Topic : Listening

எனக்கு மிகவும் பிரியமான சகோதரரே, இதை நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். எந்த மனிதனும் கேட்கிறதுக்குத் தீவிரமாயிருக்கக்கடவான்; பேசுகிறதற்கும் கோபிக்கிறதற்குமோ தாமதம் பண்ணக்கடவான். (பழ. 17;27.)

James 1:19

அதற்கு அவர்: அப்படியானாலும், சர்வேசுரனுடைய வாக்கியத்தைக்கேட்டு, அதை அநுசரிக்கிறவர்கள் பாக்கியவான்களென்று திருவுளம் பற்றினார். * 28. தேவ வாக்கியத்தைக் கேட்டு அநுசரிக்கிறவர்கள் பாக்கியவான்களென்று சேசுநாதர் சுவாமி இங்கே சொல்லியிருக்கிறதினாலே, தேவ வாக்கியத்தை எல்லாரையும்விட உத்தமமாய்க் கேட்டு அநுசரித்துவந்த (லூக்.1:48) பரமநாயகி, எல்லாரிலும் பாக்கியவதி யென்று தன்னாலே விளங்குகிறது. அத்தோடு அவள் தேவதாயாகவும் இருப்பதால் இருவகையிலும் எல்லாரையும்விடப் பாக்கியவதியானாள் என்பதற்குச் சந்தேகமில்லை.

Luke 11:28

நீங்கள் வாக்கியப்படி செய்கிறவர்களாயிருங்கள். ஆனால் உங்களையே மோசம்போக்கி (வாக்கியத்தைக்) கேட்கிறவர்களாய் மாத்திரம் இருக்க வேண்டாம். (மத். 7:21; உரோ. 2:13.)

James 1:22

நம்மை நோக்கி அபயமிடு; நாம் உனக்குக் காதுகொடுப்போம்; நீ அறியாத பெரியனவும் நிச்சயமு மான சில விஷயங்களை உனக்கு அறிவிப்போம்.

Jeremiah 33:3

நாம் அவருடைய சித்தத்தின்படி எதெதைக் கேட்டாலும், நமக்கு அவர் செவிகொடுக்கிறாரென்பதே நமக்கு அவர்மேலுள்ள நம்பிக்கையாகும்.

1 John 5:14

நீங்கள் நம்மை மன்றாடித் திரும்ப வருவீர்கள்; நீங்கள் நம்மை வேண்டுவீர்கள்; நாம் உங்கள் மன்றாட்டைக் கேட்டருளுவோம்.

Jeremiah 29:12

வார்த்தையில் கதித்தவன் நன்மையைக் கண்டுபிடிப்பான்; ஆண்டவரில் நம்பிக்கையாயிருக் கிறவனே பாக்கியவானாம்.

Proverbs 16:20

சகல ஜாதிகளே! கர்த்தரைப் புகழுங்கள்; சகல ஜாதிகளே! அவரை ஸ்துதியுங்கள்.
ஏனெனில் அவருடைய தயா பம் நமது பேரில் ஸ்திரமானதன்றி யும், கர்த்தருடைய உண்மை என்றென் றைக்கும் நிலைத்திருக்கும்.

Psalms 116:1-2

ஆகையால் என்னுடைய இவ் வார்த்தைகளைக் கேட்டு, இவைகளை அனுசரிக்கிற எவனும் கற்பாறையின் மேல் தன் வீட்டைக் கட்டி எழுப்பின விவேகமுள்ள மனுஷனுக்கு ஒப்பாவான். (லூக். 6:48; உரோ . 2:13; இயா . 1:22.)

Matthew 7:24

நீங்கள் என்னிடத்தில் எவைகளைக் கற்றும், பெற்றும், கேட்டும், கண்டுமிருக்கிறீர்களோ, அவைகளை யே செய்யுங்கள். அப்போது சமாதா னக் கடவுள் உங்களோடிருப்பார்.

Philippians 4:9

நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று அறிந்திருக்கிறோம்; அவரிடத்தில் நாம் கேட்கிற மன்றாட்டுகளை அடைகிறோ மென்றும் அறிந்திருக்கிறோம்.

1 John 5:15

அது வானத்தின் முனையி லிருந்து புறப்பட்டு மறு முனை வரைக்கும் சென்று ஓடுகிறது; அதின் வெப்பத்திற்கு ஒருவனும் மறைகிற தில்லை (லூக். 24:46).

Psalms 18:6

இதோ, நான் வாசற்படியிலே நின்று தட்டுகிறேன். எவனாவது என் குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடு போஜனம்பண்ணுவேன். என்னோடு அவனும் போஜனம் பண்ணுவான்.

Revelation 3:20

புத்திமதியை அனுசரிப்பவன் சீவிய பாதையிலே நடக்கிறான்; கண்டனைகளைக் கைநெகிழ்பவனே அலைந்து திரிகிறான்.

Proverbs 10:17

ஆதலால் விசுவாசமானது கேள்வியால் வரும்; கேள்வியோ, கிறீஸ்துநாதருடைய வாக்கியத்தால் ஆகிறது.

Romans 10:17

நடுராத்திரியில் சின்னப்பரும், சீலாவும் ஜெபஞ்செய்து சர்வேசுரனை ஸ்துதித்தார்கள். சிறையிலிருந்தவர்களும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

Acts 16:25

ஏனெனில் நான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வேன்; (நீரோவெனில்,) கர்த்தாவே காலை நேரத்தில் என் குரற் சத்தத்தைக் கேட்டருளுவீர்.

Psalms 5:3

நீங்கள் செவிகொடாவிடின், நமது நாமத்தை மகிமைப்படுத்து வான் வேண்டி, (நமது ஆக்ஞாப னைக்கு) இருதயகதமாய்க் கவனஞ் செலுத்தாவிடில், நாம் உங்கள்பேரில் வறுமையை அனுப்புவோம்; நீங்கள் ஆசீர்வதித்ததை நாம் சபிப்போம்; (ஆம், எம் வார்த்தைதனை) உங்கள் இருதயத்தில் பதிய வையாததால் நாம் அவைகளைச் சபிப்போம் என்கிறார் சேனைகளின் ஆண்டவர் (சூலவி.26:14; உபா. 28:15).

Malachi 2:2

என் மகனே! உன் பிதாவின் கற்பனையை அநுசரி; உன் மாதாவின் கட்டளையையுங் கைநெகிழாதே.

Proverbs 6:20

நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரானவரை மாத்திரம் பின்பற்றி அவருக்குப் பயந்தவர்களுமாய் அவரு டைய கற்பனைகளை அநுசரிக்கிற வர்களுமாய் அவருடைய வாக் கியத்திற்குச் செவிகொடுக்கிறவர் களுமாய் அவருக்கு மாத்திரமே ஊழியஞ் செய்து அவரை அண்டிக் கொள்ளக் கடவீர்கள்.

Deuteronomy 13:4

மேலும் உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ் செய்திருப்பா னாகில், நீ போய், நீயும் அவனுந் தனித் திருக்கையில் அவனைக் கடிந்துகொள். அவன் உனக்குக் காது கொடுத்தால் உன் சகோதரனை ஆதாயமாக்கிக்கொள் வாய். (லூக். 17:3: லேவி. 19:17; சர்வப். 19:13; இயா . 5:19, 20.)

Matthew 18:15

அவர்களோவெனில், எனக்கு விரோதமாகச் சந்தோஷப்பட்டு கூட்டங் கூடி எனக்குப் பொல்லாப் புச் செய்தார்கள்; அப்படி செய் வதற்கு அவர்களுக்கு காரணமென்ன வென்று அறியாமலிருந்தேன்.

Psalms 34:15

அதற்கு அவர் மாறுத்தாரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, சர்வேசுரனுடைய வாயினின்று புறப்படுகிற எந்த வாக்கியத்தினாலும் பிழைக்கிறானென்று எழுதப்பட்டிருக்கிறது என்றார். (உபாக. 8:3. லூக். 4:4.)

Matthew 4:4

ஏனென்றால் நீங்கள் இருளிலே சொன்னவைகள் வெளிச்சத்திலே சொல் லப்படும்; நீங்கள் அறைகளிலே காதுக் குள் பேசினது வீடுகளின் மேலே பிரசங் கிக்கப்படும்.

Luke 12:3

உங்களுக்கு இஸ்பிரீத்துவைக் கொடுத்து, உங்கள் மத்தியில் அற்புதங் களை நடத்துகிறவர் அவைகளை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளைப்பற்றி யோ, அல்லது விசுவாசத்தைக் கேட்ட தைப்பற்றியோ எதைப்பற்றி நடத்தி வருகிறார்?

Galatians 3:5


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |