12. இப்பொழுது இஸ்ராயேலே! நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருடைய மார்க்கத்தில் ஒழுகி, உன் தேவனாகிய கர்த்தரிடத் தில் அன்புகூர்ந்து உன் முழு இருதயத் தோடும், முழு ஆத்துமத்தோடும் அவரைச் சேவித்து,
13. உனக்கு நன்றாகும்பொருட்டு, நான் இன்று உனக்குக் கற்பிக்கின்ற கர்த்தருடைய கற்பனைகளையும், ஆசாரங்களையும் நீ கைக்கொண்டு காக்க வேண்டுமென்பதையே அல்லாது உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் வேறு என்னத்தைக் கேட்கிறார்?