுந்த கனியைத் தந்து, என் சீஷர்களாயிருப்பதால் என் பிதா மகிமைப்பட்டிருக்கிறார்.

John 15:8

அது முதல் சேசுநாதர், தவஞ் செய்யுங்கள், ஏனெனில் மோட்ச இராச்சியம் சமீபித்திருக்கிறதென்று பிரசங்கிக்கத் தொடங்கினார். (மாற். 1:15.)

Matthew 4:17

எப்படியெனில், உங்களுக்குள்ளே நான் சேசுக்கிறீஸ்துநாதரை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி வேறொன்றையும் அறிந்தவனாயிருக்க வேண்டுமென்று எண்ணவில்லை. (கலா. 6:14.)

1 Corinthians 2:2

ஆண்டவருடைய இஸ்பிரீத்து வானவர் என்மேலிருக்கிறார். ஆதலால் அவர் என்னை அபிஷேகம்பண்ணித் தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங் கிக்கவும், இருதயம் நொறுங்கினவர்க ளைக் குணப்படுத்தவும்,

Luke 4:18

அதற்கு சேசுநாதர் பிரத்தியுத் தாரமாக: என்னிமித்தமாகவும், சுவி சேஷத்தினிமித்தமாகவும், வீட்டையா வது, சகோதரர், சகோதரிகளையா வது, தந்தை தாயையாவது, பிள்ளை களையாவது, காணிகளையாவது விட்டு விட்ட எவனும்,
இப்பொழுது இம்மையிலே துன்பங்களோடு நூறத்தனையாய் வீடுகளையும், சகோதரரையும், சகோதரி களையும், தாய்மார்களையும், பிள்ளை களையும், நிலங்களையும் பெற்றுக் கொள்வதுமன்றி, மறுமையிலே நித்திய ஜீவியத்தையும் அடையாதிருப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். * 30. சேசுநாதரைப் பின்செல்லும்படி இவ்வுலக நன்மைகளை விட்டுவிடுகிறவர்கள் அவைகளுக்குப் பதிலாய் ஞான நன்மைகளைக் கைக்கொள்ளுவார்கள். அவைகளால் இவ்வுலகத்திலே முதலாய் உண்டாகும் மனச்சமாதானமும் ஞான சந்தோஷமும், தாங்கள் துறந்துவிட்ட இலெளகீக நன்மைகளிலும் நூறுமடங்கு மாத்திரமல்ல, இன் னும் அதிகமான பெரிய நன்மைகளாகவேயிருக்கின்றன. மேலும் சேசுநாதர்சுவாமி யைப்பற்றியும், மோட்ச இராச்சியத்தைப்பற்றியும், தங்கள் தாய் தகப்பன், சகோதரர், வீடுவாசல், காணி பூமிகளை விட்டுவிடுகிற சந்நியாசிகளுக்கு நூறு பங்கு அதிக பட்ச முள்ள சிரேஷ்டர்களும், மற்றுஞ் சந்நியாசிகளும், தாய் தந்தைகள் சகோதரரிடமா யிருப்பதுமல்லாமல், அவர்கள் போகுமிடமெல்லாம் அவர்களுக்கு வீடுவாசல் காணி பூமியாகிற மடங்களும் நிலங்களும் அனுபவிக்கக் கிடைக்குமென்று அர்த்தமாம்.

Mark 10:29-30


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |