Topic : Holiness

இந்த வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினாலே, மிகவும் பிரியமானவர்களே, மாம்சத்திலும் மன திலும் உள்ள எவ்வித அழுக்குகளும் நீங்க நம்மைச் சுத்திகரித்து, தெய்வபயத் தை முன்னிட்டு நமது அர்ச்சிப்பின் வே லையைப் பூரணமாய் முடிக்கக்கடவோம்.

2 Corinthians 7:1

சமஸ்தரோடும் சமாதானத்தையும் பரிசுத்ததனத்தையும் நாடுங்கள். பரிசுத் தமில்லாமல் சர்வேசுரனை ஒருவனும் தரிசிக்கமாட்டான். (உரோ. 12:18.)

Hebrews 12:14

உங்களை அழைத்த பரிசுத்தரைப்போல், நீங்களும் உங்கள் சர்வ நடபடிக்கைகளிலும் பரிசுத்தராயிருங்கள்.
ஏனெனில், நாம் பரிசுத்தராயிருக்கிறபடியால், நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கின்றது. (லேவி. 11:44; 19:2; 20:7.)

1 Peter 1:15-16


அவர் நம்முடைய கிரியைகளைப் பாராமல், தம்முடைய சித்தத்தையும், கிறீஸ்து சேசுவுக்குள் உலகாதிகாலத்துக்குமுன் நமக்கு அளிக்கப்பட்ட வரப்பிரசாதத்தையும் பார்த்து, நம்மை மீட்டிரட்சித்து, தம்முடைய பரிசுத்த அழைப்பால் நம்மை அழைத்திருக்கிறார். (தீத்து. 3:5.)

2 Timothy 1:9


கிறீஸ்து சேசுவினிடத்தில் உண்டாயிருந்த சிந்தைகளே உங்களிடத்திலும் உண்டாயிருக்கக்கடவது.

Philippians 2:5

மேலும் அர்ச்சிக்கப்பட்டவர்களுக்கு யோக்கியமானபடி எவ்வித வேசித்தனமும், அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பெயர் முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படக்கூடாது. (கொலோ. 3:5.)

Ephesians 5:3

ஆகையால் எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும், தத்தளிப் பில்லாமலும் நிறைவேற்றிவாருங்கள். (1 இரா. 4:9.)
இத்தன்மையாய்க் கோணலும், மாறுபாடுள்ளதுமான ஜனத்தின் நடுவில் நீங்கள் குற்றமற்றவர்களாகவும், சர்வே சுரனுடைய நேர்மையான பிள்ளைக ளாகவும், மாசற்றவர்களாகவும் இருப் பீர்கள். (மத். 5:16.)
ஏனெனில் நான் வீணாக ஓடினதும், வீணாகப் பிரயாசைப்பட்டதுமில்லையென்கிறதினாலே கிறீஸ்துவின் நாளில் எனக்கு மகிமையுண்டாயிருக்கும்படிக்கு நீங்கள் அவர்கள் நடுவிலே ஜீவ வாக்கியத்தைக் கையிலேந்திக்கொண்டு, உலகத்தில் சுடர்களைப் போல் பிரகாசிக்கிறீர்கள். (1 தெச. 2:19.)

Philippians 2:14-16a

ஆகையால் சகோதரரே, நான் கடவுளின் இரக்கத்தைக் குறித்து உங்களை மன்றாடிக் கேட்கிறதென்னவென்றால், நீங்கள் உங்கள் சரீரங்க ளைப் பரிசுத்தமும், சர்வேசுரனுக்குப் பிரியமுமான உயிருள்ள பலியாக ஒப்புக் கொடுங்கள். இதுவே நீங்கள் செய்யத் தக்க புத்தியுள்ள ஆராதனை. (பிலிப். 4:18.)

Romans 12:1

ஆண்டவரைப் போலப் பரிசுத் தர் இல்லை; உம்மையன்றி வேறொரு வருமில்லை; நமது கடவுளுக்கொத்த வல்லமையுள்ளவருமில்லை.

1 Samuel 2:2

நித்தியத்தில் வாசஞ் செய்யும் பரிசுத்த நாமரான மகா மேன்மை தங்கிய உன்னதக் கடவுள் சொல்வ தேதெனில், தாழ்மையுடையோரின் புத்தியை உற்சாகப்படுத்தவும், பச்சாத்தாபமுடையோரின் இருதயத் தைப் பலப்படுத்தவும், நாம் உன்னத ஸ்தலத்திலே பரிசுத்த பர்வதத்திலே துயரமுந் தாழ்மையுமுள்ள இருதய ரோடு வசிக்கிறோம்.

Isaiah 57:15

அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்துக்கு ஒவ் வாத பிரிவினைகளையும், இடறல்களையும் உண்டாக்குகிறவர்கள்மேல் கண்ணாயிருந்து, நீங்கள் அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களை மன்றாடுகிறேன். (2 தெச. 3:14; 2 அரு. 10.)

Romans 16:17

அதனால் அநேக சாதிகளின் கண்களுக்கு முன்பாக நமது மகிமை யும், நமது பரிசுத்ததனமும் விளங் கும்; நமக்குக் கீர்த்தியுண்டாகும்; அப்பொழுது நாம் கர்த்தரென்று அறிந்துகொள்வார்கள்.

Ezekiel 38:23

என் ஆத்துமாவே! ஆண்ட வரை வாழ்த்துவாயாக; என் தேவனா கிய ஆண்டவரே! சொல்லுக்கு எட்டாவண்ணம் உம்முடைய மகத் துவத்தை விளக்கினீர்.

Psalms 103:1

கர்த்தராகிய நாம் பரிசுத்த ராகையாலும், நீங்கள் நமக்கேற்ற பரிசுத்தவான்களாயிருக்க வேண்டும். நீங்கள் நமது சொந்த சனமாயிருக்கும் படியல்லோ உங்களை மற்றுமுள்ள சனங்களை விட்டுப் பிரித்தெடுத் தோம் (1 இரா. 1:16)..

Leviticus 20:26

புறச் சாதிகளின் நடுவே எமது சிறந்த நாமத்தின் பரிசுத்ததனம் பங்கப்பட்டுப் போயிற்றே; அவர்கள் மத்தியில் நீங்கள் அதனை ஈனப்படுத்தி னீர்களே; நாம் உங்கள் நடுவில் அர்ச் சிக்கப்பட்டிருக்கிறோமென்று புறச் சாதிகள் கண்டபின்னாலல்லோ அவர்கள் எம்மைக் கர்த்தரென்று அறிவார்களென்கிறார் சேனைகளின் ஆண்டவர்.

Ezekiel 36:23

நீங்கள் பாக்கியவான்களாய் வாழும்படி தின்மையையல்ல, நன்மை யைத் தேடுங்கள்; அப்போது சேனை களின் நாயகரான ஆண்டவர் நீங்கள் சாதிப்பதுபோல் உங்களோடிருப்பார்.

Amos 5:14

பரிசுத்தவான்களை விழுங்கு வதும், தன் பொருத்தனைகளை மக்க ளிக்கிறதும் மனிதனுக்கு நாசமேயாம்.

Proverbs 20:25

ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினால் மூடவும் மாட்டான், கட்டிலின்கீழே வைக்கவும் மாட்டான்; ஆனால் உள்ளே வருகிறவர்கள் வெளிச்சத்தைக் காணும்படி, அதை ஒரு விளக்குத்தண்டின் மேல் வைப்பான். (மத். 5:15.)

Luke 8:16

இப்பொழுதோவெனில், பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டுச் சர்வேசுரனுக்கு அடிமைகளானதினாலே, உங்களுக்குப் பலனாகப் பரிசுத்ததனமும், முடிவாக நித்திய சீவியமும் கிடைக்கின்றது.

Romans 6:22

ஆகையால் பரமண்டலங்களிலேயிருக்கிற உங்கள் பிதா உத்தமராயிருக்கிறதுபோல நீங்களும் உத்தமராயிருங்கள்.

Matthew 5:48

வீணிலே என்னைப் பகைக் கிறவர்கள் என் தலைமயிர்களிலும் மிகுந்து போனார்கள்; அநியாயமாய் என்னை உபாதிக்கிற என் சத்துருக் கள் கெம்பீரங்கொண்டு திரிகிறார் கள்; நான் பறிக்காததை கொடுக்க லானேன்.
தேவனே! என் புத்தியீனத்தை அறிவீர்; என்னுடைய பாவங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.

Psalms 68:4-5

தேவ பயமே ஞானத்தின் துவக்கம்; பரிசுத்தர்களின் சாஸ்திர மாம் விமரிசை.

Proverbs 9:10


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |