Topic : Humility

எவ்வித தாழ்ச்சியோடும், சாந்தத்தோடும், பொறுமையோடும், ஒருவ ரொருவரைப் பரம அன்போடு தாங்கிக் கொண்டு,

Ephesians 4:2

யாதொன்றையும் பிடிவாதத்தினாலாவது, வீண் மகிமையினாலாவது செய்யாமல், தாழ்ச்சியோடு ஒருவரை யொருவர் தனக்கு மேற்பட்டவர்களென்று எண்ணிக்கொள்ளுங்கள்.

Philippians 2:3

ஆங்காரம் எங்கே இருந்ததோ அங்கேயே அவமானமும்; தாழ்ச்சி எங்கேயோ அங்கே ஞானமும் (உண்டு).

Proverbs 11:2

ஒருவரோடொருவர் ஏக சிந்தனையுள்ளவர்களாய் இருங்கள். பெருமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களோடு ஒத்து நடங்கள். உங்களையே புத்திசாலிகளென்று எண்ணாதிருங்கள்.

Romans 12:16

ஆண்டவர் சமுகத்தில் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள்; அவர் உங்களை உயர்த்துவார். ( 1 இரா. 5:6: லூக். 14:11, 18:14.)

James 4:10

உங்களுடைய அலங்கரிப்பு கூந்தலைப் பின்னுவதும், பொன்னாபரணங்களை அணிவதும், அல்லது உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்வதுமாகிய வெளி அலங்கரிப்பாயிராமல், (1 தீமோ. 2:9; இசை. 3:18-24.)
இருதய உள்ளரங்க மனுஷத்துவமானது சாந்தமும் அமரிக்கையுமான மனத்தூய்மையினாலே அலங்கரிக்கப்படவேண்டியது. இதுவே சர்வேசுரனுடைய சமுகத்தில் விலையேறப்பெற்றது.

1 Peter 3:3-4

ஆதலால், சர்வேசுரனால் தெரிந் துகொள்ளப்பட்ட நீங்கள் பரிசுத்தரும், பிரியமுள்ளவர்களுமாய்த் தயாளமான உள்ளத்தையும், சாந்தத்தையும், தாழ்ச்சி யையும், அடக்கவொடுக்கத்தையும், பொறுமையையுந் தரித்துக்கொண்டு,

Colossians 3:12

ஆங்காரியைத் தாழ்மை பின் தொடர்கின்றது; மனத்தாழ்ச்சி யுடையோன் மகிமையை அடை வான் (யோபு. 22:29).

Proverbs 29:23

அடக்கவொடுக்கத்தின் மேல் பதவி தேவபயமும், திரவியமும், மகியையுஞ் சீவியமுமாம்.

Proverbs 22:4

ஆகையால், சர்வேசுரன் உங்ளைச் சந்திக்கும் காலத்தில் உங்களை உயர்த்தும்படிக்கு அவருடைய வல்லமையுள்ள கரத்தின்கீழ் உங்களைத் தாழ்த்திக்கொள்ளுங்கள். (இயா. 4:10.)

1 Peter 5:6

உங்களில் ஞானியும் கல்விமானும் யார்? அவன் ஞானத்துக்குரிய சாந்தகுணத்தோடு தன் கிரியைகளை நல்லொழுக்கத்தினாலே காண்பிக்கக் கடவான்.

James 3:13

நமது நாமத்தினாலே மந்திரிக் கப்பட்ட நமது சனங்கள் மனந்திரும் பிச் செபம் பண்ணி, நமது முகத்தைத் தேடித் தங்கள் அக்கிரமமான வழி களை விட்டுத் தபம் பண்ணினால், அப்பொழுது நாம் பரலோகத்தில் இருந்து அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளி, அவர்கள் பாவங்களை மன்னித்து அவர்களுடைய தேசம் சேமமாயிருக்கச் செய்வோம்.

2 Chronicles 7:14

என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவனாயிருக்கி றேனென்று என்னிடத்தில் கற்றுக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் ஆத்துமங்களுக்கு இளைப்பாற்றியைக் கண்டடைவீர்கள். (எரே. 6:16.)
ஏனெனில் என் நுகம் இனிதாயும் என் சுமை இலகுவாயும் இருக்கிறது. (1 அரு. 5:3.) * 30. சேசுநாதர்சுவாமியுடைய கட்டளையெல்லாம் தேவசிநேகம் பிறர்சிநேகங்களில் அடங்கியிருக்கிறதினாலேயும், சிநேகமானது எல்லாவற்றையும் இன்பமாக மாற்றுகிறதினாலேயும் சேசுநாதர்சுவாமி: என் நுகம் இனிது, என் சுமை இலகுவானது என்கிறார்.

Matthew 11:29-30

தாழ்வு வருமுன் மனிதன் தன் மனதில் ஆங்காரம் கொள்வான்; மகிமைப்படுத்தப்படுமுன்னே தாழ்த்தப்படுகின்றது.

Proverbs 18:12

கடைசியாய் நீங்கள் எல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், அந்நியோந்நிய இரக்கமுள்ளவர்களும், சகோதர நேசமுள்ளவர்களும், மன உருக்கமுள்ளவர்களும், சாந்தமும் தாழ்ச்சியுள்ளவர் களுமாயிருங்கள்.

1 Peter 3:8

ஓர் பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அரவணைத்துக்கொண்டு, அவர்களுக் குச் சொன்னதாவது;

Mark 9:35

உள்ளவைகளை அழிக்கும்படி சர்வேசுரன் உலகத்தில் இழிவானவைகளையும், நீசமானவைகளையும், இல்லாதவைகளையும் தெரிந்துகொண்டார்.
ஏனெனில் மாம்சமான எவனும் அவருடைய சமுகத்தில் பெருமை பாராட்டாதபடிக்கு அப்படிச் செய் தருளினார்.

1 Corinthians 1:28-29

ஆகையால் நீ தர்மஞ் செய்யும் போது, கள்ள ஞானிகள், மனிதரால் சங்கிக்கப்படத்தக்கதாக ஜெப ஆலயங்களிலும் தெருவீதிகளிலும் செய் கிறது போல, உனக்கு முன்பாக எக் காளம் ஊதப்பண்ணாதே. அவர்கள் தங்கள் சம்பாவனையை அடைந்து கொண்டார்களென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 6:2

ஓ மனிதா! உனக்கு நலனான தும், ஆண்டவர் உன்னிடத்தில் ஆசிப்பதுமானது யாதென உனக்கு யான் சொல்வேன்; (அஃதேதெனில்) நீதி சார்பாய் நடத்தலும், தயை செய்ய விரும்புதலும், உன் தேவன் முன் சாங்கோபாங்கமாய் ஒழுகுதலு மேயாம் (சக். 7:9; மத். 23:23; உபா. 6:2; 26:16).

Micah 6:8

மனைவிகளே, கடமைப்படி உங்கள் புருஷர்களுக்கு ஆண்டவருக்குள் கீழ்ப்படிந்திருங்கள். (எபே. 5:22; 1 இரா. 3:1.)
பூமான்களே, உங்கள் மனைவிகளைச் சிநேகியுங்கள். அவர்களுக்குக் கசப்பாயிராதேயுங்கள். *** 19. உங்கள் மனைவிகளுக்குக் கசப்பாயிராமல் என்பதற்கு உங்கள் பேச்சுவார்த்தை நடபடிக்கைகளிலும், கண்டித்துப் புத்திசொல்லவேண்டிய விஷயங்களிலும் மனவருத்தத்தை உண்டுபண்ணாமல், பிரியத்தோடும் தயாளத்தோடும் நடத்தி வரவேண்டுமென்பது கருத்தாகும்.

Colossians 3:18-19

தேவ பயமே ஞான போதினி; தாழ்மை மகிமைக்கு முன்செல் கின்றது.

Proverbs 15:33

ஆண்டவரே! உமது வீட்டின் அலங்காரத்தையும் உமது மகிமை விளங்கச் செய்யும் இடத்தையும் விரும்பினேன்.
சர்வேசுரா! என் ஆத்துமாவை அவபத்தியுள்ளவர்களோடும், என் சீவனை இரத்தப் பிரியரோடும் போக்கடியாதேயும்.

Psalms 25:8-9

சகோதரரே, நீங்கள் சுயாதீனத்துக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆயினும் இந்தச் சுயாதீனத்தைச் சரீர இச்சைகளுக்கு ஏதுவாக்காமல், சிநேகத்தினால் ஒருவருக்கொருவர் ஊழியஞ் செய்யுங்கள்.

Galatians 5:13

அவர்களுக்கு வசனித்ததாவது: என் நாமத்தினாலே இந்தச் சிறுவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக் கொள்ளுகிறான். என்னை ஏற்றுக்கொள் ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; ஆகையால் உங்களெல்லாரிலும் எவன் அதிக சிறிய வனாயிருக்கிறானோ, அவனே அதிக பெரியவன் என்றார்.

Luke 9:48

நம்முடைய பிதாவாகிய சர்வேசுரனுக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

Philippians 4:20


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |