Topic : Food

மோவாப்பு எனது நம்பிக்கை யின் பாத்திரமாயிருக்கின்றது; இதுமேயில் நான் பிரவேசித்து அதை என் காலின் கீழாக்குவேன்; அன்னிய சனங்கள் எனக்குச் சிநேகிதரானார் கள்.

Psalms 107:9

சேசுநாதர் அவர்களை நோக்கித் திருவுளம்பற்றினதாவது: ஜீவியத்தின் அப்பம் நானே: என்னிடத்தில் வருகிற வன் பசியடையான்; என்னை விசுவசிக் கிறவனும் ஒருக்காலும் தாகமடையான். (சர்வப். 24:29; அரு. 4:14; 6:41, 48, 51.)

John 6:35

புசிக்கிறவன் புசியாதிருப்பவ னைப் புறக்கணியாதிருப்பானாக. புசியாதிருப்பவனும் புசிக்கிறவனைத் தீர்வையிடாதிருப்பானாக. ஏனெனில் சர்வேசுரன் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

Romans 14:3

நன்மையை ஆசிக்கிற ஆன்மா பூரணமடையும்; (மற்றவர்களைப்) பூரிக்கச்செய்கிறவன் தானும் பூரிக்கப் படுவான்.

Proverbs 11:25

அவர் ஐந்து அப்பங்களையும், இரண்டு மச்சங்களையும் கையிலே வாங்கி பரலோகத்தை அண்ணார்ந்து, பார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு ஜனங்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்தார்.
எல்லாருஞ் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். அவர்களுக்கு மீதியான துண்டுகள் பன்னிரண்டு கூடைகள் எடுக்கப்பட்டன.

Luke 9:16-17

ஏனெனில், உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை; இங் கிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோக வுங் கூடாது என்பதற்குச் சந்தேக மில்லை. (யோப். 1:21; சங்கப். 5:14.)
ஆகையால் அன்னமும் ஆடையும் இருந்தால், இதுவே நமக்குப் போதுமென்று இருக்கக்கடவோம். (பழ. 27:26, 27.)

1 Timothy 6:7-8

பின்னையுங் கடவுள்: இதோ பூமியில் விதை தரும் சகலமான புற் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதி யின்படி தங்கள் தங்களில் விதை கொண்டிருக்கின்ற நானாவித மரங் களையும் உங்கட்கு உணவாயிருக்கும் படி அளித்தோம். (ஆதி. 9:3.)

Genesis 1:29

சலங்களில் சீவிக்கிறதெல்லா வற்றிலும் எவைகளைப் புசிக்கலா மெனில்: சிறகும் செதிளும் உள்ள வைகளை நீங்கள் புசிக்கலாம் (யாத்.23:11; லேவி.25:2).
சிறகுகளும் செதிள்களுமில் லாதவைகளோ அசுத்தமானவை களாகையால் அவற்றைப் புசிக்க லாகாது.

Deuteronomy 14:9-10

ஆகையால் நீங்கள் சாப்பிட்டாலும், குடித்தாலும், வேறென்னத்தைச் செய்தாலும், எல்லாவற்றையும் சர்வேசுரனுடைய தோத்திரத்துக்காகச் செய்யுங்கள். (கொலோ. 3:17.)

1 Corinthians 10:31

ஆதலால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: உங்கள் உயிர் பிழைக்க எதை உண்போமென்றும், உங்கள் உடலை மூட எதை உடுத்திக் கொள்வோமென்றும் ஏக்கமாயிராதேயுங்கள். உணவைவிட உயிரும் உடையைவிட உடலும் மேன்மையானதல்லவோ ? (லூக். 12:22-31; பிலிப். 4:6; 1 தீமோ . 6:7; 1 இரா . 5:7: சங். 54:23, 24.)

Matthew 6:25

உயிரையும் அசைவையு முடைய யாவும் உங்களுக்கு ஆகார மாயிருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல அவை யெல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தோம் (ஆதி.1:29).
ஆயினும் மாமிசத்தை அதன் இரத்தத்தோடு உண்ணாதிருப்பீர் களாக (லேவி.17:14; அப். நட. 15:29).

Genesis 9:3-4

அதற்கு அவர் மாறுத்தாரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, சர்வேசுரனுடைய வாயினின்று புறப்படுகிற எந்த வாக்கியத்தினாலும் பிழைக்கிறானென்று எழுதப்பட்டிருக்கிறது என்றார். (உபாக. 8:3. லூக். 4:4.)

Matthew 4:4

இதோ, நான் வாசற்படியிலே நின்று தட்டுகிறேன். எவனாவது என் குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து அவனோடு போஜனம்பண்ணுவேன். என்னோடு அவனும் போஜனம் பண்ணுவான்.

Revelation 3:20

அல்லாமலும் அவர்கள் ஒரே மனதாய் அநுதினமும் தேவாலயத்தில் நிலைத்து வீடுவீடாய், அப்பமும்பகிர்ந்து, ஆனந்த அக்களிப்போடும், கபடில்லாத இருதயத்தோடும் போசனம் பண்ணி,
சர்வேசுரனை ஸ்துதித்து, சகல ஜனங்களுக்கும் பிரியமுள்ளவர்களாயிருப்பார்கள். ஆண்டவரோவெனில் இரட்சிக்கப்படத்தக்கவர்களை அநுதினமும் அந்தச் சபையில் அதிகரிக்கப் பண்ணிவருவார். *** 46-47. அப்பொழுது புதுக்கிறீஸ்துவர்களுக்குச் சொந்தமான கோவில்களில்லாமையாலும், யூதருடைய விரோதத்தைப்பற்றியும் திருச்சபையிலுட்பட்டவர்கள் திவ்விய பூசை காணவும், தேவநற்கருணை வாங்கவும் ஏகமாய் ஓரிடத்தில் கூடிவரக் கூடாதிருந்ததைப்பற்றி, அங்கங்கே வெவ்வேறு வீடுகளில் கூடி, அந்த ஞானக்கிருத்தியங்களையும் நிறைவேற்றி அந்நியோந்நிய சிநேகத்தின் அடையாளமாகப் பொதுவில் விருந்து உண்பார்களென்பதே கருத்து.

Acts 2:46-47

மீளவும் அவர் அவர்களைப் பார்த்து நீங்கள் போய்க் கொழுத் தவைகளை உண்டு தேன் கலந்த ரசத்தைக் குடித்துத் தங்களுக்குச் சாப்பாடு முஸ்திப்புப் பண்ணாதவர் களுக்கும் பங்குகளை அனுப்புங்கள்; ஏனென்றால் (இது) கர்த்தருடைய பரிசுத்த நாளாயிருக்கிறது. கர்த்த ருக்குள் மகிழ்ச்சியாயிருக்கிறதே உங்களுடைய வல்லமையாகையி னால் நீங்கள் விசாரத்துக்கு இடங் கொடுக்க வேண்டாம் என்றார்.

Nehemiah 8:10

அழிந்துபோகிற போஜனத்துக் காக அல்ல, நித்திய ஜீவியத்திற்காக நிலை நிற்கிற போஜனத்துக்காகவே பிரயாசப் படுங்கள்; மனுமகன் அதை உங்களுக்குத் தந்தருள்வார். ஏனெனில் பிதாவாகிய சர் வேசுரன் அவரையே முத்திரித்திருக்கி றார் என்றார். (மத். 3:17; 17:5; அரு. 1:32.) * 27. இராஜாவினால் அனுப்பப்பட்ட ஸ்தானாபதியினாலும், யாதோர் கற்பனை கட்டளையினாலும் இராஜமுத்திரையால் நிச்சயிக்கப்படுவதுபோல, சேசுநாதர் தாம் பிதாவாகிய சர்வேசுரனால் அனுப்பப்பட்டவரென்று தேவமுத்திரையாகிய தெய்வீகவல்லமை அற்புதங்களைக்கொண்டு தம்மை உலகத்துக்கு நிச்சயப்படுத்துகிறார் என்றறியவும்.

John 6:27

ஆகையால் விதைக்கிறவனுக்கு விதையைக் கொடுக்கிறவர் உங்களுக்குப் புசிப்பதற்கு அப்பத்தையுங் கொடுத்து, உங்கள் விதையையும் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் பலன்களையும் வர்த்திக்கப்பண்ணுவார்.

2 Corinthians 9:10

ஆதலால் போஜனபானத்தைப் பற்றியாவது, பண்டிகைநாள், அமாவாசை, ஓய்வுநாள் இவைகளைப்பற்றியாவது ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. (உரோ. 14:3-5.)
இவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருந்தன: இவைகளுக்கு உடலோ கிறீஸ்துநாதராமே.

Colossians 2:16-17

நல்ல வார்த்தைகள் தேனைப் போல (இன்பமாயிருக்கும்) திரேகத் தின் சுகமும் ஆன்மாவின் மதுரமா யிருக்கும்.

Proverbs 16:24

அந்த மூன்று வாரங்கள் முடியு மட்டும் இன்பமான அப்பத்தை நான் புசிக்கவில்லை; இறைச்சியும், திராட்சை இரசமும் என் வாய்க்குள் போகவில்லை; அதுவுமல்லாமல் பரிமள தைலம் முதலாய் நான் பூசிக் கொள்ளவில்லை.

Daniel 10:3

இப்போதே பிறந்த பிள்ளைகளைப் போல், கலப்பில்லாத ஞானப்பாலை உண்டு இரட்சணியத்துக்காக வளரும்படி அதன் மேல் விருப்பமாயிருங்கள். *** 2. ஞானப்பால் என்பது ஞான உபதேசமென்று அர்த்தமாம். பிறந்த குழந்தை வளர்ந்து பலப்படுவதற்குப் பால் ஆதாரமாவதுபோல, ஞானஸ்நானத்தினால் மறுபிறப்படைந்தவர்கள் இரட்சணியத்துக்காக வளர்ந்து பலப்படுவதற்கு ஞான உபதேசமாகிய ஞானப்பாலை ஆவலோடு தேடிச் சாப்பிடவேண்டியது.

1 Peter 2:2

பத்தில் பாகங்களெல்லாம் (நமது) களஞ்சியஞ் சேருங்கள்; அது நமது வீட்டில் (நம்மூழியருக்குப்) போஷணையாயிருக்கட்டும்; அதற் குப்பின் யாம் உங்களுக்கு வானக மழைத் தாரைகளைத் திறந்து விடா மல் போகின்றோமா? (எல்லா நன்மைகளிலும்) சம்பூரணம் வரை யாக நமது நல்லாசியை உங்கள்மீது சொரியாதிருக்கின்றோமா என நம் மைப் பரீட்சியுங்கள் என்கிறார் ஆண்டவர்.

Malachi 3:10

நீதியின்மேல் பசிதாகமுள்ளவர் கள் பாக்கியவான்கள்: ஏனெனில் அவர்கள் திருப்தியடைவார்கள். (லூக். 6:21.) * 6. நீதி:- நீதியென்றால் புண்ணிய சாங்கோபாங்க நெறியாகும்; வேதாகமத்தில் நீதி என்னும் இச்சொல் இந்த அர்த்தத்திலே பல இடங்களில் வழங்குகிறது.

Matthew 5:6

(உள்ளபடி) அவர் உன்னைப் பசியினால் வருத்தினார். பின்பு நீயும் உன் பிதாக்களும் அறிந்திராத உண வாகிய மானூவை உனக்கு அளித் தார். அதினால் மனிதனானவன் அப்பத் தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயினின்று புறப்படுகிற ஒவ்வொரு வாக்கியத்தினாலும் பிழைப்பா னென்று உனக்குக் காண்பித்தருளி னார் (மத்.4:4; லூக்.4:4).

Deuteronomy 8:3

ஆகையால் சர்வேசுரனுடைய இராச்சியத்தையும் அவருடைய நீதியையும் முந்தபந்தத் தேடுங்கள். அப்போது இவைகள் எல்லாம் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்.

Matthew 6:33


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |