Topic : Resurrection

சேசுநாதர் அவளை நோக்கி: உத்தானமும், உயிரும் நானே; என்னில் விசுவாசமாயிருக்கிறவன் இறந்தாலும், பிழைப்பான். (அரு. 6:40.)
உயிரோடிருக்கையில் என்னை விசுவசிக்கிறவன் எவனும் நித்தியத்துக்கும் சாகமாட்டான். இதை விசுவசிக்கிறாயோ ? என்றார்.

John 11:25-26

அவர் அவர்களை நோக்கி: நீங்கள் அஞ்சவேண்டாம்; சிலுவையில் அறை யுண்ட நசரேனுவாகிய சேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார். இங்கேயில்லை; அவரை வைத்த இடம் இதுவே.

Mark 16:6

அவர் இங்கேயில்லை, உயிர்த்தெழுந்தார். அவர் இன்னம் கலிலேயாவிலிருந்தகாலத்தில் உங்களுக்கு எவ்விதஞ் சொல்லியிருந்தாரென்று நினைவுகூருங்கள். (மத். 16:21.)
மனுமகன் பாவிகளான மனிதர் கையில் ஒப்புக்கொடுக்கப்படவும் சிலு வையிலே அறையப்படவும் மூன்றாம் நாள் உயிர்க்கவும் வேண்டியதென்று உரைத்தாரல்லோ, என்றார்கள். (மத். 17:21; மாற். 9:30.)

Luke 24:6-7

அதனாலே நாங்கள் ஆண்டவருடைய வார்த்தையாக உங்களுக்குச் சொல்லுகிறதாவது; உயிரோடிருந்து, ஆண்டவருடைய வருகைக்குக் காத் திருக்கிற நாம் ஏற்கனவே மரித்தவர் களுக்கு முந்திக்கொள்ளமாட்டோம். (1 கொரி. 15:3.) * 14. ஆண்டவருடைய வார்த்தை என்பது அப்போஸ்தலருக்கு சேசுநாதரே நேராய் வெளிப்படுத்தின சத்தியமென்று நினைக்கத்தகும். முந்திக்கொள்ளமாட்டோம் என்பது அவர்களுக்கு முன்னும் அவர்களில்லாமலும் நாம் பரலோக இராச்சியத்தில் பிரவேசிப்பதில்லையென்று அர்த்தமாம். ஆகையால் இவ்விடத்தில் அப்போஸ்தலர் தாமும் அப்போதிருந்த தெசலோனிக்கேயரும் ஆண்டவர் வருமளவும் உயிரோடிருப்பதாகச் சொல்லாமல், உலக முடிவில் இருப்பவர்களைக் குறித்துத் தன்மையிடமாகப் பேசுகிறார்.

1 Thessalonians 4:14

நம்முடைய ஆண்டவராகிய சேசுக் கிறீஸ்துவின் பிதாவாகிய சர்வேசுரன் ஸ்தோத்தரிக்கப்படுவாராக. அவர் தம்முடைய இரக்கப் பெருக்கத்தின் படியே மரித்தோரிலிருந்து உயிர்த்த சேசுக் கிறீஸ்துநாதருடைய உத்தானத்தின் வழியாய் ஜீவனுள்ள நம்பிக்கைக்கும், (2 கொரி. 1:3; எபே. 1:3.)

1 Peter 1:3

அப்பொழுது, தேவதூதன் அந்த ஸ்திரீகளைப் பார்த்து: நீங்கள் பயப் படவேண்டாம், சிலுவையிலே அறை யுண்ட சேசுநாதரைத் தேடுகிறீர்க ளென்று அறிவேன்.
அவர் இங்கே இல்லை . ஏனெனில் தாம் திருவுளம்பற்றினபடியே உயித் தெழுந்தார். ஆண்டவர் வைக்கப்பட் டிருந்த இடத்தை வந்து பாருங்கள்.

Matthew 28:5-6

கிறீஸ்துநாதருடைய சிநேகம் எங்களை நெருக்கி ஏவுகின்றது. ஏனெனில் ஒருவரே எல்லோருக்காகவும் மரித்தாரென்றால் எல்லோரும் மரித்தார்களென்றும்,
கிறீஸ்துநாதர் எல்லோருக்காகவும் மரித்திருக்க, உயிரோடிருக்கிறவர்கள் இனித் தங்களுக்காக அல்ல, தங்களுக்காக மரித்து உயிர்த்தவருக்காக ஜீவிக்கவேண்டியதென்றும் நிச்சயித்திருக்கிறோம்.

2 Corinthians 5:14-15

ஏனெனில் மனிதனாலே மரணமுண்டானபடியால், மனிதனாலேயே மரித்தோருடைய உத்தானமும் உண்டாயிருக்கிறது. (ஆதி. 3:17; உரோ. 5:12-18 காட்சி. 1:5.)

1 Corinthians 15:21

ஆகையால் நாம் அவருடைய மரணத்துக்கு ஒப்பாக அவரோடு ஒட்டவைக்கப்பட்டவர்களானால், உத்தானத்துக்கும் அவரோடு ஒத்தவர்களாக அவரில் ஒட்டவைக்கப்படுவோம்.
ஏனெனில் பாவச் சரீரம் அழிந்து, நாம் இனிப் பாவத்துக்கு அடிமைக ளாகாதபடிக்கு, நம்முடைய பழைய மனிதன் அவரோடுகூடச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறானென்று அறிந்திருக்கிறோம். *** 6. பழைய மனிதன் என்பதும், பாவச் சரீரம் என்பதும் என்னவெனில், ஜென்மப் பாவத்தினாலே, தர்ம குணங் கெட்டு, பாவத்துக்குச் சார்பான பற்றுதலையுடைய மனுஷனுடைய சுபாவமாம். புது மனிதனோவென்றால் வரப்பிரசாதத்தினாலே புதிதான ஞான சீவியத்தை அடைந்த சுபாவமென்றறியவும்.

Romans 6:5-6

நான் அறியப்பெற்றதும் உங்களுக்கு விசேஷமாய்ப் போதித்ததும் ஏதென்றால், கிறீஸ்துநாதர் வேதவாக்கி யத்தின்படி நம்முடைய பாவங்களுக் காக மரித்து, (இசை. 53:5.)
அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தருளி, (யோனா. 2:1)

1 Corinthians 15:3-4

இப்படி நான் அவரையும், அவருடைய உத்தானத்தின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிந்து அவருடைய மரணத்துக்கு ஒத்த சாயலாகி, (உரோ. 6:3-5.)

Philippians 3:10

இதோ நாம் ஜெருசலேமுக்கு ஏறிப்போகிறோம். மனுமகன் பிரதான குருக்களிடத்திலும். வேதபாரகரிடத்தி லும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர் கள் அவரை மரணத்தீர்வையிட்டு,
அவரை ஆகடியஞ்செய்யவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும், புறஜாதியாருக்குக் கையளிப்பார்கள். ஆயினும், மூன்றாம் நாளில் அவர் உயிர்த்தெழும்புவார் என்றார்.

Matthew 20:18-19

அதற்கொத்த ஒப்பனையான ஞானஸ்நானமானது சரீர அழுக்கை நீக்குவதாயிராமல், சர்வேசுரன்மட்டில் நல்ல மனச்சாட்சி உண்டாவென்று அத்தாட்சியாயிருந்து,சேசுக் கிறீஸ்து நாதருடைய உத்தானத்தைக் கொண்டு நம்மை இரட்சிக்கிறது.

1 Peter 3:21

கடைசியாய் நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளின் பெரிய மேய்ப்பரான நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்து நாத ரை மரித்தோரினின்று எழுந்து வரச் செய்த சமாதான தேவன், (உரோ. 15:33.)
சேசுக்கிறீஸ்துநாதரைக் கொண்டு தமது சமுகத்திற்குப் பிரியமானதை உங்களிடத்தில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படி செய்ய உங்களைச் சகலவித நற்கிரியைகளுக் கும் இணக்குவாராக. சேசுக்கிறீஸ்துநாதருக்கே அநவரதகாலமும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

Hebrews 13:20-21

அப்படியிருக்க, முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த அந்த வேறு சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, தானும் கண்டு விசுவசித்தான்.
ஏனெனில் அவர் மரித்தோரிடத்தினின்று உயிர்த்தெழுந்தருள வேண்டும் என்கிற வேத வாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள்.

John 20:8-9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |