5. ஆகையால் நாம் அவருடைய மரணத்துக்கு ஒப்பாக அவரோடு ஒட்டவைக்கப்பட்டவர்களானால், உத்தானத்துக்கும் அவரோடு ஒத்தவர்களாக அவரில் ஒட்டவைக்கப்படுவோம்.
6. ஏனெனில் பாவச் சரீரம் அழிந்து, நாம் இனிப் பாவத்துக்கு அடிமைக ளாகாதபடிக்கு, நம்முடைய பழைய மனிதன் அவரோடுகூடச் சிலுவையில் அறையப்பட்டிருக்கிறானென்று அறிந்திருக்கிறோம். *** 6. பழைய மனிதன் என்பதும், பாவச் சரீரம் என்பதும் என்னவெனில், ஜென்மப் பாவத்தினாலே, தர்ம குணங் கெட்டு, பாவத்துக்குச் சார்பான பற்றுதலையுடைய மனுஷனுடைய சுபாவமாம். புது மனிதனோவென்றால் வரப்பிரசாதத்தினாலே புதிதான ஞான சீவியத்தை அடைந்த சுபாவமென்றறியவும்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save