Topic : Evangelism

ஏனெனில், ' உலகின் இறுதி எல்லைவரைக்கும் மீட்பைக் கொண்டு செல்ல புறவினத்தாருக்கு ஒளியாக உன்னை ஏற்படுத்தினேன் ' என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்" என்றனர்.

Acts 13:47

மேலும் அவர்களை நோக்கி, "உலகெங்கும் போய்ப் படைப்பிற்கெல்லாம் நற்செய்தியினை அறிவியுங்கள்.

Mark 16:15

ஆனால், நான் என் உயிரை ஒரு பொருட்டாய்க் கணிக்கவில்லை. அதைப் பெரிதென மதிக்கவில்லை. கடவுளுடைய அருளைப்பற்றிய நற்செய்திக்குச் சான்று பகருமாறு ஆண்டவராகிய இயேசு என்னிடம் ஒப்படைத்த பணியை நிறைவேற்றி, என் வாழ்க்கைப் பயணத்தை முடிப்பேனாகில் அதுவே போதும்.

Acts 20:24

மேலும், விளக்கைக் கொளுத்தி மரக்காலின்கீழ் வைக்கமாட்டார்கள்; மாறாக, வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும்பொருட்டு, விளக்குத் தண்டின்மீது வைப்பார்கள்.
அப்படியே, மக்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, வானகத்திலுள்ள உங்கள் தந்தையை மகிமைப்படுத்தும்படி, உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்வதாக.

Matthew 5:15-16

நீங்கள் போய் எல்லா இனத்தாரையும் சீடராக்குங்கள். பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து,
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி போதியுங்கள். இதோ! நான் உலக முடிவுவரை எந்நாளும் உங்களோடு இருக்கிறேன்."

Matthew 28:19-20

நற்செய்தியைப் பற்றி நான் நாணமடைய மாட்டேன்; ஏனெனில், அது மீட்பளிப்பதற்குக் கடவுளின் வல்லமையாய் உள்ளது. முதலில் யூதனுக்கும், அடுத்து கிரேக்கனுக்கும் விசுவாசிக்கும் ஒவ்வொருவனுக்குமே அது அங்ஙனம் உள்ளது.

Romans 1:16

அல்லேலூயா! ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; அவர்தம் திருப்பெயரைச் சொல்லி வழிபடுங்கள்: எல்லா இனத்தாரும் அவருடைய செயல்களை அறியச் செய்யுங்கள்.

Psalms 105:1

ஆண்டவராகிய கிறிஸ்து பரிசுத்தர் என உங்கள் உள்ளத்தில் போற்றுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு விளக்கங் கூறும்படி யாராவது கேட்டால் தக்க விடை பகர எப்போதும் தயாராய் இருங்கள்.

1 Peter 3:15

அப்படியானால், அறிவிப்பதைக் கேட்பதால் தான் விசுவாசம் உண்டாகிறது என்பது தெளிவு; நாங்கள் அறிவிப்பதற்கோ கிறிஸ்துவின் வார்த்தையே ஊற்று.

Romans 10:17

"உலகிற்கு ஒளி நீங்கள். மலைமேல் உள்ள ஊர் மறைவாயிருக்க முடியாது.

Matthew 5:14

சகோதரர்களே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன்; நீங்கள் அதை ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
நான் உங்களுக்கு நற்செய்தியாக அறிவித்த வாக்கை நீங்கள் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருந்தால், அதனாலேயே மீட்படைவீர்கள்; இல்லையேல் நீங்கள் விசுவசித்தது வீண் என்று சொல்ல வேண்டியிருக்கும்.

1 Corinthians 15:1-2

அந்நாளில் நீங்கள் இவ்வாறு சொல்லுவீர்கள்: "ஆண்டவருக்கு நன்றி கூறுங்கள், அவரது பெயரைப் போற்றிப் புகழுங்கள்; புறவினத்தார்க்கு அவர் செயல்களை அறிக்கையிடுங்கள், அவர் பெயர் உயர்ந்ததெனப் பறைசாற்றுங்கள்.

Isaiah 12:4

ஏனெனில், தன் உயிரை காத்துக் கொள்ள விரும்பகிறவன் அதை இழந்துவிடுவான். என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் தன் உயிரை இழப்பவனோ அதைக் காத்துக்கொள்வான்.

Mark 8:35

நீங்கள் ஒருவர் மீதொருவர் அன்புகொண்டிருந்தால் தான், நீங்கள் என் சீடர் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வார்கள்."

John 13:35

நீரோ நலமிக்க போதனைக்கேற்பப் பேசுவீராக

Titus 2:1

"உலகிற்கு உப்பு நீங்கள். உப்பு சாரமற்றுப்போனால் வேறு எதனால் சாரம் பெறும் ? இனி, வெளியில் கொட்டப்பட்டு மனிதரால் மிதிபடுமேயொழிய, ஒன்றுக்கும் உதவாது.

Matthew 5:13

இதற்காகவே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மகிமையை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி, நாங்கள் அறிவித்த நற்செய்தியின் வழியாக, இறைவன் உங்களை அழைத்தார்.

2 Thessalonians 2:14

இவ்வாறு புறவினத்தார் அனைவர் முன்னிலையிலும் நமது மகிமையையும் பரிசுத்தத்தையும் வெளிப்படுத்தி நம்மைக் காண்பிப்போம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்.

Ezekiel 38:23

ஆனால், பரிசுத்த ஆவி உங்கள்மேல் வரும்போது, அவரது வல்லமையைப் பெற்று யெருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், மண்ணுலகின் இறுதி எல்லை வரைக்குமே நீங்கள் என் சாட்சிகளாயிருப்பீர்கள்" என்றார்.

Acts 1:8

ஏனெனில், இத்திட்டத்தின் மாட்சிமை புறவினத்தாரிடையே எவ்வளவு வளமிக்கதாய் உள்ளது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க இறைவன் திருவுளங் கொண்டார். கிறிஸ்து உங்களுக்குள் இருத்தலே அத்திட்டம் நாம் மாட்சிமை அடைவோம் என்பதற்கு அவரே, நம் நம்பிக்கை.

Colossians 1:27

நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராக விளங்குவதே என் தந்தைக்கு மகிமை.

John 15:8

அதுமுதல் இயேசு, "மனந்திரும்புங்கள், ஏனெனில், விண்ணரசு நெருங்கிவிட்டது" என்று அறிவிக்கத் தொடங்கினார்.

Matthew 4:17

ஏனெனில், நான் உங்களிடையே இருந்த போது இயேசு கிறிஸ்துவைத் தவிர, அதுவும் சிலுவையில் அறையுண்ட அவரைத் தவிர வேறெதையும் அறிய விரும்பவில்லை.

1 Corinthians 2:2

'ஆண்டவருடைய ஆவி என்மேலே, ஏனெனில், என்னை அபிஷுகம் செய்துள்ளார். 'எளியோர்க்கு நற்செய்தி சொல்லவும், சிறைப்பட்டோர் விடுதலையடைவர், குருடர் பார்வை பெறுவர் என அறிவிக்கவும், ஒடுக்கப்பட்டோர்க்கு உரிமை வாழ்வு வழங்கவும்,

Luke 4:18

அதற்கு இயேசு, "தன் வீட்டையோ, சகோதரர் சகோதரிகளையோ, தாய் தந்தையரையோ, மக்களையோ, நிலபுலங்களையோ என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் துறந்துவிடும் எவனும்,
இம்மையில் இன்னல்களோடு கூட, வீடு, சகோதரர், சகோதரி, தாய், பிள்ளை, நிலபுலங்களை நூறு மடங்காகவும், மறுமையில் முடிவில்லா வாழ்வையும் பெறாமல் போகான் என்று உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Mark 10:29-30


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |