அவர்கள் அங்கே இருக்கையில் சம்பவித்ததேதெனில், அவளுக்குப் பேறுகாலம் நிறைவேறிற்று.
அவள் தன் தலைச்சன் பிள்ளை யைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத் தாள். ஏனெனில் சத்திரத்தில் அவர் களுக்கு இடமில்லாமல் போயிற்று.
* 7. திருச்சபைக் கணக்கின்படி உலக சிருஷ்டிப்பின் 4004-ம் வருஷத்தில், ஜலப் பிரளயத்தின் 2348-ம் வருஷத்தில், இரட்சகர் உன் கோத்திரத்தில் பிறப்பாரென்று பிதாப்பிதாவாகிய அபிரகாமுக்குச் சர்வேசுரன் வாக்குத்தத்தம் பண்ணின 1921-ம் வருஷத்தில், பிதாப்பிதாவாகிய யாக்கோபு தன் மூத்த குமாரன் யூதாவை நோக்கி, உன் கோத்திரத்தில் இரட்சகர் பிறப்பாரென்றும், அவர் பிறக்குமட்டும் உன் கோத் திரத்தில் இராஜாங்கமிருக்குமென்றும் வசனித்த 1689-ம் வருஷத்தில், மோயீசன் தேவ வல்லமையால் இஸ்ராயேலரைப் பாரவோன் அடிமைத்தனத்தினின்று மீட்டுக் கொண்ட 1461-ம் வருஷத்தில், தாவீதென்பவர் இராஜபட்டம் பெற்ற 1032 - ம் வருஷத்தில், சாலமோன் தேவாலயத்தைக் கட்டின 1005-ம் வருஷத்தில், தேவ குமாரன் கன்னித்தாயாரிடத்தில் பிறப்பாரென்று தீர்க்கதரிசியாகிய இசையால் வச னித்த 715-ம் வருஷத்தில், தானியேல் தீர்க்கதரிசி கர்த்தர் பிறப்பிற்குக் குறித்த 65-ம் வருஷ வாரமாகிய எப்தோமாதில், அதாவது: அந்த தீர்க்கதரிசனத்தின் 455-ம் வருஷத்தில், உரோமாபுரியுண்டாகிய 753-ம் வருஷத்திலே, உரோமாபுரி இராயனாகிய ஒக்த்தாவியான் அகுஸ்துஸ் என்கிறவன் பட்டத்துக்கு வந்த 42-ம் வருஷத்திலே, டிசம்பர் மாதம் 25-ம் தேதியிலே, நடுச்சாம் நேரத்திலே திவ்விய கர்த்தருடைய திருப் பிறப்பு சம்பவித்ததென்றறிக. அர்ச். கன்னிமரியம்மாள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்றாளென்று சொல்லும்போது, அந்தப் பிள்ளைக்கு முந்தி வேறு பிள்ளைகளைப் பெற்றதில்லையென்று அர்த்தமாகுமேயொழிய பின்பு வேறே பிள்ளைகளையும் பெற்றா ளென்று அது குறிக்கிறதில்லை.
Luke 2:6-7