Topic : Christmas

அவள் ஒரு குமாரனைப் பெறுவாள். நீர் அவருக்கு சேசு என்னும் நாமம் சூட்டுவீர்; ஏனெனில் அவரே தமது ஜனத்தை அவர்களுடைய பாவங்களினின்று இரட்சிப்பார். (தானி. 9:24; லூக். 1:31.) * 21. சேசு - தமிழ்ப் பாஷையில் நமதாண்டவரின் திருநாமம் “சேசு” வா அல்லது "யேசு”வா என்பதைப்பற்றி பாயிரத்துக்கு முன் காண்க.

Matthew 1:21

அதேதெனில்: இன்று தாவீதின் நகரத்தில் கிறீஸ்துநாதராகிய இரட்சகர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார்.

Luke 2:11

உன்னத ஸ்தலங்களிலே சர்வேசு ரனுக்கு மகிமைப் பிரதாபமும், பூலோ கத்திலே நல்ல மனதுள்ள மனுஷர்களுக் குச் சமாதானமும் உண்டாகக்கடவது என்றார்கள்.

Luke 2:14

அவர்கள் அங்கே இருக்கையில் சம்பவித்ததேதெனில், அவளுக்குப் பேறுகாலம் நிறைவேறிற்று.
அவள் தன் தலைச்சன் பிள்ளை யைப் பெற்று, துணிகளால் அவரைச் சுற்றி முன்னிட்டியில் கிடத்திவைத் தாள். ஏனெனில் சத்திரத்தில் அவர் களுக்கு இடமில்லாமல் போயிற்று. * 7. திருச்சபைக் கணக்கின்படி உலக சிருஷ்டிப்பின் 4004-ம் வருஷத்தில், ஜலப் பிரளயத்தின் 2348-ம் வருஷத்தில், இரட்சகர் உன் கோத்திரத்தில் பிறப்பாரென்று பிதாப்பிதாவாகிய அபிரகாமுக்குச் சர்வேசுரன் வாக்குத்தத்தம் பண்ணின 1921-ம் வருஷத்தில், பிதாப்பிதாவாகிய யாக்கோபு தன் மூத்த குமாரன் யூதாவை நோக்கி, உன் கோத்திரத்தில் இரட்சகர் பிறப்பாரென்றும், அவர் பிறக்குமட்டும் உன் கோத் திரத்தில் இராஜாங்கமிருக்குமென்றும் வசனித்த 1689-ம் வருஷத்தில், மோயீசன் தேவ வல்லமையால் இஸ்ராயேலரைப் பாரவோன் அடிமைத்தனத்தினின்று மீட்டுக் கொண்ட 1461-ம் வருஷத்தில், தாவீதென்பவர் இராஜபட்டம் பெற்ற 1032 - ம் வருஷத்தில், சாலமோன் தேவாலயத்தைக் கட்டின 1005-ம் வருஷத்தில், தேவ குமாரன் கன்னித்தாயாரிடத்தில் பிறப்பாரென்று தீர்க்கதரிசியாகிய இசையால் வச னித்த 715-ம் வருஷத்தில், தானியேல் தீர்க்கதரிசி கர்த்தர் பிறப்பிற்குக் குறித்த 65-ம் வருஷ வாரமாகிய எப்தோமாதில், அதாவது: அந்த தீர்க்கதரிசனத்தின் 455-ம் வருஷத்தில், உரோமாபுரியுண்டாகிய 753-ம் வருஷத்திலே, உரோமாபுரி இராயனாகிய ஒக்த்தாவியான் அகுஸ்துஸ் என்கிறவன் பட்டத்துக்கு வந்த 42-ம் வருஷத்திலே, டிசம்பர் மாதம் 25-ம் தேதியிலே, நடுச்சாம் நேரத்திலே திவ்விய கர்த்தருடைய திருப் பிறப்பு சம்பவித்ததென்றறிக. அர்ச். கன்னிமரியம்மாள் தன் தலைச்சன் பிள்ளையைப் பெற்றாளென்று சொல்லும்போது, அந்தப் பிள்ளைக்கு முந்தி வேறு பிள்ளைகளைப் பெற்றதில்லையென்று அர்த்தமாகுமேயொழிய பின்பு வேறே பிள்ளைகளையும் பெற்றா ளென்று அது குறிக்கிறதில்லை.

Luke 2:6-7

இடையரும் தங்களுக்குச் சொல் லப்பட்டபடியே தாங்கள் கண்டதும் கேட்டதுமாகிய யாவற்றையும் பற்றி சர்வேசுரனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டு திரும்பிப்போனார்கள்.

Luke 2:20

அப்படியிருக்க, சூசையப்பர் தாவீதின் கோத்திரத்தையும், குடும் பத்தையும் சேர்ந்தவராகையால், கெற்ப வதியான தம்முடைய மனைவி மரியம் மாளோடு பெயரெழுதிக் கொடுக்கும் படியாக, கலிலேயாவிலுள்ள நசரேத்தை விட்டு யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீது நகரத்துக்குப் போனார். (மிக். 5:2; 1 அரச. 20:6; மத். 2:6.)


Luke 2:4-5

இவையாவும் ஆண்டவர் தீர்க்கதரிசியால் மொழிந்தது நிறைவேறும்படி ஆயிற்று. அவர் சொல்வதேதெனில்:
“ஒரு கன்னி கெற்பந்தரித்து ஒரு புத்திரனைப் பெறுவாள், அவருக்கு எம்மானுவேல் என்னும் நாமமிடுவார்கள்.” அதற்கு “சர்வேசுரன் நம்மோடு” என்றர்த்தமாம். (இசை. 7:14; 61:1.) * 23. தலைப்பேறு:- லூக். 2-ம் அதி. 7-ம் வசன வியாக்கியானத்தில் இதற்கு விபரம் காண்க.

Matthew 1:22-23

ஆனதை முன்னிட்டு ஆண்ட வர்தாமே உங்களுக்கு அற்புத அடை யாளந் தருவார்; இதோ கன்னியான வள் கற்பமாகி மகவைப் பெறுவாள்; அது மனுவேலன் என்னும் அபிதா னம் பெறும் (மத்.1:23; லூக். 1:31).

Isaiah 7:14

இஸ்பிரீத்துசாந்துவினால் உண்டாயிற்று:- இஸ்பிரீத்துசாந்துவாகிய சர்வேசுரன் அர்ச். கன்னிமரியாயின் இரத்தத்தைக்கொண்டு திருக்குழந்தையின் சரீரத்தை அவருடைய நிர்மலமான உதரத்திலே உண்டாக்கினாரேயொழிய அவர் திருக்குழந்தைக்குத் தகப்பனல்ல. ஆதாமின் சரீரத்தை சர்வேசுரன் மண்ணாலே உண்டாக்கினதினாலே ஆதாமுக்கு சர்வேசுரன் உண்டாக்கின தகப்பனே தவிர, பெற்ற தகப்பனாகவில்லை என்பது போலவாம்.

Matthew 1:20


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |