Topic : Holiness

ஆகையால் அன்புக்குரியவர்களே, இத்தகைய வாக்குறுதிகளைப் பெற்றிருக்கும் நாம் உடலிலும் உள்ளத்திலும் எவ்வித மாசுமின்றி நம்மைத் தூயவர்களாக்கிக்கொள்வோமாக, கடவுளுக்கு அஞ்சிப் பரிசுத்தத்தின் முழுமையை அடைவோமாக.

2 Corinthians 7:1

எல்லாருடனும் சமாதானமாயிருக்க முயலுங்கள்; பரிசுத்தத்தை நாடுங்கள். பரிசுத்தம் இல்லாமல் ஆண்டவரை ஒருவனும் காணமாட்டான்.

Hebrews 12:14

அப்படி நடவாமல், உங்களை அழைத்த இறைவன் பரிசுத்தராய் இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தையில் முற்றும் பரிசுத்தராய் இருங்கள்.
ஏனெனில், ' யாம் பரிசுத்தர், ஆகவே நீங்களும் பரிசுத்தராய் இருங்கள் ' என எழுதப் பட்டிருக்கிறது.

1 Peter 1:15-16

இளைஞன் தான் செல்லும் வழியில் புனிதனாய் எங்ஙனம் நடக்க இயலும்? உம் வார்த்தையைக் கடைப்பிடிப்பதால் தான்.

Psalms 119:9

கடவுள் நம்மை மீட்டு நமக்குப் பரிசுத்த அழைப்பை அளித்துள்ளார். நம்முடைய செயல்களை முன்னிட்டு அவ்வாறு செய்யவில்லை; தாமே வகுத்த திட்டத்திற்கும் தமது அருளுக்கும் ஏற்பவே அவ்வாறு செய்தார். இவ்வருள் எல்லாக் காலங்களுக்கு முன்னரே கிறிஸ்து இயேசுவில் நமக்குக் கொடுக்கப்பட்டது;

2 Timothy 1:9

இறைவா, நீர் என் உள்ளத்தைப் பரிசோதித்து அறியும்: உள் உணர்வுகளை அறிந்தவராய் என்னைச் சோதித்துப் பாரும்.
தீய வழியில் நான் செல்கின்றேனோ என்று பாரும்: முன்னோர் காட்டிய வழியில் என்னை நடத்தியருளும்.

Psalms 139:23-24

கிறிஸ்து இயேசுவில் இருந்த மனநிலையே உங்களிலும் இருப்பதாக.

Philippians 2:5

கெட்ட நடத்தை. அசுத்தம், பொருளாசை முதலியவற்றின் பெயர் முதலாய் உங்களிடையே சொல்லப்படலாகாது. இதுவே இறைமக்களுக்கு ஏற்ற நடத்தை.

Ephesians 5:3

செய்வதெல்லாம் முணுமுணுக்காமல் வாதாடாமல் செய்யுங்கள்.
அப்பொழுதுதான் நெறிகெட்ட, சீரழிந்த தலைமுறையினரிடையே குற்றமின்றி மாசற்றவர்களாய்க் கடவுளின் குழந்தைகளெனத் திகழ்வீர்கள்; வாழ்வைப் பற்றிய வார்த்தைகளை வழங்க ஏந்தி நின்று, உலகில் சுடர்விடும் விண்மீன்கள் எனத் துலங்குவீர்கள்.
வீணாக நான் ஓடவில்லை, வெறுமனே நான் உழைக்கவில்லை என்பதற்கு நீங்கள் சான்றாய் நின்று, கிறிஸ்துவின் நாளில் நான் பெருமையடையச் செய்வீர்கள்.

Philippians 2:14-16a

சகோதரர்களே! கடவுளுடைய இரக்கத்தை முன்னிட்டு உங்களை வேண்டுகிறேன்: உங்கள் உடலைக் கடவுளுக்கு உகந்த பரிசுத்த பலியாகவும், உயிருள்ள பலியாகவும் ஒப்புக் கொடுங்கள்.

Romans 12:1

ஆண்டவரைப்போல தூயவர் இல்லை; உம்மையன்றி வேறு ஒருவரும் இல்லை; நம் கடவுளுக்கு இணையான வல்லமை உள்ளவரும் இல்லை;

1 Samuel 2:2

காலந்கடந்திருப்பவரும், மேன்மை தங்கிய உன்னதரும், பரிசுத்தர் என்னும் பெயரினருமானவர் கூறுகிறார்: "உயர்ந்ததும், பரிசுத்தமுமான இடமே நம் உறைவிடம்; ஆனால் பாவத்திற்காக வருந்தும் தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினரோடும் நாம் குடிகொண்டிருக்கிறோம்; தாழ்மையுள்ளோரின் இதயத்தை ஊக்குவிக்கவும், மனஸ்தாபமுள்ளோரின் இதயத்தைத் திடப்படுத்தவுமே அவர்களோடு குடிகொண்டிருக்கிறோம்.

Isaiah 57:15

சகோதரர்களே, நான் உங்களை வேண்டுவது: நீங்கள் கற்றுக்கொண்ட போதனையை மீறி, பிளவுகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர் மேல் கண்ணாயிருங்கள்.

Romans 16:17

இவ்வாறு புறவினத்தார் அனைவர் முன்னிலையிலும் நமது மகிமையையும் பரிசுத்தத்தையும் வெளிப்படுத்தி நம்மைக் காண்பிப்போம்; அப்போது நாமே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிவார்கள்.

Ezekiel 38:23

நெஞ்சே, நீ ஆண்டவரை வாழ்த்துவாயாக: என் அகத்துள்ளதெல்லாம் அவரது திருப்பெயரை வாழ்த்துவதாக!

Psalms 103:1

ஆண்டவராகிய நாம் பரிசுத்தராகையால், நீங்கள் நமக்கேற்ற பரிசுத்தவான்களாய் இருக்க வேண்டும். நீங்கள் நமது சொந்த மக்களாய் இருக்கும்படியே உங்களை மற்ற மக்களிடமிருந்து பிரித்தெடுத்தோம்.

Leviticus 20:26

புறவினத்தாரின் நடுவில் நமது திருப்பெயரின் பரிசுத்தத்தை நீங்கள் பங்கப்படுத்தினீர்கள்; பங்கப்படுத்தப்பட்ட மகத்தான நமது திருப்பெயரை நாம் பரிசுத்தமாக்குவோம்; இவ்வாறு நாம் உங்கள் வழியாய் அவர்கள் கண் முன் நமது பரிசுத்தத்தை நிலைநாட்டும் போது, நாமே ஆண்டவர் என்பதைப் புறவினத்தார் அறிந்து கொள்வார்கள், என்கிறார் ஆண்டவர்.

Ezekiel 36:23

தீமையைத் தேடாதீர்கள்; நன்மையையே நாடுங்கள்; அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள்; அப்பொழுது நீங்கள் சொல்வது போலவே, சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடிருப்பார்.

Amos 5:14

பரிசுத்தவான்களை விழுங்குவதும், தன் நேர்ச்சைகளைத் தட்டிக்கழிப்பதும் மனிதனுக்கு அழிவையே தரும்.

Proverbs 20:25

எவனும் விளக்கை ஏற்றிப் பாத்திரத்தால் மூடுவதில்லை; கட்டிலின் கீழ் வைப்பதுமில்லை. உள்ளே வருபவர் ஒளியைக் காணும்படி அதை விளக்குத் தண்டின் மீது வைப்பான்.

Luke 8:16

ஆனால், 'இப்பொழுது பாவத்தினின்று விடுதலைபெற்றுக் கடவுளின் அடிமைகள் ஆனீர்கள்; இதனால் உங்களுக்குக் கிடைத்துள்ள பலன் நீங்கள் பரிசுத்தர்கள் ஆவதே; அதன் முடிவு முடிவில்லா வாழ்வு.

Romans 6:22

ஆதலால், உங்கள் வானகத்தந்தை நிறைவுள்ளவராய் இருப்பதுபோல, நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.

Matthew 5:48

இறைவனுக்கு இன்னிசை பாடுங்கள், அவரது பெயருக்குப் புகழ் பாடுங்கள்: பாலைவெளியின் வழியாய்ப் பவனி செல்லும் அவருக்குப் பாதையை ஆயத்தப் படுத்துங்கள். ஆண்டவர் என்பது அவரது திருப்பெயர்: அவர் முன்னிலையில் அக்களிப்புறுங்கள்.
தம் புனித இல்லத்தில் உறையும் இறைவன் அநாதைகளுக்குத் தந்தை: விதவைகளுக்குப் பாதுகாவல்.

Psalms 68:4-5

தெய்வ பயமே ஞானத்தின் தொடக்கம். விவேகமே தூயவர்களின் அறிவாம்.

Proverbs 9:10


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |