Topic : Listening

என் அன்புச் சகோதரர்களே, இவை உங்களுக்குத் தெரியும். இனி இறை வார்த்தையைக் கேட்பதற்கு விரைதல் வேண்டும்; பேசுவதற்கோ, தாமதித்தல் வேண்டும்; சினங்கொள்வதற்கும் தாமதித்தல் வேண்டும்.

James 1:19

அவரோ, "ஆயினும் கடவுளுடைய வார்த்தையைக் கேட்டுக் கடைப்பிடிப்பவர்கள் அதிலும் பேறுபெற்றவர்கள்" என்றார்.

Luke 11:28

இறை வார்த்தையின்படி நடப்பவர்களாய் இருங்கள். அதைக் கேட்பதோடு மட்டும் நின்று விடாதீர்கள். அப்படிச் செய்வது உங்களையே ஏமாற்றிக் கொள்வதாகும்.

James 1:22

நம்மை நோக்கிக் கூப்பிடு; நாம் உனக்குச் செவிசாய்ப்போம்; நீ அறியாத பெரியனவும் மறைந்தனவுமான சிலவற்றை உனக்கு அறிவிப்போம்.

Jeremiah 33:3

நாம் இறைவனிடம் கேட்பது அவரது திருவுளத்திற்கேற்றதாய் இருந்தால், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இந்த நம்பிக்கையுடன் நாம் அவர் முன் நிற்க முடியும்.

1 John 5:14

நீங்கள் நம்மை மன்றாடித் திரும்ப வருவீர்கள்; நீங்கள் நம்மை வேண்டுவீர்கள்; நாம் உங்கள் மன்றாட்டைக் கேட்டருளுவோம்.

Jeremiah 29:12

வார்த்தையில் கவனமுள்ளவன் நன்மையைக் கடைப்பிடிப்பான். ஆண்டவர்மேல் நம்பிக்கை வைப்பவனே பெறு பெற்றோன்.

Proverbs 16:20

மிக மிகத் துன்புறுகிறேன்!' என்று சொன்னபோதுங் கூட நான் ஆண்டவரை நம்பினேன்.
எந்த மனிதனும் நம்பிக்கைக்குரியவனல்லன்' என்று அச்சத்தால் மேலிட்டுச் சொன்னேன்.

Psalms 116:1-2

"ஆகவே, நான் சொல்லும் இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி நடப்பவன் எவனும் கற்பாறையின்மீது தன் வீட்டைக் கட்டிய அறிவாளிக்கு ஒப்பாவான்.

Matthew 7:24

நீங்கள் என்னிடம் கற்றுக்கொண்ட போதனைகள், பெற்றுக்கொண்ட படிப்பிணைகள், என்னிடம் கேட்டறிந்தவை, என் வாழ்க்கையில் நீங்கள் பார்த்தவை அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அப்போது சமாதானத்தின் ஊற்றாகிய கடவுள் உங்களோடிருப்பார்.

Philippians 4:9

நாம் கேட்கும்போதெல்லாம் அவர் செவிசாய்க்கிறார். என்ற உறுதி நமக்கிருந்தால், அவரிடம் கேட்டதனைத்தும் கிடைத்துவிட்டது என்ற உறுதியும் இருக்கும்.

1 John 5:15

துன்ப வேளையில் நான் ஆண்டவரை அழைத்தேன்; என் இறைவனை நோக்கி கூக்குரலிட்டேன்: தம் ஆலயத்தில் நின்று என் குரலை அவர் கேட்டருளினார்; என் கூக்குரல் அவர் செவியில் விழுந்தது.

Psalms 18:6

இதோ, 'நான் கதவண்டை நின்று தட்டுகிறேன். ஒருவன் எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், அவனது இல்லத்தில் நுழைந்து, அவனோடு விருந்துண்பேன். நானும் அவனும் ஒன்றாய் விருந்துண்போம்.

Revelation 3:20

அறிவுரையை அனுசரிப்பவன் வாழ்வுப் பாதையிலே நடக்கிறான். கண்டனங்களைக் கைநெகிழ்பவனோ அலைந்து திரிகிறான்.

Proverbs 10:17

அப்படியானால், அறிவிப்பதைக் கேட்பதால் தான் விசுவாசம் உண்டாகிறது என்பது தெளிவு; நாங்கள் அறிவிப்பதற்கோ கிறிஸ்துவின் வார்த்தையே ஊற்று.

Romans 10:17

நள்ளிரவு வந்தது. சின்னப்பரும் சீலாவும் கடவுளைப் புகழ்ந்து பாடிச் செபித்துக்கொண்டு இருந்தனர். மற்றக் கைதிகளோ கேட்டுக் கொண்டிருந்தனர்.

Acts 16:25

ஆண்டவரே, உம்மையே வேண்டுகிறேன், காலையில் என் குரலைக் கேட்டருள்வீர்: காலையில் என் மன்றாட்டுகளை உம்மிடம் எடுத்துச் சொல்லி, உதவியை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

Psalms 5:3

இதற்கு நீங்கள் செவிமடுக்காவிடில், நம் திருப்பெயருக்கு மகிமை தரும்படி உங்கள் உள்ளத்தில் நீங்கள் கருதாவிட்டால், உங்கள் மேல் சாபத்தை அனுப்புவோம்; உங்களுக்குரிய ஆசீர்வாதங்களைச் சபிப்போம்; உண்மையில் ஏற்கனவே அவற்றைச் சபித்தாயிற்று; ஏனெனில் உள்ளத்தில் அதைப் பதிய வைப்பார் யாருமில்லை, என்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

Malachi 2:2

என் மகனே, உன் தந்தையின் கட்டளையை அனுசரி; உன் தாயின் சட்டத்தையும் கைநெகிழாதே.

Proverbs 6:20

நீங்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே பின்பற்றி, அவருக்கு அஞ்சுகிறவர்களுமாய் அவருடைய கட்டளைகளை அனுசரிக்கிறவர்களுமாய், அவருடைய வார்த்தைக்குச் செவி கொடுக்கிறவர்களுமாய், அவருக்கு மட்டுமே ஊழியம் செய்து, அவரோடு ஒன்றித்திருக்கக் கடவீர்கள்.

Deuteronomy 13:4

"உன் சகோதரன் உனக்கு எதிராகக் குற்றஞ்செய்திருந்தால் நீ போய், நீயும் அவனும் தனித்திருக்கையில் அவனைக் கண்டித்துப்பார். அவன் உனக்குச் செவிசாய்த்தால் உன் சகோதரனை உன்வச மாக்கிக்கொள்வாய்.

Matthew 18:15

ஆண்டவருடைய கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன; அவருடைய செவிகள் அவர்களது குரலைக் கேட்கின்றன.

Psalms 34:15

அவரோ மறுமொழியாக: " ' மனிதன் அப்பத்தினால் மட்டும் அன்று, கடவுள் வாயினின்று வரும் ஒவ்வொரு சொல்லினாலும் உயிர்வாழ்கிறான் ' என எழுதியிருக்கின்றதே" என்றார்.

Matthew 4:4

ஆதலின், நீங்கள் இருளில் கூறியதெல்லாம் ஒளியில் கேட்கப்படும். அறைகளில் காதோடு காதாய்ப் பேசியது கூரைமீதிருந்து அறிவிக்கப்படும்.

Luke 12:3

வீணாகத்தான் முடியுமா? அப்படியானால், உங்களுக்கு ஆவியானவரை அளித்து உங்களிடையே வல்லமை மிக்க செயல்களைச் செய்பவர் ஏன் அப்படிச் செய்கிறார்? நீங்கள் திருச்சட்டம் விதித்த செயல்களை நிறைவேற்றுவதால் செய்கிறாரா? நீங்கள் நற்செய்தியைக் கேட்டு விசுவசித்ததால் செய்கிறாரா?

Galatians 3:5


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |