6. அவர்கள் அங்கே இருக்கையில் சம்பவித்ததேதெனில், அவளுக்குப் பேறுகாலம் நிறைவேறிற்று.
7. அவள் தன் தலைச்சன் பிள்ளை யைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத் தாள். ஏனெனில் சத்திரத்தில் அவர் களுக்கு இடமில்லாமல் போயிற்று. * 7. திருச்சபைக் கணக்கின்படி உலக சிருஷ்டிப்பின் 4004-ம் வருஷத்தில், ஜலப் பிரளயத்தின் 2348-ம் வருஷத்தில், இரட்சகர் உன் கோத்திரத்தில் பிறப்பாரென்று பிதாப்பிதாவாகிய அபிரகாமுக்குச் சர்வேசுரன் வாக்குத்தத்தம் பண்ணின 1921-ம் வருஷத்தில், பிதாப்பிதாவாகிய யாக்கோபு தன் மூத்த குமாரன் யூதாவை நோக்கி, உன் கோத்திரத்தில் இரட்சகர் பிறப்பாரென்றும், அவர் பிறக்குமட்டும் உன் கோத் திரத்தில் இராஜாங்கமிருக்குமென்றும் வசனித்த 1689-ம் வருஷத்தில், மோயீசன் தேவ வல்லமையால் இஸ்ராயேலரைப் பாரவோன் அடிமைத்தனத்தினின்று மீட்டுக் கொண்ட 1461-ம் வருஷத்தில், தாவீதென்பவர் இராஜபட்டம் பெற்ற 1032 - ம் வருஷத்தில், சாலமோன் தேவாலயத்தைக் கட்டின 1005-ம் வருஷத்தில், தேவ குமாரன் கன்னித்தாயாரிடத்தில் பிறப்பாரென்று தீர்க்கதரிசியாகிய இசையால் வச னித்த 715-ம் வருஷத்தில், தானியேல் தீர்க்கதரிசி கர்த்தர் பிறப்பிற்குக் குறித்த 65-ம் வருஷ வாரமாகிய எப்தோமாதில், அதாவது: அந்த தீர்க்கதரிசனத்தின் 455-ம் வருஷத்தில், உரோமாபுரியுண்டாகிய 753-ம் வருஷத்திலே, உரோமாபுரி இராயனாகிய ஒக்த்தாவியான் அகுஸ்துஸ் என்கிறவன் பட்டத்துக்கு வந்த 42-ம் வருஷத்திலே, டிசம்பர் மாதம் 25-ம் தேதியிலே, நடுச்சாம் நேரத்திலே திவ்விய கர்த்தருடைய திருப் பிறப்பு சம்பவித்ததென்றறிக. அர்ச். கன்னிமரியம்மாள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்றாளென்று சொல்லும்போது, அந்தப் பிள்ளைக்கு முந்தி வேறு பிள்ளைகளைப் பெற்றதில்லையென்று அர்த்தமாகுமேயொழிய பின்பு வேறே பிள்ளைகளையும் பெற்றா ளென்று அது குறிக்கிறதில்லை.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save