Topic : Resurrection

அவளிடம் இயேசு, "உயிர்ப்பும் உயிரும் நானே. என்னில் விசுவாசங்கொள்பவன் இறப்பினும் வாழ்வான்.
உயிர் வாழ்கையில் என்னில் விசுவாசம் கொள்பவன் என்னும் ஒருபோதும் சாகான். இதை விசுவசிக்கிறாயா ?" என்று கேட்டார்.

John 11:25-26

சிலுவையிலறையுண்ட நாசரேத்தூர் இயேசுவைத் தேடுகிறீர்கள். அவர் உயிர்த்துவிட்டார். இங்கே இல்லை. இதோ! அவரை வைத்த இடம்.

Mark 16:6

அவர் இங்கே இல்லை; உயிர்த்துவிட்டார்.
மனுமகன் பாவிகளிடம் கையளிக்கப்பட்டுச் சிலுவையில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழவேண்டுமென்று, அவர் கலிலேயாவில் இருக்கும்போதே உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள்" என்றனர்.

Luke 24:6-7

இயேசு இறந்தபின் உயிர்த்தெழுந்தார் என்று நாம் விசுவசிக்கின்றோம் அல்லவா? அப்படியானால் இயேசுவின் ஒன்றிப்பில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.

1 Thessalonians 4:14

நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! இறந்தோரினின்று எழுந்த இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலால், இறைவன் தம் இரக்கப் பெருக்கத்திற்கேற்ப நமக்கு வற்றாத நம்பிக்கையைத் தரும் புதுப்பிறப்பை அளித்தார்.

1 Peter 1:3

வானதூதர் பெண்களை நோக்கி, "அஞ்சாதீர்கள்; சிலுவையில் அறையுண்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
அவர் இங்கே இல்லை; தாம் கூறியபடியே உயிர்த்துவிட்டார். வாருங்கள், ஆண்டவரைக் கிடத்திய இடத்தைப் பாருங்கள்.

Matthew 28:5-6

அனைவருக்காகவும் ஒருவர் உயிர்துறந்தார் என்று உணர்ந்ததும் கிறிஸ்துவின் அன்பு எங்களை ஆட்கொள்கிறது; அனைவருக்காகவும் ஒருவர் இறந்தாரென்றால், அனைவருமே இறந்துபோயினர் என்பது பொருள்.
அப்படி அனைவருக்காகவும் அவர் உயிர்துறந்ததோ, வாழ்கிறவர்கள் இனித் தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக இறந்து உயிர்த்தவர்க்கென வாழவேண்டும் என்பதற்காகவே.

2 Corinthians 5:14-15

மனிதன் வழியாய்ச் சாவு உண்டானது போல, மனிதன் வழியாகவே இறந்தோர்க்கு உயிர்த்தெழுதலும் உண்டு.

1 Corinthians 15:21

ஏனெனில், அவருடைய மரணத்தின் சாயலைத் தாங்கி, அவரோடு பொருத்தி இணைக்கப்பட்டால், உயிர்த்தெழுதலின் சாயலையும் தாங்கி, அவரோடு இணைக்கப்படுவோம்.
நாம் இனிப் பாவத்துக்கு அடிமையாய் இராதபடி பாவத்துக்கு உட்பட்ட உடல் அழிந்து போகுமாறு நம்முடைய பழைய இயல்பு அவரோடு சிலுவையில் அறையுண்டது என்பது நமக்குத் தெரியும்.

Romans 6:5-6

ஏனெனில், நான் பெற்றுக்கொண்டதும், முதன்மையானதாக உங்களுக்குக் கையளித்ததும் எதுவெனில், மறைநூலில் உள்ளபடி, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்தார்.
அடக்கம் செய்யப்பட்டு, மறைநூலில் உள்ளபடியே, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

1 Corinthians 15:3-4

இனி நான் விரும்புவதெல்லாம் அவரை அறிந்துகொள்ள வேண்டும் என்பதே. அதாவது, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையைத் துய்த்துணர வேண்டும். அவரது சாவின் சாயலை என்னுள் ஏற்று அவருடைய பாடுகளில் பங்குபெற வேண்டும்.

Philippians 3:10

"இதோ! யெருசலேமுக்குப் போகிறோம். மனுமகன் தலைமைக்குருக்களிடமும் மறைநூல் அறிஞரிடமும் கையளிக்கப்படுவார். அவர்கள் அவருக்குக் கொலைத் தீர்ப்பிட்டு,
அவரை எள்ளி நகையாடவும் சாட்டையால் அடிக்கவும் சிலுவையில் அறையவும் புறவினத்தாரிடம் கையளிப்பர். அவரோ மூன்றாம் நாள் உயிர்த்தெழுவார்" என்று சொன்னார்.

Matthew 20:18-19

இந்த நீரானது ஞானஸநானத்துக்கு முன் அடையானம்; இன்று அது உங்களை மீட்கிறது; இந்த ஞானஸ்நானம் உங்கள் உடலின் அழுக்கை நீக்குவதன்று; நல்ல மனச்சாட்சியுடன் கடவுளுக்குத் தரும் உறுதி வாக்காகும்; இந்த ஞானஸ்நானம் மீட்பளிப்பதோ இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் வழியாக.

1 Peter 3:21

ஆடுகளின் மகத்துவமிக்க மேய்ப்பரான நம் ஆண்டவராகிய இயேசுவை, முடிவில்லா உடன்படிக்கையின் இரத்தத்தை முன்னிட்டு, இறந்தோரிடமிருந்து எழுப்பியவரும் சமாதானத்தின் ஊற்றுமாகிய கடவுள்,
தமது திருவுளத்தை நீங்கள் நிறைவேற்றும்படி, எல்லா நன்மையும் செய்ய உங்களுக்குத் தகுதி அளித்து, தமக்கு உகந்ததை இயேசு கிறிஸ்துவின் வழியாக நம்மில் செய்தருள்வாராக. இயேசுகிறிஸ்துவுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Hebrews 13:20-21

கல்லறைக்கு முதலில் வந்த மற்றச் சீடரும் உள்ளே நுழைந்து பார்த்தார்; பார்த்து விசுவசித்தார்.
இயேசு இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழவேண்டும் என்னும் மறைநூல் வாக்கை இதுவரை அவர்கள் உணரவில்லை.

John 20:8-9


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |