இன்று நான் உனக்குக் கற்பிக் கிற இந்த வார்த்தைகளே உன் இருத யத்திலே பதிந்திருக்கக் கடவது (உபா.14:2; 26:18). நீ அவைகளை உன் குமாரர் களுக்கு விவரித்துச் சொல்லவும், நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கை யிலும் வழியில் நடந்து போகை யிலும், தூங்குகையிலும், விழித்தெழுந் திருக்கையிலும் அவைகளைத் தியானிக்கக் கடவாய்.
நீ பிழைத்துப் பெருகும்படிக் கும் நீ சுதந்தரிக்கப் போகிற தேசத் தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும் நீ அவரிடத் தில் அன்புகூரவும், அவருடைய வழி களில் நடக்கவும் அவருடைய கற்பனைகளையும் கட்டளை களையும், ரீதி ஆச்சாரங்களையும் கைக்கொண்டு அநுசரிக்கவும் கடவாய்.
இதற்குச் சரியொத்த இரண் டாம் கற்பனை ஏதென்றால்: உன்னைப் போல உன் பிறனையுஞ் சிநேகிப்பா யாக, என்பதாம். இவைகளிலும் பெரி தான வேறே கற்பனை இல்லை என்றார். (லேவி. 19:18; மத். 22:39; உரோ . 13:9; கலாத். 5:14; இயா . 2:8.)
ஆனால் உன் தேவனாகிய கர்த்தருடைய குரல் சப்தத்திற்கு நீ செவிகொடுத்து நான் இன்று உனக் குக் கற்பிக்கிற அவருடைய கட்டளை களில் யாவையுங் கைக்கொண்டு ஆசரிப்பாயாகில், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதி களைப் பார்க்கிலும் உன்னை மேன் மைப்படுத்துவார்.
இந்த நியாயப் பிரமாணப் புஸ்தகம் உன் கையை விட்டுப் பிரியா திருப்பதாக! அதில் எழுதியிருக்கிறதை அநுசரித்து, அதின்படியெல்லாம் நடந்தொழுகும்பொருட்டு, அதை இராப் பகல் தியானித்துக் கொண் டிருப்பாயாக! அப்படிச் செய்தால் அல்லோ நீ உன் வழியைச் செவ்வை யாக்கிப் புத்திமானாக நடந்து கொள்ளுவாய்.
எந்த மனுஷனும் வேதப்பிரமாணத்தின் கிரியைகளால் தேவ சமுகத்தில் நீதிமானாக்கப்படுவதில்லை. ஏனெனில் வேதப்பிரமாணத்தின் வழியாய்ப் பாவத் தின் அறிவுண்டாகிறது. (கலாத். 2:16.)
நீங்கள் ஒருவரையயாருவர் சிநேகிக்கவேண்டிய கடன் நீங்கலாக, மற்ற எந்த விஷயத்திலும் கடன்காரராகாதேயுங்கள். ஏனெனில் பிறனைச் சிநேகிக்கிறவன் எவனோ, அவனே வேதகற்பனையை நிறைவேற்றினவன்.
இப்பொழுது இஸ்ராயேலே! நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருடைய மார்க்கத்தில் ஒழுகி, உன் தேவனாகிய கர்த்தரிடத் தில் அன்புகூர்ந்து உன் முழு இருதயத் தோடும், முழு ஆத்துமத்தோடும் அவரைச் சேவித்து, உனக்கு நன்றாகும்பொருட்டு, நான் இன்று உனக்குக் கற்பிக்கின்ற கர்த்தருடைய கற்பனைகளையும், ஆசாரங்களையும் நீ கைக்கொண்டு காக்க வேண்டுமென்பதையே அல்லாது உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் வேறு என்னத்தைக் கேட்கிறார்?
எப்படியெனில் உன்னைச் சிநேகிக்குமாப்போல, உன் பிறனையும் சிநேகிப்பாயாக என்கிற இந்த ஒரே வாக்கியத்தில் நியாயப்பிரமாணம் முழுமையும் நிறைவேறுகிறது. (லேவி. 19:18; மத். 22:39; உரோ. 13:8.)
ஆனாலும் தேவனாகிய கர்த்த ருடைய தாசனான மோயீசன் உங்க ளுக்குக் கொடுத்த கட்டளைகளை யும், சட்டப்பிரமாணங்களையும் கெட்டியாய்க் கைக்கொண்டு நுணுக் கமாய் நிறைவேற்றுவதில் சாக்கிரதை யாயிருங்கள்; அதுகள் என்னவென் றால்: நீங்கள் கர்த்தரில் அன்புகூர்ந்து அவருடைய எல்லா வழிகளிலும் நடந்து, அவர் கற்பனைகளை அனு சரித்து, அவரைப் பற்றிக்கொண்டு உங்கள் முழு இருதயத்தோடும் முழு மனதோடும் அவரைச் சேவிக்க வேண்டும் என்பதேயாமென்றான்.
மிகவும் பிரியமானவர்களே, நம்மிருதயம் நமதுமேல் குற்றஞ்சாட்டாதிருந்தால், நாம் சர்வேசுரன்மேல் நம்பிக்கையாயிருப்போம். அன்றியும் நாம் அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு அவர் சமுகத்துக்கு ஏற்கையானவைகளைச் செய்கிறபடியினாலே, நாம் வேண்டிக் கொள்வதெதுவோ, அதை அவரிடத்தில் பெற்றுக்கொள்வோம். (மத்.21:22.)
சர்வேசுரனைச் சிநேகிக்கிறவன் தன் சகோதரனையும் சிநேகிக்கக்கடவான் என்கிற இந்தக் கற்பனையைச் சர்வேசுரனிடத்தில் நாம் பெற்றிருக்கிறோம். (அரு. 13:34; 15:12; எபே. 5:2.)