ஆனால் ஆண்டவர் மேல் நம்பிக்கை வைப்பவர்கள், புதிய வலிமையைப் பெற்றுக்கொள்வர்; கழுகுகளைப் போல் இறக்கைகள் பெற்றுப் பறந்திடுவர், ஓடுவார்கள், ஆனால் களைக்கமாட்டார்கள்; நடப்பார்கள், ஆனால் சோர்வடைய மாட்டார்கள்.
நீ கடலைக் கடந்து செல்லும் போது நாம் உன்னோடிருப்போம்; ஆறுகளும் உன்னை மூழ்கடிக்கமாட்டா; தீ நடுவே நீ நடந்து போனாலும் எரிந்து போக மாட்டாய்; நெருப்பும் உன் முன் தணலற்று நிற்கும்.
உறுதியும் மனத்திடனும் கொண்டிரு என்று இதோ நாம் உனக்குக் கட்டளையிடுகிறோம். திகைக்கவோ மதிகலங்கவோ வேண்டாம். ஏனென்றால், நீ போகும் இடமெல்லாம் உன் ஆண்டவாகிய கடவுள் உன்னோடு இருப்பார்" என்றருளினார்.
உங்களை நடத்துபவராகிய ஆண்டவர் உன்னோடு இருப்பாரல்லது, அவர் உன்னை விட்டு நீங்கவும் உன்னைக் கைநழுவ விடவும் மாட்டாராகையால், நீ அஞ்சவும் கலங்கவும் வேண்டாம் என்றார்.
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் தந்தையும் கடவுளுமானவர் போற்றப்பெறுவாராக! அவர் இரக்கம் நிறைந்த தந்தை, ஆறுதல் அனைத்துக்கும் ஊற்றான கடவுள். அவரே எங்களுக்கு எல்லாவகை வேதனையிலும் ஆறுதல் அளித்து வருகிறார். இவ்வாறு கடவுளிடமிருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட ஆறுதலால், நாங்களும் எத்தகைய வேதனையுறுவோர்க்கும் ஆறுதலளிக்க முடிகிறது.
ஆகையால், என் அன்பார்ந்த சகோதரர்களே, உறுதியாய் இருங்கள், நிலை பெயராதீர்கள். உங்கள் உழைப்பு ஆண்டவருக்குள் வீணாவதில்லை என்பதை அறிந்து, ஆண்டவரின் வேலையைச் செய்வதில் சிறந்து விளங்குங்கள்.
நமக்கு வாக்களித்தவர் உண்மையுள்ளவர். அன்பு செய்யவும் நற்பணிகள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. சிலர் வழக்கமாக நம் கூட்டங்களுக்கு வருவதில்லை. அதைப்போல் நாமும் செய்யலாகாது. ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக. இறுதி நாள் எவ்வளவுக்கு அருகிலிருப்பதாகக் காணப்படுகிறதோ அவ்வளவுக்கு உற்சாகமாக ஊக்கமூட்டுங்கள்.
நமது கண்ணுக்கு நீ விலையேறப் பெற்றவன், மதிப்புக்குரியவன், உன் மேல் மிகுந்த அன்பு கொண்டோம்; ஆதலால் தான் உனக்காக மனிதரைக் கையளிப்போம், உன் உயிருக்காக மக்களை மாற்றிக் கொள்வோம்.
என்னில் நீங்கள் சமாதானத்தைக் கண்டடையும்படி இதையெல்லாம் நான் உங்களுக்குச் சொன்னேன். உலகில் உங்களுக்கு வேதனை உண்டு; ஆயினும் தைரியமாயிருங்கள்: நான் உலகை வென்றுவிட்டேன்" என்றார்.
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், தீமையானதெதற்கும் அஞ்சேன்: ஏனெனில், நீர் என்னோடு இருக்கின்றீர்; உமது கோலும் கைத்தடியும் எனக்கு ஆறுதலாய் உள்ளன.
சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன்; நான் உங்களுக்கு அளிக்கும் சமாதனமோ உலகம் தரும் சமாதானம்போல் அன்று. உள்ளம் கலங்க வேண்டாம், மருள வேண்டாம்.
இரண்டு காசுக்கு ஐந்து குருவிகள் விற்பதில்லையா? அவற்றில் ஒன்றும் கடவுள் முன்னிலையில் மறக்கப்படுவதில்லையே! 7 ஆம், உங்கள் தலைமயிரெல்லாம் எண்ணப்பட்டுள்ளது. அஞ்சாதீர்கள். ஏனெனில், குருவிகள் பலவற்றிலும் நீங்கள் மேலானவர்கள்.
கொடுப்பதற்கு உள்ளத்தில் ஆர்வம் இருந்தால், தன்னிடம் உள்ளதற்கு ஏற்றபடி எவ்வளவு கொடுத்தாலும் அது இறைவனுக்கு ஏற்புடையதாகும். தன்னிடம் இருப்பதற்கு மேலாக யாரும் கொடுக்கவேண்டியதில்லை .