Topic : Encouragement

ஆண்டவர்மேல் நம்பிக்கை வைத்தவரோ எப்போதும் புது பலம் பூண்டவராய்ச் சிறகுகள்கொண்டு கழுகுகளைப்போல் பறந்தோடுவர், ஆயினுங் களைக்கமாட்டார்; நடந்து போவர்; பலங்குன்றவுமாட்டாராமே.

Isaiah 40:31

ஆனதால், நீங்கள் இப்போது செய்துவருகிறபடியே ஒருவரொருவரைத் தேற்றி, ஒருவரொருவருக்கு நன்மாதிரியாயிருங்கள்.

1 Thessalonians 5:11

நீ சலங்களைக் கடக்கையில் நாம் உன்னோடிருப்போம்; நதி களும் உன்னை அமிழ்த்தவறியாது, தீயில் உலாவினும் எரிந்துபோக மாட்டாய், அக்கினியும் உன் முன் தணலற்று நிற்கும்.

Isaiah 43:2

பலங்கொண்டு திடமனதா யிருவென்று இதோ நாம் உனக்குக் கற்பிக்கிறோம். திகைக்கவும் மதி கலங்கவும் வேண்டாம். ஏனென் றால் நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடு இருப்பார் என்றருளினார்.

Joshua 1:9

உங்களை நடத்துபவராகிய கர்த்தரே உன்னோடு இருப்பா ரல்லாதே அவர் உன்னை விடவும், கை நழுவவும் மாட்டாராகையால் நீ அஞ்சவும் கலங்கவும் வேண்டாம் என்றான்.

Deuteronomy 31:8

வருந்திச் சுமை சுமந்திருக்கிற வர்களாகிய நீங்களெல்லோரும் என் அண்டையில் வாருங்கள், நான் உங்க ளைத் தேற்றுவேன்.

Matthew 11:28

சர்வேசுரனும் நமது ஆண்டவராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய பிதாவும், இரக்கங்களின் தகப்பனும், சர்வ ஆறுதலின் தெய்வமுமாயிருக்கிறவர் ஸ்துதிக்கப்படுவாராக. (எபே.1:3; 1 இரா. 1:3.)
நாங்களே சர்வேசுரனிடத்தில் பெற்றுக்கொள்ளுகிற ஆறுதலைக்கொண்டு எவ்வித இடையூறுகளிலும் அகப்பட்டிருக்கிறவர்களுக்கு நாங்களும் ஆறுதல் வருவிக்கத் திராணியுள்ளவர்களாயிருக்கும்படிக்கு எங்களுக்கு நேரிடும் எல்லாத் துன்பங்களிலும் அவரே எங்களைத் தேற்றிவருகிறார்.

2 Corinthians 1:3-4

ஆகையால் நமக்குப் பிரியமான சகோதரரே, ஆண்டவரிடத்தில் நீங்கள் படுகிற பிரயாசம் வீணாய்ப் போகிறதில்லையென்று அறிந்து, நிலை மையுள்ளவர்களாயும், அசையாத வர்களாயும், இடைவிடாமல் ஆண்ட வருக்குரிய கிரியைகளை மிகுதியாய்ச் செய்பவர்களாயும் இருப்பீர்களாக.

1 Corinthians 15:58

ஆண்டவருடைய வீட்டுக்குப் போவோமென்று எனக்குச் சொல்லப் பட்டதுகளைப் பற்றிச் சந்தோஷப் பட்டேன்.
எருசலேம் நகரே! எங்கள் பாதங் கள் உன் ஒலிமுக வாசல்களில் நிலை நின்றன.

Psalms 121:1-2

பரம அன்புக்கும் நற்கிரியைகளுக் கும் நமக்குத் தூண்டுதலுண்டாகும் படி ஒருவரை ஒருவர் கவனிப்போமாக.
சிலருக்குத் துர்வழக்கமாய் இருக் கிறதுபோல நாம் சபைக்கூட்டத்தை விட்டுவிடாமல் ஒருவரை ஒருவர் தேற்று வோமாக. அந்த மகாநாள் எவ்வளவுக்கு நெருங்கக் காண்பீர்களோ அவ்வளவுக்கு அதிகமாய் இவ்விதஞ் செய்யுங்கள்.

Hebrews 10:24-25


பூமி முழுவதுங் கர்த்தருக்குப் பயப்படுவதாக! உலக வாசிகளெல் லாரும் அவருக்கஞ்சி நடுங்கக்கட வார்கள்.

Psalms 32:8

நமது கண்களுக்கு நீ கனமுற்ற தாயும், விலையேறப்பெற்றதாயும் ஆனது தொட்டு உன்னை விசேஷ விதமாய் நேசித்தோம்; உனக்காக மனிதரை (பிறர்) கையளிப்போம், உன் சீவனுக்காகச் சனங்களைப் போக்கடிப்போம்.

Isaiah 43:4

என்மட்டில் நீங்கள் சமாதானத்தைக் கொண்டிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். இவ்வுலகத்தில் உங்களுக்கு நெருக்கிடை உண்டாகும்; ஆயினும் திடமாயிருங்கள். நான் உலகத்தை ஜெயித்தேன் என்று திருவுளம்பற்றினார். (அரு. 14:27.)

John 16:33

விழிப்பாயிருங்கள்; விசுவாசத் திலே நிலைமையாயிருங்கள்; வீரராய் நடந்துகொள்ளுங்கள், திடமாயிருங்கள்.

1 Corinthians 16:13

வீணில் தன் ஆத்துமாவை உபயோகப்படுத்தாமலும், தன் புறத் தியானுக்குக் கபடாய் ஆணை யிடாமலுங் கரங்களில் மாசற்றவனும் இருதயத்தில் பரிசுத்தமுள்ளவனுமாயிருப்பவன்தான்.

Psalms 23:4

எவ்வகைத் தொழிலிலுஞ் சம்பத்துண்டு; மிகு பேச்சு எங்கேயோ அங்கே அடிக்கடி எளிமையாம்.

Proverbs 14:23

ஏனெனில் இம்மையில் இலகுவாயும் ஒரு நொடிப்பொழுதுக்குமாத் திரமிருக்கிற நமது துன்பமானது நித்திய கனத்தையுடைய மகிமைப்பிரதாப மகத்துவத்தை அளவின்றிப் பெறுவிக்கும். (உரோ. 8:18.)

2 Corinthians 4:17

சமாதானத்தை உங்களுக்கு வைத் துவிட்டுப் போகிறேன்; என் சமாதானத் தை உங்களுக்குத் தருகிறேன். உலகம் கொடுக்கிறதைப்போல நான் (அதைக்) கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும், அஞ்சாமலும் இருப்பதாக.

John 14:27

பொறுமையையும், ஆறுதலையும் தந்தருளுகிற சர்வேசுரன் சேசுக்கிறீஸ்து நாதருக்கு ஒத்தவண்ணம் நீங்கள் ஒரு வருக்கொருவர் ஏக சிந்தையுள்ளவர்க ளாகும்படி உங்களுக்குக் (கிருபை) செய்வாராக. (1 கொரி. 1:10.)

Romans 15:5

இவைகளைப்பற்றி நாம் என்ன சொல்லுவோம்? சர்வேசுரன் நம்முடைய பாரிசமாயிருந்தால் நமக்கு விரோதமா யிருப்பவன் யார்?

Romans 8:31


உங்களில் ஒவ்வொருவனும் நல் விருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி பிறனுக்குப் பிரியமாக நடக்கக்கடவான்.

Romans 15:2

இரண்டு காசுக்கு ஐந்து அடைக்க லங்குருவிகள் விற்கிறதல்லவோ? ஆயி னும் அவைகளில் ஒன்றானாலும் சர்வேசுரனுடைய சமுகத்தில் மறக்கப்படுவதில்லை.
உங்கள் தலை உரோமங்களெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றன; ஆகை யால் நீங்கள் அஞ்சவேண்டாம்; அநேகம் அடைக்கலங்குருவிகளைவிட நீங்கள் அதிகவிலையுள்ளவர்களாயிருக்கி றீர்கள். (லூக். 21:18)

Luke 12:6-7

கொடுக்கும்படி ஒருவனுக்கு நல்ல மனமிருந்தால், அவன் சக்திக்கு மிஞ்சினதல்ல, அவன் சக்திக்குத் தக்கது (கொடுப்பது) அங்கீகரிக்கப்படும்.

2 Corinthians 8:12


All Topics
| Acknowledging | Addiction | Almighty | Angels | Anger | Ascension | Awe | Baptism | Beauty | Blameless | Blessing | Calling | Children | Christmas | Comforter | Community | Compassion | Confession | Contentment | Conversion | Courage | Covenant | Creation | Death | Debt | Dependence | Desires | Easter | Encouragement | Equipment | Eternal life | Evangelism | Evil | Faith | Family | Fasting | Father | Fear | Following | Food | Forgiveness | Freedom | Friendship | Generosity | Gentleness | Giving | God | Goodness | Gossip | Gratitude | Greed | Healing | Health | Heart | Heaven | Holiness | Holy Spirit | Honesty | Hope | Humility | Idols | Jesus | Joy | Judgement | Kingdom | Law | Learning | Life | Listening | Love | Marriage | Materialism | Mediator | Mercy | Messiah | Mind | Miracles | Money | Nearness | Neighbor | Obedience | Overcoming | Patience | Peace | Pentecost | Persecution | Planning | Prayer | Pride | Prophecy | Protection | Punishment | Purification | Rebirth | Receiving | Redeemer | Relationships | Reliability | Repentance | Rest | Resurrection | Reward | Righteousness | Sabbath | Sacrifice | Sadness | Safety | Salvation | Savior | Second coming | Seeking | Self-control | Selfishness | Serving | Sickness | Sin | Slavery | Soul | Speaking | Spirit | Strength | Suffering | Temptation | Thoughts | Transformation | Trust | Truth | Understanding | Valuable | Weakness | Widows | Wisdom | Word of God | Work | World | Worrying | Worship |