16. ஏனெனில் சுவிசேஷத்தைப்பற்றி நான் கூச்சப்படேன். ஏனென்றால் முந்த யூதரிலும், பின்பு கிரேக்கரிலும் விசுவசிக் கிற எவனுக்கும் அது இரட்சணியமாகிய தேவ வல்லபமாயிருக்கின்றது. (மத். 10:32; 1 கொரி. 1:23; அப். 13:46.) *** 16. யூதரிலும் கிரேக்கரிலும்:- கிரேக்கத் தேசத்தார் சாதாரணமாய் அஞ்ஞானிகளாயிருந்ததினாலும், அவர்கள் பல தேசங்களில் பரவியிருந்ததினாலும், இவ்விடத்திலும், இன்னும் பல இடங்களிலும் கிரேக்கர் என்பது அஞ்ஞானிகளென்று அர்த்தங்கொள்ளுகிறது. சில சமயங்களில் யூதர்களல்லாத இதர ஜாதிகளென்றும் அர்த்தங்கொள்ளும். (மெனோக்கியுஸ்)

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save